முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

GOOD MORNING

ரெடிமிக்ஸ் வடைமாவு&கபாலி புர்குலி&கொய்யாப்பழ தவா பஜ்ஜி&ரெடிமிக்ஸ் பஜ்ஜிமாவு&அரைத்த மாவு பஜ்ஜி&வெஜிடபிள் ரிங்க்ஸ்&டபுள் டெக்கர் பஜ்ஜி

 ரெடிமிக்ஸ் வடைமாவு தேவையானவை: உளுந்தம்பருப்பு - 1 கப், அரிசிமாவு - 1/4 கப், பெருங்காயத்தூள், பேக்கிங் பவுடர், மிளகு - தலா 1/4 ஸ்பூன், பச்சைமிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 1/2 ஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப. செய்முறை: தண்ணீரில் உளுந்தை இருமுறைக் கழுவி, நீரை வடித்து, ஒரு துணியில் பரப்பி, காயவைக்கவும். பின்னர், வெறும் கடாயில் போட்டு, சூடு வரும்வரை வறுத்தெடுத்து, மிக்ஸியில் பொடிக்கவும். இதனுடன் உப்பு, பெருங்காயத்தூள், பேக்கிங் பவுடர், அரிசிமாவு சேர்த்து, கலக்கவும். 1 ஸ்பூன் எண்ணெய்யை சூடாக்கி, நறுக்கிய ப.மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, ஈரமில்லாமல் எடுக்கவும். இதையும் அரைத்த மாவில் சேர்த்து, நன்றாகக் கலந்துவிட்டால், 'வடைமாவு' தயார். குறிப்பு: தேவைப்படும்போது, இந்த மாவில் தண்ணீர் ஊற்றிக் கலந்து, வடைகள் செய்யலாம். கபாலி புர்குலி தேவையானவை: பறங்கிப்பூ இதழ்கள் - 10, பாசிப்பருப்பு - 1 கப், சோம்பு, தனியா - தலா 1 ஸ்பூன், பச்சைமிளகாய் - 4, நெய் - 2 ஸ்பூன், புதினா 1 கைப்பிடி, உப்பு, எண்ணெய் - தேவைக்கு. செய்முறை: பாசிப்பருப்பை ஊறவைத்து, நீரை வடித்து, சோம்பு, த...

தேங்காய்-மிளகாய்ப் பொடி & பீட்ரூட் ஜெல்லி & கத்தரிக்காய் சப்ஜி &ஆலு தொக்கு

 தேங்காய்-மிளகாய்ப் பொடி


தேவையானவை: தேங்காய்த்துருவல்,


கடலைப்பருப்பு - தலா 100 கிராம் மிளகாய் - உங்களுக்கு தேவையான அளவு.வெல்லம் சிறிய அளவு.பெருங்காயம், உப்பு -


தேவையான அளவு.


செய்முறை: வெறும் வாணலியில் தேங்காய்த்துருவல், கடலைப் பருப்பு, காய்ந்தமிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை வறுத்தெடுக்கவும்.அதனுடன் வெல்லம், உப்பு சேர்த்து மிக்ஸியில் சற்று கரகரவென அரைக்கவும்.


இந்த தேங்காய்-மிளகாய்ப் பொடியை இட்லி, தோசையுடன் சாப்பிடலாம்.


பீட்ரூட் ஜெல்லி


தேவையானவை: பீட்ரூட் துருவல் - 1 கட்,

வெல்லம். அரை கப், நெய் - 1 டீஸ்பூன், உப்பு சிட்டிகை


செய்முறை: பீட்ரூட் துருவலை மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். வெல்லத்தை கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். வாணலியில் நெய் விட்டு பீட்ரூட் விழுதை வதக்கவும். இதனுடன் வெல்லக்கரைசல், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். கெட்டியாக வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும். இந்த ஜெல்லியை இட்லி, தோசை, சப்பாத்தி வெண் பொங்கல் என எதனுடன் வேண்டுமானாலும் பரிமாறலாம்.


கத்தரிக்காய் சப்ஜி


தேவையானவை: கத்தரிக்காய், வெங்காயம், தக்காளி தலா 4, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள், புளிக்கரைசல் - தலா 4 டீஸ்பூன், பச்சைமிளகாய் - 2, கடுகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்துமல்லித்தழை சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.


