முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

GOOD MORNING

ரெடிமிக்ஸ் வடைமாவு&கபாலி புர்குலி&கொய்யாப்பழ தவா பஜ்ஜி&ரெடிமிக்ஸ் பஜ்ஜிமாவு&அரைத்த மாவு பஜ்ஜி&வெஜிடபிள் ரிங்க்ஸ்&டபுள் டெக்கர் பஜ்ஜி

 ரெடிமிக்ஸ் வடைமாவு தேவையானவை: உளுந்தம்பருப்பு - 1 கப், அரிசிமாவு - 1/4 கப், பெருங்காயத்தூள், பேக்கிங் பவுடர், மிளகு - தலா 1/4 ஸ்பூன், பச்சைமிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 1/2 ஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப. செய்முறை: தண்ணீரில் உளுந்தை இருமுறைக் கழுவி, நீரை வடித்து, ஒரு துணியில் பரப்பி, காயவைக்கவும். பின்னர், வெறும் கடாயில் போட்டு, சூடு வரும்வரை வறுத்தெடுத்து, மிக்ஸியில் பொடிக்கவும். இதனுடன் உப்பு, பெருங்காயத்தூள், பேக்கிங் பவுடர், அரிசிமாவு சேர்த்து, கலக்கவும். 1 ஸ்பூன் எண்ணெய்யை சூடாக்கி, நறுக்கிய ப.மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, ஈரமில்லாமல் எடுக்கவும். இதையும் அரைத்த மாவில் சேர்த்து, நன்றாகக் கலந்துவிட்டால், 'வடைமாவு' தயார். குறிப்பு: தேவைப்படும்போது, இந்த மாவில் தண்ணீர் ஊற்றிக் கலந்து, வடைகள் செய்யலாம். கபாலி புர்குலி தேவையானவை: பறங்கிப்பூ இதழ்கள் - 10, பாசிப்பருப்பு - 1 கப், சோம்பு, தனியா - தலா 1 ஸ்பூன், பச்சைமிளகாய் - 4, நெய் - 2 ஸ்பூன், புதினா 1 கைப்பிடி, உப்பு, எண்ணெய் - தேவைக்கு. செய்முறை: பாசிப்பருப்பை ஊறவைத்து, நீரை வடித்து, சோம்பு, த...

கீரை உப்புமா & முளைக்கீரை அப்பம் & முருங்கைக்கீரை துவட்டல் & பொன்னாங்கண்ணி கொழுக்கட்டை

 கீரை உப்புமா


தேவையானவை 


கோதுமை ரவை - ஒரு கப், கரிசலாங்கண்ணிக்கீரை, முளைக்கீரை (இரண்டும் பொடியாக நறுக்கியது) - ஒரு கப், தேங்காய்த்துருவல் - 2 டீஸ்பூன், தக்காளி, வெங்காயம், பச்சைமிளகாய் - தலா 1, காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயம் - ஒரு சிட்டிகை, நெய். ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் தேவையான அளவு.


செய்முறை:


வாணலியில் நெய் விட்டு ரவையை வறுத்துக் கொள்ளவும். அதே வாணலி யில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், நறுக்கிய பச்சைமிளகாய் போட்டு தாளிக் கவும். அதனுடன் நறுக்கிய வெங்காயம், கீரை, தக்காளி ஆகியவற்றைச் சேர்த்து, வதங்கவேண்டிய அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பின்னர் ரவையை சேர்த்து கிளறி, தேங்காய்த்துருவல், கறிவேப்பிலையைச் சேர்த்து கிளறி இறக்கி சூடாக பரிமாறவும். 'டயாபடீஸ் பேஷன்ட்'களுக்கு கோதுமை ரவை மிகவும் நல்லது. டைபுள் கீரை உப்புமா


முளைக்கீரை அப்பம்


தேவையானவை:


அரிசிமாவு - 2 கப், கோதுமைமாவு ஒரு குழிக்கரண்டி, வெல்லம் - ஒன்றரை கப், முளைக்கீரை - ஒரு கப், ஏலக்காய் - சிறிதளவு, தேங்காய்த்துருவல் - ஒரு கப், நெய் - ஒரு ஸ்பூன், எண்ணெய் தேவையான அளவு.


செய்முறை:


கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக்


கொள்ளவும். இதனுடன் கோதுமைமாவு அரிசிமாவு, பொடித்த வெல்லம், தேங்காய்த்துருவல், ஏலக்காய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் மாவை கரைத்து வைக்கவும். வாணலியில் எண்ணெயை காய வைத்து, கரைத்து வைத்துள்ள மாவை கரண்டியில் எடுத்து வட்ட வட்டமாக விடவும். ஒருபுறம் வெந்ததும், மறுபுறமும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து சூடாக பரிமாறவும்.


