முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

GOOD MORNING

ரெடிமிக்ஸ் வடைமாவு&கபாலி புர்குலி&கொய்யாப்பழ தவா பஜ்ஜி&ரெடிமிக்ஸ் பஜ்ஜிமாவு&அரைத்த மாவு பஜ்ஜி&வெஜிடபிள் ரிங்க்ஸ்&டபுள் டெக்கர் பஜ்ஜி

 ரெடிமிக்ஸ் வடைமாவு தேவையானவை: உளுந்தம்பருப்பு - 1 கப், அரிசிமாவு - 1/4 கப், பெருங்காயத்தூள், பேக்கிங் பவுடர், மிளகு - தலா 1/4 ஸ்பூன், பச்சைமிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 1/2 ஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப. செய்முறை: தண்ணீரில் உளுந்தை இருமுறைக் கழுவி, நீரை வடித்து, ஒரு துணியில் பரப்பி, காயவைக்கவும். பின்னர், வெறும் கடாயில் போட்டு, சூடு வரும்வரை வறுத்தெடுத்து, மிக்ஸியில் பொடிக்கவும். இதனுடன் உப்பு, பெருங்காயத்தூள், பேக்கிங் பவுடர், அரிசிமாவு சேர்த்து, கலக்கவும். 1 ஸ்பூன் எண்ணெய்யை சூடாக்கி, நறுக்கிய ப.மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, ஈரமில்லாமல் எடுக்கவும். இதையும் அரைத்த மாவில் சேர்த்து, நன்றாகக் கலந்துவிட்டால், 'வடைமாவு' தயார். குறிப்பு: தேவைப்படும்போது, இந்த மாவில் தண்ணீர் ஊற்றிக் கலந்து, வடைகள் செய்யலாம். கபாலி புர்குலி தேவையானவை: பறங்கிப்பூ இதழ்கள் - 10, பாசிப்பருப்பு - 1 கப், சோம்பு, தனியா - தலா 1 ஸ்பூன், பச்சைமிளகாய் - 4, நெய் - 2 ஸ்பூன், புதினா 1 கைப்பிடி, உப்பு, எண்ணெய் - தேவைக்கு. செய்முறை: பாசிப்பருப்பை ஊறவைத்து, நீரை வடித்து, சோம்பு, த...

ஈரல்-மிளகு வறுவல் &கடாய் சிக்கன்  & காஜுசிக்கள் கீரேவி

  ஈரல்-மிளகு வறுவல் தேவையானவை ஆட்டு ஈரல் கால் கிலோ, மஞ் சள்தாள், சீரகம் - தலா அரை டீஸ்பூன், தனியாத்தாள் - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - ஒன்றரை டீஸ்பூன். இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு - 7 பல். கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: ஈரலுடன் தனியாத்தூள், சிறிதளவு மஞ்சள்தூள், உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். இஞ்சி, பூண்டுடன் சீரகத்தைச் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைப் போட்டு தாளித்து, இஞ்சி, பூண்டு, சீரக விழுது சேர்த்து வதக்கவும். பின்னர் ஊற வைத்த ஈரலை சேர்த்து, அதனுடன் மீதமுள்ள மஞ்சள்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கிளறவும். ஈரல் நன்றாக வெந்து, எண்ணெய் பிரிந்து வரும்போது, கொத்துமல்லித்தழை தூவி இறக்கவும்.   கடாய் சிக்கன்  தேவையானவை: சிக்கன் - அரை கிலோ, வெங்காயம், தக்காளி - தலா 2. இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை ஒரு கொத்து, கொத்துமல்லித்தழை - ஒரு கைப்பிடி, நெய் ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு, எண்ணெய் தேவ...