செய்முறை: குக்கரில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பின்ன' பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சைமிளக சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிய கத்தரிக்காய், உ மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கொத்துமல்லித்தழை சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் புளிக்கரைசல் சேர்த்து குக்கரை மூடி, இரண்டு விசில் வந்ததும் இறக்கி ஆறவைத்து நன்றாக மசிக்கவும். இட்லி, தோசை, சப்பாத்தி, பரோட்டா, நாண் ஆகியவற்றுக்கு ஏற்ற சைட்-டிஷ் இது! 


ஆலு தொக்கு


தேவையானவை: கேரட், வெங்காயம்


பச்சைமிளகாய் - 3, உருளைக்கிழங்கு - 4, மிளகாய்த்தூள் தலா 1,


1 டீஸ்பூன், கொத்துமல்லித்தழை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.


செய்முறை: வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாயை பொடியாக நறுக்கி மிக்ஸியில் போட்டு, கொத்துமல்லித்தழை சேர்த்து விழுதாக அரைக்கவும். கேரட்டை துருவிக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மசிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கேரட்துருவல், மசித்த உருளைக்கிழங்கு, மிளகாய்த்தூள், அரைத்த விழுது, உப்பு சேர்த்து சுருள வதக்கி இறக்கவும். இட்லி, தோசை, சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக்கொள்ள இந்த சைட்-டிஷ் நன்றாக இருக்கும்.Coconut-chili powder


 Ingredients: Grated Coconut,


 Chickpeas - 100 gms each Chili - as much as you need Jaggery small amount Fenugreek, Salt -


 required amount.


 Method: Fry the coconut flakes, dal, dry chillies and asparagus in a pan. Add jaggery and salt and grind it in a mixer.


 This coconut-chilli powder can be eaten with idli and dosa.


 Beetroot jelly


 Ingredients: Grated beetroot – 1 cut,


 Jaggery. Half a cup, ghee - 1 tbsp, salt


 Pinch


 Method: Grind the beetroot pulp into a paste in a mixer. Dissolve jaggery and filter. Add ghee in a pan and saute the beetroot paste. Add molasses and salt to this and let it boil. When it thickens, remove it from the oven. This jelly can be served with anything like idli, dosa, chapati ven pongal.


 Eggplant Subji


 Ingredients: Eggplant, Onion, Tomato 4 each, Turmeric powder - quarter teaspoon, Chilli powder, Soy sauce - 4 teaspoon each, Green Chilli - 2, Mustard, Cumin, Curry leaves, Coriander leaves a little, Salt, Oil - required amount.


 Method: Heat oil in a cooker and season with mustard, cumin and curry leaves. Then add finely chopped onion, tomatoes, green chillies cut into small pieces, aubergine, turmeric powder, chilli powder and coriander leaves and saute well. Then add the leaven solution and cover the cooker, after two whistles take it off and let it cool down and mash it well. It is a perfect side-dish for idli, dosa, chapati, paratha, naan!


 Alu pack


 Ingredients: Carrot, Onion

Green Chillies – 3, Potatoes – 4, Chilli Powder 1 each,


 1 tbsp, Coriander leaves - a little, salt, oil - as required.


 Method: Finely chop onions, tomatoes, green chillies and put them in a mixer, add coriander leaves and grind them into a paste. Grate the carrot. Boil the potatoes and peel them and mash them. Heat oil in a pan and add carrot, mashed potato, chili powder, ground paste, salt and fry it. This side-dish goes well with idli, dosa, chapati, puri.