முருங்கைக்கீரை துவட்டல்


தேவையானவை:

அய்ந்து சுத்தம் செய்த முருங்கைக்கீரை ஒரு கப், வெங்காயம், தக்காளி - ஒன்று, தேங்காய்த்துருவல் - ஒரு குழிக்கரண்டி, காய்ந்த மிளகாய் - ஒன்று, வேகவைத்த பாசிப்பருப்பு - ஒரு கரண்டி, கடுகு, உளுந்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு உளுந்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றைப் போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி, முருங்கைக்கீரை, உப்பு சேர்த்து வதக்கவும். பின்னர் தேங்காய்த்துருவல், வேகவைத்த பாசிப்பருப்பு சேர்த்து, நன்றாக வெந்ததும் பரிமாறவும்.


பொன்னாங்கண்ணி கொழுக்கட்டை


தேவையானவை:


பொன்னாங்கண்ணிக் கீரை - ஒரு கப், அரிசிமாவு - ஒரு கப், பச்சைமிளகாய் 2, கடுகு, உளுந்தம்பருப்பு, பெருங்காயம், தேங்காய்த்துருவல் - ஒரு கப், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.


செய்முறை:


பொன்னாங்கண்ணிக் கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து மிக்ஸியில் போடவும். அதனுடன் நறுக்கிய பச்சைமிளகாய் சேர்த்து விழுதாக அரைக்கவும்.


வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு, பெருங்காயம் போட்டு தாளித்து சிறிதளவு தண்ணீர் விடவும். பின்னர் அரைத்த கீரை விழுதை சேர்த்து, ஒரு கொதி வந்ததும் உப்பு, அரிசிமாவை சேர்த்து கிளறவும். பின்னர் தேங்காய்த்துருவலை சேர்த்து கிளறி இறக்கவும். கலவை ஆறிய பிறகு அதை சிறிய நெல்லிக்காயளவு உருண்டைகளாக உருட்டி, ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.  

( Is the spinach salty?

are necessary


  Wheat semolina - one cup, curry leaves, sprouts (both finely chopped) - one cup, coconut flakes - 2 tbsp, tomatoes, onions, green chillies - 1 each, dry chillies - 2, asparagus - a pinch, ghee. A teaspoon, salt, oil as needed.


  Recipe:


  Add ghee in a pan and fry semolina. Put some oil in the same pan and add mustard seeds, urad dal, dry chillies and chopped green chillies. Add chopped onions, spinach and tomatoes to it, pour enough water to boil and let it boil. Then add semolina and stir, add coconut flakes, curry leaves and stir and serve hot. Wheat semolina is very good for 'diabetes patients'.

  Dibble spinach is salty


  Spinach Appam


  Required:


  Rice flour - 2 cups, Wheat flour - one spoonful, Jaggery - one and a half cup, Sprouts - one cup, Cardamom - a little, Coconut flakes - one cup, Ghee - one spoon, Oil as required.


  Recipe:


  Clean the spinach and grind it into a paste in a mixer


  please Add wheat flour, rice flour, powdered jaggery, coconut flakes, cardamom to this and leave required amount of water and dissolve the dough in dosa flour. Heat oil in a pan, take the melted dough in a spoon and drop it into a circle. Once one side is cooked, turn it over and cook it on the other side and serve hot.


  Drain the spinach


  Required:


  Recipe:


  Washed and cleaned drumsticks one cup, onion, tomato - one, coconut flour - one hollow spoon, dry chili - one, boiled dal - one spoon, mustard, gram flour - one teaspoon each, salt, oil - required amount.


  Heat oil in a wok and add mustard, urad dal, dry chillies and add chopped onion, tomato, drumstick and salt. Then add coconut flakes, boiled dal and serve when well cooked.


  Ponnankanni Pudding


  Required:


  Ponnakannik spinach - one cup, rice flour - one cup, green chillies 2, mustard seeds, urad dal, asparagus, coconut flakes - one cup, salt, oil - required quantity.


  Recipe:


  Clean the Ponnankannik greens and put them in a mixer. Add chopped green chillies to it and grind it into a paste.