ஃபிரான் வித் எக் பட்டர் மசாலா&நண்டு கிரேவி&வசினாடி சிக்கன் சால்னா

 ஃபிரான் வித் எக் பட்டர் மசாலா  தேவையானவை இறால் ஒரு கப், வேக வைத்த முட்டை 4. வெண்ணெய்-3கஸ்பூன் பெரிய வெங்காயம் பெரிய சைஸ் தக்காளி தலா 2. பட்டை சிறிய துண்டு. கிராம்பு, பிரிஞ்சி இலை - தலா 1 மஞ் சள்தூள் அரைகஸ்பூன், சோம்பு: ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீன் சோயாசாஸ் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்துமல்லித்தழை - சிறிது, உப்பு - தேவையான அளவு  செய்முறை:  வாணலியில் வெண்ணெயை போட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, சோம்பு, கறிவேப்பிலை. பிரிஞ்சி இலை சேர்த்து பொரியவிடவும். பின்னர் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். பின்னர் தக்காளியைச் சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை வதக்கி, இறாலைச் சேர்த்து வதக்கவும். பின்னர் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி, சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேகவிடவும். இறால் நன்றாக வெந்ததும் சோயா சாஸை ஊற்றிம் கிளறவும். மசாலாக் கலவை கெட்டியானதும், அதனுடன் முட்டைகளை குறுக்காக மெட்டிப் போட்டு நன்றாக பிரட்டி இறக்கவும்.        நண்டு கிரேவி   தேவையானவை:  நண்டு - ஒரு கிலோ. தேங்காய்ப்பால் மூன்று டம்ளர், வெங்காயம், தக்காளி ஒன்ற...

கீரை உப்புமா & முளைக்கீரை அப்பம் & முருங்கைக்கீரை துவட்டல் & பொன்னாங்கண்ணி கொழுக்கட்டை

 கீரை உப்புமா தேவையானவை  கோதுமை ரவை - ஒரு கப், கரிசலாங்கண்ணிக்கீரை, முளைக்கீரை (இரண்டும் பொடியாக நறுக்கியது) - ஒரு கப், தேங்காய்த்துருவல் - 2 டீஸ்பூன், தக்காளி, வெங்காயம், பச்சைமிளகாய் - தலா 1, காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயம் - ஒரு சிட்டிகை, நெய். ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் தேவையான அளவு. செய்முறை: வாணலியில் நெய் விட்டு ரவையை வறுத்துக் கொள்ளவும். அதே வாணலி யில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், நறுக்கிய பச்சைமிளகாய் போட்டு தாளிக் கவும். அதனுடன் நறுக்கிய வெங்காயம், கீரை, தக்காளி ஆகியவற்றைச் சேர்த்து, வதங்கவேண்டிய அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பின்னர் ரவையை சேர்த்து கிளறி, தேங்காய்த்துருவல், கறிவேப்பிலையைச் சேர்த்து கிளறி இறக்கி சூடாக பரிமாறவும். 'டயாபடீஸ் பேஷன்ட்'களுக்கு கோதுமை ரவை மிகவும் நல்லது. டைபுள் கீரை உப்புமா முளைக்கீரை அப்பம் தேவையானவை: அரிசிமாவு - 2 கப், கோதுமைமாவு ஒரு குழிக்கரண்டி, வெல்லம் - ஒன்றரை கப், முளைக்கீரை - ஒரு கப், ஏலக்காய் - சிறிதளவு, தேங்காய்த்துருவல் - ஒரு கப், நெய் - ஒரு ஸ்பூன், எண்ணெய் தேவையான அளவு. செய்முறை: கீரை...

