கத்தரிக்காய் தேங்காய் பால் குழம்பு
தேவையானவை: சிறிய கத்தரிக்காய் - 10, பூண்டு - 10, பச்சைமிளகாய் - 6,
கெட்டி தேங்காய்ப் பால் - 2 கப், உப்பு - சுவைக்கேற்ப, கொத்துமல்லித்தழை - 1 கப், முந்திரி - 10, நெய் - 4 ஸ்பூன். செய்முறை: பூண்டு, 4 பச்சைமிளகாய், கொத்துமல்லி, முந்திரி, உப்பு சேர்த்து விழுதாக அரைக்கவும்.
கத்தரிக்காயை நான்காக பிளக்கவும். உள்ளே உப்பு தடவி சிறிது நேரம் ஊற வைக்கவும். பின், அரைத்த விழுதை கத்தரிக்காய் உள்ளே ஸ்டஃப் செய்யவும். கடாயில் நெய் சேர்த்து, ஸ்டஃப் செய்யப்பட்ட கத்தரிக்காய்களை சேர்த்து, லேசாக வதக்கி, 1 கப் தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும். தேங்காய்ப்பால் சேர்க்கவும். 2 பச்சை மிளகாய்களை கிள்ளி சேர்க்கவும். தேங்காய்ப்பாலுக்குத் தேவையான உப்பு சேர்க்கவும். சேர்ந்து கொதிக்கும்போது அடுப்பை அணைக்கவும். மேலாக கொத்துமல்லித்தழை சேர்க்கவும்.
விழுப்புரம் பக்கங்களில், 'முள் கத்தரிக்காய்' என்று கிடைக்கும். அதில் செய்யப்படும் இந்தக் குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். ஒரு மாறுதலுக்கு, சப்பாத்தியுடன் சாப்பிட்டுப் பாருங்களேன்!
பைனாப்பிள் ரசம்
தேவையானவை: பாசிப்பருப்பு - 1/4 கப், மஞ் சள்தூள் - 4 ஸ்பூன், பச்சை மிளகாய் - 8, இஞ்சி - சிறிய துண்டு, பெங்களூர் தக்காளி - 1, பைனாப்பிள் துண்டங்கள் - 1 கப் (பொடியாக அரிந்தது), கொத்துமல்லி - சிறிதளவு, ஆரஞ்சு சாறு /4 கப், உப்பு - சுவைக்கேற்ப, நெய் - 2 ஸ்பூன்.
செய்முறை: பாசிப்பருப்பை, மஞ்சள்தூள் சேர்த்து குழைய வேகவைக்கவும். இத்துடன் 3 கப் தண்ணீர் சேர்த்து, நீர்க்க கரைக்கவும். உப்பு சேர்க்கவும். பெங்களூர் தக்காளியை வேக வைத்து, தோல் எடுத்து, மிக்ஸியில் அரைக்கவும். பாத்திரத்தில் நெய் ஊற்றி, நீளவாக்கில் அரிந்த பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், பைனாப்பிள் துண்டங்கள் சேர்த்து வதக்கவும். வெந்த பாசிப்பருப்பு சேர்க்கவும். அரைத்த தக்காளி, உப்பு சேர்க்கவும். பொங்கி 600 வரும்போது அடுப்பை அணைக்கவும். ஆரஞ்சு சாறு, கொத்துமல்லி சேர்க்கவும்.
பச்சை மோர்க்குழம்பு
தேவையானவை கெட்டியான மோர் (புனித்தது) - 2 கப், தனியா - 2 ஸ்பூன், வெந்தயம், கடலைப்பருப்பு % ஸ்பூன், மிளகாய் வற்றல் - 4, உப்பு - சூசிக்கேற்ப தேங்காய்த் துருவல் - 2 ஸ்பூன், பச்சை மிளகாய் 2, தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது.
(செய்முறை: வெறும் கடாயில் தனியா, கடலைப்பருப்பு, வெந்தயம் சேர்த்து வறுக்கவும், இத்துடன், தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய் சேர்த்து. தேவையான தண்ணீர் சேர்த்து, வழுவழுவென அரைக்கவும், கெட்டியான மோர், உப்பு, அரைத்த விழுது சேர்த்து கலக்கவும். தேங்காய் எண்ணெய், கறிவேப்பிலை சேர்த்து மூடி வைக்கவும்..
தஞ்சாவூர் தவலை வடை
தேடையால்வை: கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, பச்சரிசி தல கால் கப், பாசிப்பருப்பு - 2 ஸ்பூன், மிளகாய் வற்றல் - 8. கறிவேப்பிலை - 2 ஆர்க்குகள், உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப, பொடியாக அரிந்த தேங்காய்த் துண்டுகள் - 1 5ப், கடுகு - 1 ஸ்பூன், கொத்துமல்லித்தழை - சிறிதளவு, பெருங்காயத்தூள் - ஸ்பூன். செய்முறை பாசிப்பருப்பை தனியாக ஊற வைக்கவும். மீதமுள்ள பருப்புகளை ஒன்றாக ஊற வைக்கவும். நீரை வடித்து, உப்பு, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல், பெருங்காயத்தூள் சோத்து, கரகரப்பாக அரைக்கவும். அரைத்த மாவில், ஊறவைத்த பாசிப்பருப்பை, நீரில்லாமல் பிழிந்து போடவும். தேங்காய்த் துண்டுகள், கொத்துமல்லித் தழை சேர்க்கவும். 1 ஸ்பூன் உண்ணெயில் கடுகு தாளித்து மாவுடன் சேர்க்கவும். எல்லாம் ஒன்றாக கலக்கவும். ' எண்ணெயை மிதமான சூட்டில் வைக்கவும், மாவை, ஒரு குழிக்கரண்டியில் எடுத்து,.
எண்ணெயில் போட்டு, மொறுமொறுவென பொரித்தெடுக்கவும்." இது வெளியில் கரகரப்பாகவும், உள்ளே மிருதுவாகவும் இருக்கும்.
கருத்துகள்
கருத்துரையிடுக