  Leave a little oil in a pan and add mustard seeds, urad dal, amaranth and add a little water. Then add the ground spinach paste and when it comes to a boil, add salt and rice flour and stir. Then add coconut flakes and stir. After the mixture cools, roll it into small pea sized balls and steam it. )

கருத்துகள்

www.kalaireal360.xyz

இலை அடை & உன்னியப்பம் & ஷாஹி துக்டா

 இலை அடை  தேங்காய் மற்றும் வெல்லப்பாகு கலந்த சுவையான பூரணத்துடன், ஆரோக்கியம் தரும் வாழை இலை கொண்டு தயாரிக்கப்படும் கேரளாவின் பாரம்பரிய பண்டிகை உணவான இலை அடை தித்திக்கும் சுவை கொண்டது! தேவையானவை: பாரிஸின் தூள் வெல்லம் - முக்கால் கப், நெய் 2 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் 1 نه ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், அரிசி மாவு - 1 கப், தண்ணீர் ஒன்றரை கப், உப்பு - அரை டீஸ்பூன். இலை அடை செய்முறை: கடாயில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, பாரிஸின் தூள் வெல்லம் மற்றும் தேங்காய்த்துருவல் போட்டு, தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டும். வெல்லத்தூள் நன்றாகக் கரைந்ததும், தேங்காய்த்துருவல் சேர்த்து, கெட்டியான பிறகு சிறிதளவு ஏலக்காய்த்தூளை சேர்த்து, பூரணத்தை தயார் செய்துகொள்ளவும். மேல் மாவு தயாரிக்க: அடுப்பை சிம்மில் வைத்து, பாத்திரத்தில் அரிசி மாவை வறுத்து ஆறவைக்கவும். கடாயில் தண்ணீர், நெய், உப்பு கலந்து சூடாக்கவும். சூடான தண்ணீரை வறுத்த அரிசி மாவில் ஊற்றியபடி ஸ்பூன் கொண்டு கலக்கி, கொழுக்கட்டை மாவுப் பதத்தில்,கையில் ஒட்டாதபடி மாவை தயார் செய்யவும். வாழை இலையை சிறிய சதுரங்களாக வெட்டி, லேசான தீயில் காட்டி சூடுபடுத்திக் கொண...

கார்ன் ஃபிரைடு ரைஸ்&கேப்ஸிகம் கறி

 கார்ன் ஃபிரைடு ரைஸ் தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், வேகவைத்த சோளம் - அரை கப், நறுக்கிய பர்பிள் முட்டைக்கோஸ் - கால் கப், பூண்டு - 2 பல், வெங்காயம் - ஒன்று. லைட் சோயா சாஸ், டொமேடோ சாஸ் - தலா ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - முக்கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப. செய்முறை: அரிசியை 15 நிமிடம் ஊறவைத்து, உதிரியாக வேகவைத்து ஆறவிடவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், நறுக்கிய வெங்காயம், நசுக்கிய பூண்டு, முட்டைக்கோஸ், சோளம் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் சோயா சாஸ், டொமேடோ சாஸ் ஊற்றிக் கிளறி, சாதம் சேர்த்துப் பிரட்டி, மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும். 5 நிமிடம் கழித்து, அடுப்பிலிருந்து இறக்கி, கேப்ஸிகம் கறியுடன் பரிமாறவும். கேப்ஸிகம் கறி தேவையானவை: குடைமிளகாய், வெங்காயம் - தலா ஒன்று, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் - தலா முக்கால் டீஸ்பூன், டொமேடோ சாஸ் ஒன்றரை டேபிள் ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்பட செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்றாக வதக்கி...

காலிஃப்ளவர் &மன்சூரியன்&மஷ்ரூம் மசாலா

 காலிஃப்ளவர்   பொடியாக சுத்தம் செய்து நறுக்கின காலிஃப்ளவர்- ஒரு சுப், மிளகுப்பொடி அடீஸ்பூன், சோளமாவு (காரின்ஃப்ளேவர்}-2 டேபின் ஸ்பூன், மைதா மாவு-2 டேபிள்ஸ்பூன், அஜினமோட்டோ-ஃடீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க, உப்பு-தேவையான அளவு. செய்முறை: காலி ஃப்ளவரை உப்பு போட்டு ஒரு வேக்காடு வேகவைத்து தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும். சோளமாவு, மைதாமாவு இரண்டையும் திக்காக கரைத்துக்கொள்ளவும். இந்த மாவுக் கலவையில் வேக வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பிசறி வைத்துக் கொண்டு சுடாயில் எண்ணெய் ஊற்றி, பிசறி வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். கிரேவி தயாரிக்கத் தேவையான பொருட்கள்: வெங்காயம்-1, குடைமிளகாய்-1, மிளகுப்பொடி- டீஸ்பூன், அஜினமோட்டோ - டீஸ்பூன், சோளமாவு (கார்ன் ஃப்ளேவர்)-2 டேபிள் ஸ்பூன், வெங்காயம்-1, உப்பு-தேவையாள அளவு, எண்ணெய் வதக்கத் தேவையான அளவு. கிரேவி செய்முறை: வெங்காயம், குடைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்த வெங்காயம், குடைமிளகாயை வதக்கவும். நன்கு வதங்கியவுடன் உப்பு, மிளகுப்பொடி போட்டு, சோளமாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்த...