ஆம் ஆலு பாலக் சாட்  & பாலக்-புதினா பூரி & பாலக் உஸல் 

 ஆம் ஆலு பாலக் சாட்  தேவையானவை: உருளைக்கிழங்கு 4. மாம்பழம் ஒன்று, பாலக்கீரை - ஒரு கட்டு, வறுத்த வேர்க்கடலை கால் கப், சாட் மசாலா 3 டீஸ்பூன், சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப. செய்முறை: அதிகம் பழுக்காத, புளிப்பும், இனிப்புமான மாம்பழத்தை தோல் சீவி நீளநீளத் துண்டுகளாக நறுக் கவும். வேர்க்கடலையை கரகரப் பாக பொடிக்கவும். பாலக் கீரையை சுத்தம் செய்து, காம்பு எடுத்து, நீள நீளத் துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை, வேகவைத்து தோலுரித்து, பெரிய இருக்கும். துண்டுகளாக நறுக்கவும். பாத்திரத்தில் எண்ணெயை காய வைத்து, கீரை இலைகளைப் போட்டு பொரித்து எடுத்து வைக்கவும். மீதமுள்ள எண்ணெயில், உருளைக்கிழங்கு துண்டங்கள், மாம்பழத்துண்டங்கள், உப்பு, சீரகத்தூள், சாட் மசாலாத்தூள் சேர்த்து, ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைக்கவும். (ரொம்ப நேரம் கிளற வேண்டாம்). இதை பரிமாறும் பாத்திரத்துக்கு மாற்றவும். இதன் மேலே பொடித்த வேர்க்கடலையைத் தூவவும். இதனுடன் பொரித்த பாலக் இலைகளை சேர்த்து உடனடியாக பரிமாறவும். பாலக் கீரையின் மொறுமொறுப்புடன் சாப்பிட இந்த சாட் வெகு சுவையாக இருக்கும்  ...

தேங்காய்-மிளகாய்ப் பொடி & பீட்ரூட் ஜெல்லி & கத்தரிக்காய் சப்ஜி &ஆலு தொக்கு

 தேங்காய்-மிளகாய்ப் பொடி தேவையானவை: தேங்காய்த்துருவல், கடலைப்பருப்பு - தலா 100 கிராம் மிளகாய் - உங்களுக்கு தேவையான அளவு.வெல்லம் சிறிய அளவு.பெருங்காயம், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வெறும் வாணலியில் தேங்காய்த்துருவல், கடலைப் பருப்பு, காய்ந்தமிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை வறுத்தெடுக்கவும்.அதனுடன் வெல்லம், உப்பு சேர்த்து மிக்ஸியில் சற்று கரகரவென அரைக்கவும். இந்த தேங்காய்-மிளகாய்ப் பொடியை இட்லி, தோசையுடன் சாப்பிடலாம். பீட்ரூட் ஜெல்லி தேவையானவை: பீட்ரூட் துருவல் - 1 கட், வெல்லம். அரை கப், நெய் - 1 டீஸ்பூன், உப்பு சிட்டிகை செய்முறை: பீட்ரூட் துருவலை மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். வெல்லத்தை கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். வாணலியில் நெய் விட்டு பீட்ரூட் விழுதை வதக்கவும். இதனுடன் வெல்லக்கரைசல், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். கெட்டியாக வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும். இந்த ஜெல்லியை இட்லி, தோசை, சப்பாத்தி வெண் பொங்கல் என எதனுடன் வேண்டுமானாலும் பரிமாறலாம். கத்தரிக்காய் சப்ஜி தேவையானவை: கத்தரிக்காய், வெங்காயம், தக்காளி தலா 4, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள், புளிக்கரைசல் - தலா 4 ...

