சூப் வகைகள்
A.B.C.சூப்
தேவையானவை: ஆப்பிள் துருவல் அரை கப், பீட்ரூட் துருவல், கேரட் துருவல் - தலா கால் கப், வெண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன், வெங்காயம் ஒன்று, பூண்டு - 2 பல், சீரகம் - அரை டீஸ்பூன், ஃபிரெஷ் கிரீம் சிறிதளவு, மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் வெண்ணெயை சூடாக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, சீரகம் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் பீட்ரூட் துருவல், கேரட் துருவல் சேர்த்து பாதியளவு வேகும் வரை வதக்கி, கடைசியாக ஆப்பிள் துருவல், தண்ணீர் சேர்த்து வேக வைத்து இறக்கவும். பின்னர் இதை ஆற வைத்து மிக்ஸியில் போட்டு அரைத்து, வடிகட்டவும். பரிமாறுவதற்கு முன்பாக உப்பு, மிளகுத்தூள் சேர்த்து, அடுப்பில் வைத்து சூடாக்கி, மேலாக ஃபிரெஷ் கிரீம் சேர்த்தும் பரிமாறவும்.
மஷ்கின் சூப்
தேவையானவை: மெல்லிதாக நறுக்கிய காளான் - அரை
கப், மஞ்சள் பூசணித் துண்டுகள் - ஒரு கப், வெங்காயம் - ஒன்று, பூண்டு - 3 பல், மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், ஃபிரெஷ் கிரீம் - சிறிதளவு, மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய வெங்காயம், பூண்டு, சீரகம், மிளகு சேர்த்து வதக்கவும். அதனுடன் மஞ்சள் பூசணித் துண்டுகள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவைத்து இறக்கவும். பின்னர் ஆறவைத்து விழுதாக அரைக்கவும். வாணலியில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும், நறுக்கிய காளானை போட்டு வேகவைக்கவும். காளான் நன்றாக வெந்ததும், அரைத்து வைத்துள்ள மஞ்சள் பூசணி விழுதைச் சேர்த்து சூடானதும், உப்பு, மிளகுத்தூள் கலந்து இறக்கவும். ஃபிரெஷ் கிரீம் சேர்த்து சூடாக பரிமாறவும்.
டேட்ஸ் - குக்கும்பர் சூப்
தேவையானவை: பேரீச்சம்பழம் 5, சின்ன சைஸ் வெள்ளரிக்காய், பெரிய வெங்காயம் - தலா ஒன்று, மிளகு - அரை டீஸ்பூன், சூடான பால் - அரை கப், மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அகலமான பாத்திரத்தில், தண்ணீரை கொதிக்க வைத்து, நறுக்கிய வெங்காயம், வெள்ளரிக்காய், பேரீச்சம்பழம், மிளகு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வேக வைத்து இறக்கவும். ஆறியதும் மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். இந்த விழுதுடன், சூடான பால், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கலந்து பரிமாறவும்.
நாட்டு காய்கறி சூப்
தேவையானவை: மஞ்சள் பூசணித் துண்டுகள் - அரை கட், வெள்ளைப் பூசணித் துண்டுகள், சுரைக்காய் துண்டுகள், பீர்க்கங்காய் துண்டுகள் - தலா கால் கப், வெங்காயம் - ஒன்று, தக்காளி - 2, பூண்டு 2 பல், மஞ்சள்தூள் - கால் ஸ்பூன், மிளகுத்தூள், சீரகம் - தலா ஒரு ஸ்பூன், நல்லெண்ணெய், எலுமிச்சைச்சாறு - தலா 2 ஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்துமல்லித்தழை - கால் கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: காய்கறிகளுடன் மஞ்சள்தூள், தண்ணீர் சேர்த்து வேகவைத்து, ஆற வைத்து அரைத்து வடிகட்டவும். வாணலியில் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, தக்காளி, சீரகம் சேர்த்து வதக்கவும். பின்னர் வடிகட்டிய காய்கறிச்சாறு, தேவையான அளவு தண்ணீர், உப்பு, மிகுைத்தூள் சேர்த்து கொதிக்க விடவும். சூப் நன்றாக பொங்கியதும் இறக்கி, எலுமிச்சைச்சாறை விட்டு, கொத்துமல்லித்தழை தூவி பரிமாறவும்.
குதிரைவாலி - வெஜ் சூப்
தேனையானவை: குதிரைவாலி, வேகளைத்து அரைத்த தக்காவி விழுது - தலா கால் கப், பொடியாக நறுக்கிய கேரட் அரை கப், பொடியாக நறுக்கிய முட்டைக்கோஸ், பீன்ஸ் - தலா கால் கப், பச்சைமிளகாய், வெங்காயம் தலா ஒன்று, இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள், எண்ணெய் தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: குதிரைவாலியை நன்றாகக் கழுவி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் வீட்டு சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து அதக்கவும். பின்னர் நறுக்கிய காய்கறிகள், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி, அரைத்த தக்காளி விழுதைச் சேர்க்கவும். பின்னர் இரண்டரை கப் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்கவிடவும். காய்கறிகள் நன்றாக வெந்ததும், அரைத்து வைத்துள்ள குதிரைவாலி கலவையைச் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக வைந்து இறக்கவும். இறுதியாக மிளகுத்தூள் சேர்த்து பரிமாறவும். சூப் மிகவும் கெட்டியாக இருந்தால், சூடு தண்ணீர் கொஞ்சம் சேர்த்து கலந்து பரிமாறவும்.