கருத்துகள்

www.kalaireal360.xyz

இலை அடை & உன்னியப்பம் & ஷாஹி துக்டா

 இலை அடை  தேங்காய் மற்றும் வெல்லப்பாகு கலந்த சுவையான பூரணத்துடன், ஆரோக்கியம் தரும் வாழை இலை கொண்டு தயாரிக்கப்படும் கேரளாவின் பாரம்பரிய பண்டிகை உணவான இலை அடை தித்திக்கும் சுவை கொண்டது! தேவையானவை: பாரிஸின் தூள் வெல்லம் - முக்கால் கப், நெய் 2 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் 1 نه ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், அரிசி மாவு - 1 கப், தண்ணீர் ஒன்றரை கப், உப்பு - அரை டீஸ்பூன். இலை அடை செய்முறை: கடாயில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, பாரிஸின் தூள் வெல்லம் மற்றும் தேங்காய்த்துருவல் போட்டு, தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டும். வெல்லத்தூள் நன்றாகக் கரைந்ததும், தேங்காய்த்துருவல் சேர்த்து, கெட்டியான பிறகு சிறிதளவு ஏலக்காய்த்தூளை சேர்த்து, பூரணத்தை தயார் செய்துகொள்ளவும். மேல் மாவு தயாரிக்க: அடுப்பை சிம்மில் வைத்து, பாத்திரத்தில் அரிசி மாவை வறுத்து ஆறவைக்கவும். கடாயில் தண்ணீர், நெய், உப்பு கலந்து சூடாக்கவும். சூடான தண்ணீரை வறுத்த அரிசி மாவில் ஊற்றியபடி ஸ்பூன் கொண்டு கலக்கி, கொழுக்கட்டை மாவுப் பதத்தில்,கையில் ஒட்டாதபடி மாவை தயார் செய்யவும். வாழை இலையை சிறிய சதுரங்களாக வெட்டி, லேசான தீயில் காட்டி சூடுபடுத்திக் கொண...

கார்ன் ஃபிரைடு ரைஸ்&கேப்ஸிகம் கறி

 கார்ன் ஃபிரைடு ரைஸ் தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், வேகவைத்த சோளம் - அரை கப், நறுக்கிய பர்பிள் முட்டைக்கோஸ் - கால் கப், பூண்டு - 2 பல், வெங்காயம் - ஒன்று. லைட் சோயா சாஸ், டொமேடோ சாஸ் - தலா ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - முக்கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப. செய்முறை: அரிசியை 15 நிமிடம் ஊறவைத்து, உதிரியாக வேகவைத்து ஆறவிடவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், நறுக்கிய வெங்காயம், நசுக்கிய பூண்டு, முட்டைக்கோஸ், சோளம் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் சோயா சாஸ், டொமேடோ சாஸ் ஊற்றிக் கிளறி, சாதம் சேர்த்துப் பிரட்டி, மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும். 5 நிமிடம் கழித்து, அடுப்பிலிருந்து இறக்கி, கேப்ஸிகம் கறியுடன் பரிமாறவும். கேப்ஸிகம் கறி தேவையானவை: குடைமிளகாய், வெங்காயம் - தலா ஒன்று, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் - தலா முக்கால் டீஸ்பூன், டொமேடோ சாஸ் ஒன்றரை டேபிள் ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்பட செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்றாக வதக்கி...

காலிஃப்ளவர் &மன்சூரியன்&மஷ்ரூம் மசாலா

 காலிஃப்ளவர்   பொடியாக சுத்தம் செய்து நறுக்கின காலிஃப்ளவர்- ஒரு சுப், மிளகுப்பொடி அடீஸ்பூன், சோளமாவு (காரின்ஃப்ளேவர்}-2 டேபின் ஸ்பூன், மைதா மாவு-2 டேபிள்ஸ்பூன், அஜினமோட்டோ-ஃடீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க, உப்பு-தேவையான அளவு. செய்முறை: காலி ஃப்ளவரை உப்பு போட்டு ஒரு வேக்காடு வேகவைத்து தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும். சோளமாவு, மைதாமாவு இரண்டையும் திக்காக கரைத்துக்கொள்ளவும். இந்த மாவுக் கலவையில் வேக வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பிசறி வைத்துக் கொண்டு சுடாயில் எண்ணெய் ஊற்றி, பிசறி வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். கிரேவி தயாரிக்கத் தேவையான பொருட்கள்: வெங்காயம்-1, குடைமிளகாய்-1, மிளகுப்பொடி- டீஸ்பூன், அஜினமோட்டோ - டீஸ்பூன், சோளமாவு (கார்ன் ஃப்ளேவர்)-2 டேபிள் ஸ்பூன், வெங்காயம்-1, உப்பு-தேவையாள அளவு, எண்ணெய் வதக்கத் தேவையான அளவு. கிரேவி செய்முறை: வெங்காயம், குடைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்த வெங்காயம், குடைமிளகாயை வதக்கவும். நன்கு வதங்கியவுடன் உப்பு, மிளகுப்பொடி போட்டு, சோளமாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்த...