ஆம் ஆலு பாலக் சாட்
தேவையானவை:
உருளைக்கிழங்கு 4. மாம்பழம் ஒன்று, பாலக்கீரை - ஒரு கட்டு, வறுத்த வேர்க்கடலை கால் கப், சாட் மசாலா 3 டீஸ்பூன், சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப.
செய்முறை:
அதிகம் பழுக்காத, புளிப்பும், இனிப்புமான மாம்பழத்தை தோல் சீவி நீளநீளத் துண்டுகளாக நறுக் கவும். வேர்க்கடலையை கரகரப் பாக பொடிக்கவும். பாலக் கீரையை சுத்தம் செய்து, காம்பு எடுத்து, நீள நீளத் துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை, வேகவைத்து தோலுரித்து, பெரிய இருக்கும். துண்டுகளாக நறுக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெயை காய வைத்து, கீரை இலைகளைப் போட்டு பொரித்து எடுத்து வைக்கவும். மீதமுள்ள எண்ணெயில், உருளைக்கிழங்கு துண்டங்கள், மாம்பழத்துண்டங்கள், உப்பு, சீரகத்தூள், சாட் மசாலாத்தூள் சேர்த்து, ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைக்கவும். (ரொம்ப நேரம் கிளற வேண்டாம்). இதை பரிமாறும் பாத்திரத்துக்கு மாற்றவும். இதன் மேலே பொடித்த வேர்க்கடலையைத் தூவவும். இதனுடன் பொரித்த பாலக் இலைகளை சேர்த்து உடனடியாக பரிமாறவும். பாலக் கீரையின் மொறுமொறுப்புடன் சாப்பிட இந்த சாட் வெகு சுவையாக இருக்கும்
பாலக்-புதினா பூரி
தேவையானவை:
பாலக்கீரை, புதினா (இரண்டும் சேர்த்து) 2 கப், பச்சைமிளகாய் - 2, கோதுமை மாவு - 2 கப், உப்பு, எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை:
பாலக்கீரை, புதினா இரண்டையும் மிக்ஸியில் போட்டு அதனுடன் நறுக்கிய பச்சைமிளகாய் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் கோதுமைமாவை எடுத்துக் கொண்டு அதனுடன் அரைத்த கீரை விழுது, உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். (கீரை விழுதிலேயே தண்ணீர் இருப்பதால், தனியாக தண்ணீர் சேர்க்க வேண்டாம்.) பிசைந்த மாவை சிறு சிறு உருண்டையாக உருட்டி, வட்டமாக திரட்டிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை காய வைத்து, திரட்டி வைத்துள்ள வட்டங்களைப் போட்டு பொரித்து எடுக்கவும். இதற்கு தொட்டுக் கொள்ள உருளைக்கிழங்கு குருமா நன்றாக இருக்கும்.
பாலக் உஸல்
பாலக்கீரை - 2 கட்டு, பாசிப்பருப்பு அரை கப், மஞ்சள்தூள் - கால் ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5 கப், சோம்பு - ஒரு டீஸ்பூன், சீரகத்தூள், தனியாத்தூள் தலா 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் தேவைக்கேற்ப.
தேவையானவை:
பாலக்கீரையை சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும். பாசிப்பருப்பை பாசிப்பருப்புக்கு பதில், பச்சைப்பயறையும் ஊறவைத்து, நீரை வடித்து, உப்பு, ஊற வைத்து செய்யலாம்.
செய்முறை
காய்ந்த மிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, சோம்பு தாளிக்கவும்.. இதனுடன் அரைத்த பாசிப்பருப்பு கலவையை சேர்த்து கிளறவும். பிறகு நறுக்கி வைத்துள்ள கீரை, சீரகத்தூள், தனியாத்தூள், மஞ் சள்தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறவும். பருப்பு வெந்து, உதிரியாகும் போது அடுப்பை அணைத்து விடவும்.
(Am Aloo Palak Chat
Required:
Potatoes 4. One mango, one bundle of spinach, one quarter cup of roasted peanuts, 3 teaspoons of chaat masala, one teaspoon of cumin seeds, salt, oil - as required.
Recipe:
Peel the unripe, sour, sweet mango and cut into long pieces. Grind the peanuts into fine powder. Clean the spinach, remove the stems and cut into long pieces. Potatoes, boiled and peeled, are large.
Cut into pieces.
Heat oil in a pan, fry spinach leaves and keep aside. In the remaining oil, add potato pieces, mango pieces, salt, cumin powder, chaat masala powder, give a stir and switch off the stove. (Don't stir too long). Transfer this to a serving bowl. Sprinkle ground peanuts on top of this. Add fried palak leaves to this and serve immediately. This chaat is delicious when eaten with the crunch of spinach
Palak-Mint Puri
Required:
Ghee, mint (both together) 2 cups, green chillies - 2, wheat flour - 2 cups, salt, oil as required.
Recipe:
Put both the spinach and mint in a mixer and add chopped green chillies and grind it to a paste. Take wheat flour in a wide pan and add ground spinach paste, salt and mash it. (Do not add water separately as spinach paste contains water.) Roll the kneaded dough into small balls and gather them into a circle. Heat oil in a pan and fry the collected circles. Potato Kuruma is good to touch this.
Balak Uzal
Palakirai - 2 bundles, dal half a cup, turmeric powder - quarter spoon, dry chillies - 5 cups, aniseed - one teaspoon, cumin powder, Taniyad powder 2 teaspoons each, salt, oil as required.
Required:
Clean and chop the spinach. Instead of dal, green beans can be soaked, drained, salted and soaked.
Recipe
Add dry chilies and grind it coarsely.
Pour oil in a pan and season with aniseed.. Add the ground dal mixture and stir. Then add chopped spinach, cumin powder, taniyat powder, manj salt powder and salt and stir well. When the dal is cooked, turn off the stove.)
கருத்துகள்
கருத்துரையிடுக