நியூட்ரி பணியாரம்மஷ்ரூம் பான் கேக் & வேர்க்கடலை ஊத்தப்பம் மல்ட்டி க்ரெய்ன் தோசை

 நியூட்ரி பணியாரம்  தேவையானவை: ராகி, சோளம், பார்லி திணை, வரகரிசி - தலா / கப், உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப, கறிவேப்பிலை - சிறிது, இஞ்சி - சிறு துண்டு, பச்சைமிளகாய் - 4, கேரட் துருவல், பச்சை பட்டாணி - தலா / கப். செய்முறை: ராகி, சோளம், பார்லி, திணை, வரகரிசி, சேர்த்து ஊறவைக்கவும் (4 மணி  நேரம்). இதை தண்ணீர், உப்பு, பச்சைமிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து அரைக்கவும்.  5 மணி நேரம் புளிக்க வைக்கவும். எண்ணெய் சேர்க்கவும்.  குழிப்பணியார சட்டியில் மாவை பாதியளவு ஊற்றவும். துருவின கேரட், பச்சைப்பட்டாணி சிறிதளவு சேர்க்கவும். மேலே இன்னும் கொஞ்சம் மாவு ஊற்றவும். இருபுறமும் திருப்பி, சுட்டெடுக்கவும். புதினா சட்னி, தக்காளி சாஸ் என்று எதனுடனும் சாப்பிடலாம். மாவை அரைத்து ஃப்ரிட்ஜில் வைத்து ஒரு வாரம் உபயோகிக்கலாம். லஞ்சி பாக்ஸிலும் தரலாம்.   மஷ்ரூம் பான் கேக்  மஷ்ரூம் துண்டுகள் -1 கப், கோதுமை மாவு - 1 கப், பால் ஸ்பூன், கொத்துமல்லி - சிறிதளவு, சேர்த்து செய்முறை: 1/2 கப் சூடான தண்ணீரில் அரிந்த மஷ்ரூம் துண்டங்கள் தேவையானவை:  அரிந்த மஷ்ரூம்- 1/2 கப், உப்பு - ருசிக்கேற...

மல்டி கீரை சாதம் & அரைக்கீரை இனிப்பு பச்சடி & முளைக்கீரை வடை

 மல்டி கீரை சாதம்  தேவையானவை:  முளைக்கீரை, சிறுகீரை, மணத்தக்காளிக் கீரை (மூன்றும் சுத்தம் செய்து பொடியாக நறுக்கியது) - 2 கப், புழுங்கலரிசி ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி - தலா கால் கப், பட்டாணி - அரை கப், பூண்டு 4 பல், கீறிய பச்சைமிளகாய் - 2, தேங்காய்த்துருவல், கட்டிப் பெருங்காயம், கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, கொத்துமல்லித்தழை சிறிதளவு, நெய் - ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் தேவையான அளவு.  அரைக்க:  காய்ந்த மிளகாய் - 6, தனியா, சோம்பு : - தலா ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் சிறிதளவு.  செய்முறை:  அரைக்கக்கொடுத்துள்ளவற்றை வெறும் வாணலியில் வறுத்து மிக்கம்யில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். குக்கரை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ஞ்சதும் கடுகு உளுந்தம்பருப்பு, கடலைப் பருப்டி குறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளிக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி பூண்டு, பச்சைமிளகாய், கீரை வகைகளை சேர்த்து வதக்கவும். பின்னர் அரைத்த விழுது, பட்டாணி, அரிசி, தேவையான அளவு தண்ணீர், உப்பு போட்டு நெய் விட்டு குக்க...

This sambar can be served with idli, dosa, chapat

 தேங்காய் மிளகாய்ப் பொடி தேவையானவை: தேங்காய்த்துருவல், கடலைப்பருப்பு - தலா 1 கப், காய்ந்த மிளகாய் அரை கப், வெல்லம் - கொட்டைப் பாக்களவு, பெருங்காயம், உப்பு - தேவையான அளவு. செய்முறை: கடாயில் தேங்காய்த்துருவல், பருப்பு, காய்ந்தமிளகாய், பெருங்காயம் ஆகியவற் ைதவித்தனியாக வறுத்தெடுக்கவும். பின்னர் அவற்றை ஆறவைத்து அதனுடன் வெல்லம், உப்பு சேர்த்து மிக்ஸியில் சற்று கரகரவென அரைக்கவும். இந்த தேங்காய் மிளகாய்ப் பொடியை இட்லி, தோசையுடன் சாப்பிடலாம். கத்தரிக்காய் சப்ஜி தேவையானவை: கத்தரிக்காய், வெங்காயம், தக்காளி தலா 4, மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள், புளிக்கரைசல் தலா 4 டீஸ்பூன், பச்சைமிளகாய் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்துமல்லித்தழை சிறிதளவு, உப்பு, எண்ணெய் தேவையான அளவு. 2, செய்முறை: குக்கரில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிய கத்தரிக்காய், உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கொத்துமல்லித்தழை சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் புளிக்கரைசல் சேர்த்து குக்கரை மூடி இரண்டு விச...