டோஃபூ சூப்
தேவையானவை: டோஃபூ (சோயா பனீர்) வெங்காயம் - குடைமிளகாய் 50 கிராம், ஒன்று, பொடியாக நறுக்கிய கேரட், முட்டைக்கோஸ், - தலா கால் கப், நறுக்கிய இஞ்சி - அரை டீஸ்பூன், நறுக்கிய பூண்டு ஒரு டீஸ்பூன், சோயா சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், நறுக்கிய கொத்துமல்லித்தழை - சிறிதளவு, மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு சூடானாதும், பூண்டை சேர்த்து வதக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம், நறுக்கிய கேரட், முட்டைக்கோஸ், குடைமிளகாய், இஞ்சி என ஒவ்வொன்றாகச் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, பொடியாக நறுக்கிய டோஃபூ சேர்க்கவும். கலவை நன்றாக கொதித்து வரும்போது உப்பு, மிளகுத்தூள், சோயா சாஸ் சேர்த்து, நறுக்கிய கொத்துமல்லித்தழையைத் தூவி கலந்து பரிமாறவும். (Types of soup
A.B.C. Soup
Ingredients: half a cup of grated apple, grated beetroot, grated carrot - a quarter cup each, butter - one tablespoon, one onion, garlic - 2 cloves, cumin - half a teaspoon, a little fresh cream, pepper, salt - as needed.
Method: Heat ghee in a pan, add finely chopped onion, garlic and cumin seeds and saute well. Then add grated beetroot, grated carrot and saute until half cooked, finally add grated apple, water and boil it. Then let it cool and grind it in a mixer and filter it. Season with salt and pepper before serving, heat in the oven and top with fresh cream.
Mushkin soup
Ingredients: Finely chopped mushroom - half
cup, yellow pumpkin slices - one cup, onion - one, garlic - 3 cloves, pepper, cumin - half a teaspoon each, oil - 2 teaspoons, fresh cream - a little, peppercorns, salt - as needed.
Method: Pour oil in a pan and add chopped onion, garlic, cumin and pepper and saute. Add yellow pumpkin pieces, required amount of water and boil it. Then cool and grind to a paste. Boil a cup of water in a pan, add chopped mushrooms and boil. When the mushroom is cooked well, add the ground yellow pumpkin paste and heat it, add salt and pepper. Serve hot with fresh cream.
Dates - Cucumber Soup
Required: 5 dates, small size cucumber, big onion - one each, pepper - half teaspoon, hot milk - half cup, pepper, salt - as required.
Method: Boil water in a wide pan, add chopped onion, cucumber, dates and pepper and boil well. Once cool, grind in a mixer and strain. Mix this paste with hot milk, salt and pepper and serve.
Country vegetable soup
Ingredients: Yellow pumpkin pieces - half cut, White pumpkin pieces, Zucchini pieces, Birkaku pieces - 1/4 cup each, Onion - 1, Tomato - 2, Garlic 2 cloves, Turmeric powder - 1/4 spoon, Pepper, Cumin - 1 spoon each, Ghee, Lemon juice - 2 spoons each, finely chopped coriander leaves - quarter cup, salt - as required.
Method: Boil vegetables with turmeric powder and water, cool and grind and filter. Leave oil in a pan and fry finely chopped onions, garlic, tomatoes and cumin seeds. Then add strained vegetable juice, required amount of water, salt and turmeric powder and let it boil. When the soup boils well, strain it, leave the lemon juice and serve with a sprinkling of coriander leaves.
Horseradish - Veg Soup
Honey: Horseradish, ground horseradish paste - quarter cup each, finely chopped carrot half cup, finely chopped cabbage, beans - quarter cup each, green chillies, onion paste - one teaspoon each, ginger, garlic paste - one teaspoon each, peppercorns, oil one teaspoon each, Salt – as needed.
Method: Wash horseradish well, add little water and grind it coarsely. When the oil is hot in the pan, add finely chopped onion, ginger and garlic paste and fry it. Then saute the chopped vegetables, green chillies and add the grated tomato paste. Then boil two and half cups of water well. Once the vegetables are cooked well, add the ground horseradish mixture and cook on medium flame. Finally add paprika and serve. If the soup is too thick, add a little hot water and serve.
Tofu soup
Ingredients: Tofu (Soya Paneer) Onion - 50 gm wedges, one, finely chopped carrot, cabbage, - quarter cup each, chopped ginger - half teaspoon, chopped garlic one teaspoon, soy sauce - one tablespoon, oil - 2 tablespoon, chopped Coriander - little, pepper, salt - as required.
Method: Heat oil in a pan, add garlic and saute. Then add finely chopped onion, chopped carrot, cabbage, chillies and ginger one by one and saute well. Then pour required amount of water and add finely chopped tofu. When the mixture boils well, add salt, pepper, soy sauce, sprinkle with chopped coriander and serve.
கருத்துகள்
கருத்துரையிடுக