மல்டி கீரை சாதம்
தேவையானவை:
முளைக்கீரை, சிறுகீரை, மணத்தக்காளிக் கீரை (மூன்றும் சுத்தம் செய்து பொடியாக நறுக்கியது) - 2 கப், புழுங்கலரிசி ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி - தலா கால் கப், பட்டாணி - அரை கப், பூண்டு 4 பல், கீறிய பச்சைமிளகாய் - 2, தேங்காய்த்துருவல், கட்டிப் பெருங்காயம், கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, கொத்துமல்லித்தழை சிறிதளவு, நெய் - ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் தேவையான அளவு.
அரைக்க:
காய்ந்த மிளகாய் - 6, தனியா, சோம்பு : - தலா ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் சிறிதளவு.
செய்முறை:
அரைக்கக்கொடுத்துள்ளவற்றை வெறும் வாணலியில் வறுத்து மிக்கம்யில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். குக்கரை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ஞ்சதும் கடுகு உளுந்தம்பருப்பு, கடலைப் பருப்டி குறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளிக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி பூண்டு, பச்சைமிளகாய், கீரை வகைகளை சேர்த்து வதக்கவும். பின்னர் அரைத்த விழுது, பட்டாணி, அரிசி, தேவையான அளவு தண்ணீர், உப்பு போட்டு நெய் விட்டு குக்கரை மூடி, மூன்று வில் விட்டு இறக்கவும். சாதத்தை நன்றாக கிளறி கொத்துமல்லித்தழை தூவி பரிமாறவும் தயிர் பச்சடி (அ) பொரித்த அப்பளம் நல்ல காம்பினேஷன்.
அரைக்கீரை இனிப்பு பச்சடி
தேவையானவை:
அரைக்கீரை (சுத்தம் செய்து பொடியாக நறுக்கியது) - ஒரு கப், தோல் சீவி பொடியாக நறுக்கிய மாங்காய்த் துண்டுகள் - அரை கப், வெல்லம் ஒரு கப், பச்சைமிளகாய் - 1, கடுகு, உளுந்தம்பருப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
அகலமான பாத்திரத்தில் கீரையை
எடுத்துக் கொண்டு அதனுடன் சிறிதளவு தண்ணீர், மாங்காய்த் துண்டுகள், பச்சைமிளகாய் சேர்த்து வேக வைத்து இறக்கி, மத்தால் மசிக்கவும். பின்னர் வெல்லத்தைச் சேர்த்து மறுபடியும் அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். கலவை கெட்டியானதும், வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு உளுந்தம்பருப்பை தாளித்துக் கொட்டி கலந்து பரிமாறவும். பச்சடி சற்று நீர்க்க இருந்தால் சிறிதளவு அரிசி மாவை கரைத்து விடலாம்.
Spinach Recipe Multi Spinach Rice & Spinach Sweet Tart & Spinach Vada
முளைக்கீரை வடை
தேவையானவை:
முளைக்கீரை (பொடியாக நறுக்கியது) ஒரு கப், உளுந்தம்பருப்பு - கால் கிலோ, பச்சைமிளகாய் - 2, காய்ந்த மிளகாய் 4. பொடியாக நறுக்கிய வெங்காயம் கப், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, கொத்துமல்லித்தழை - சிறிதளவு, இஞ்சி - சிறிய துண்டு, உப்பு, எண்ணெய் தேவையான அளவு. செய்முறை:
உளுந்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, அதனுடன் காய்ந்த மிளகாய், பச்சைமிளகாய், தோல் நீக்கிய இஞ்சி சேர்த்து அரைக்கவும். பின்னர் அதனுடன் பெருங்காயத்தூள், நறுக்கிய வெங்காயம், கீரை சேர்த்து ஒரு மாவை கெட்டியாக கலந்து வைக்கவும். வாணலியில் எண்ணெயை காய வைத்து, மாவுக் கலவையை சின்ன சைஸ் வடைகளாக தட்டிப் போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து வேகவிடவும். இருபுறமும் சிவக்க வெந்ததும் எடுத்து எண்ணெயை வடிய விட்டு பரிமாறவும். (Multi Spinach Rice Required:
Spinach, Spinach, Spinach (all three cleaned and finely chopped) - 2 cups, Boiled rice 1 cup, Onion finely chopped, Tomato - 1/4 cup each, Peas - 1/2 cup, Garlic 4 cloves, Green chillies chopped - 2, Coconut flakes, Asafoetida, Mustard, urad dal, chickpeas, curry leaves, little bit of coriander leaves, ghee - one teaspoon, salt, oil as required.
Grind:
Dry chillies - 6, Taniya, Aniseed :- 1 teaspoon each, little grated coconut.
Recipe:
Just fry the grinded ingredients in a pan and grind them into paste. Put the cooker in the oven and leave a little oil and when it gets dry, season it with mustard greens, sea dal, coriander leaves and asparagus. Then add finely chopped onions, tomatoes, garlic, green chillies and saute. Then add ground paste, peas, rice, required amount of water, salt and ghee, cover the cooker and leave it for three bows. Stir the rice well and sprinkle with coriander leaves and serve Yogurt Pachadi (a) Fried waffles are a good combination.
Half Spinach Sweet Tart
Required:
Spinach (cleaned and finely chopped) - one cup, peeled and finely chopped mango pieces - half a cup, jaggery one cup, green chillies - 1, mustard, urad dal, oil - as required.
Recipe:
Spinach in a wide pan
Take it and add some water, mango pieces, green chillies and boil it and mash it with liquor. Then add the jaggery and let it boil again in the oven. When the mixture thickens, add a little oil in the pan and season with mustard greens and serve. If the cake is a little runny, you can dissolve a little rice flour.
Spinach Recipe Multi Spinach Rice & Spinach Sweet Tart & Spinach Vada
Spinach Vada
Required:
Radish (finely chopped) one cup, gram flour - quarter kg, green chillies - 2, dry chillies 4. onion finely chopped cup, asparagus powder, curry leaves, coriander leaves - little, ginger - small piece, salt, oil as required. Recipe:
Soak the urad dal for an hour and grind it along with dry chillies, green chillies and peeled ginger. Then add asparagus powder, chopped onion, spinach and mix it into a thick dough. Heat oil in a pan, cut the flour mixture into small balls and cook on medium flame. When both sides are golden brown, drain the oil and serve. )
கருத்துகள்
கருத்துரையிடுக