பாதாம் ஷோர்பா
தேவையானவை: பாதாம் - 1 கைப்பிடி, பால், தண்ணீர் ஒன்றரை கப், வெண்ணெய் - 1 டீஸ்பூன், ஆல் பனிப்பல் அரை டீஸ்பூன், உப்பு - கால் டீஸ்பூன், சர்க்கரை, கரம் மச - தலா 1 சிட்டிகை, வெள்ளை மிளகுத்தூள் கால்
செய்முறை: பாதாமை வெந்நீரில் ஒருமணி நேரம் ஊறவைத்துத் தோலை உரிக்கவும். தோல் நீக்கிய பாதாமுடன் அரை கப் பால சேர்த்து நன்றாக அரைக்கவும். ஒரு பானில் வெண்ணெய் உருகவைத்து, ஆல் பர்ப்பஸ் மாவை சேர்த்து வாசனை வரும்படி நிலம் மாறாதவாறு நன்றாக வறுத்து, பாலைச் சேர்த்துக் கரைத்துக் கொதிக்கவிடவும். பின்ன அரைத்த பாதாமைச் சேர்த்து, ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி, இரண்டு நிமிடங்கள் கொதிக்க விடவும். பின்னர் உப்பு, வெள்ளை மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள், ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலந்து அடுப்பிலிருந்து இறக்கவும். வெதுவெதுப்பான சூட்டில் பரிமாறவும்.
இளநீர்’ ரசம்
தேவையானவை: இளநீர் துவரம்பருப்பு 2, வேகவைத்த 1 டேபிள் ஸ்பூன், தக்காளி, வரமிளகாய் - தலா 1, மிளகு, சீரகம், உப்பு - தலா 2 களை, டீஸ்பூன், கடுகு, வெந்தயம் தலா 1/2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் 1 சிட்டிகை, புளி எண்ணெய் / நெய் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - 1 இணுக்கு. செய்முறை: புளி, உப்பை 1/2 கப் தண்ணீரில் கரைத்து, நறுக்கிய தக்காளி, இளநீர் வழுக்கையைச் சேர்த்து பிசைந்து வைக்கவும். பின்னர் அதனுடன் வரமிளகாய், மிளகு, சீரகத்தைப் பொடித்துச் சேர்க்கவும், வேகவைத்த துவரம்பருப்பைக் கரைத்து ஊற்றவும். எண்ணெய் / நெய்யைக் காயவைத்து கடுகு, சீரகம், வெந்தயம் தாளித்து, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து, கரைத்துவைத்த கலவையை ஊற்றவும். அது சூடேறி வரும்போது இளநீரை ஊற்றி, ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
வேப்பம்பூ லெமன் ரசம்
தேவையானவை: வேப்டம்பூ - 1 கைப்பிடி, எலுமிச்சை, வரமிளகாய் - தலா 1, நெய், மிளகு-சீரகத்தூள், மஞ் சள்தூள், நறுக்கிய கொத்துமல்லித்தழை, கடுகு - தலா 1 டீஸ்பூன், பருப்புக் கடைந்த தண்ணீர் 2 கப், வெந்தயம், சீரகம், உப்பு - தலா 1/2 டீஸ்பூன், = கறிவேப்பிலை
செய்முறை: ஒரு பாத்திரத்தில் நெய்யைக் காயவைத்து கடுகைப் போடவும். அது வெடித்ததும் வெந்தயம், சீரகம் போட்டு பொரிந்ததும், இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய், கறிவேப்பிலையைச் சேர்க்கவும். பின்னர் வேப்பம்பூவைப் புரட்டி வறுத்து, பருப்புக் கடைந்தத் தண்ணீரை ஊற்றவும். அதில் மிளகு-சீரகத்தூள், மஞ் சள்தூள், உப்பைச் சேர்க்கவும். நுரைத்து வரும்போது அடுப்பிலிருந்து இறக்கி, எலுமிச்சையை சாறு பிழிந்து விடவும். பின்னர் கொத்துமல்லித்தழையைப் போட்டு மூடி வைக்கவும். சிறிது நேரம் கழித்து பரிமாறவும். பித்தம் போக்கும் ரசம் இது !
தூதுவளை ரசம்
தேவையானவை: தூதுவளை 1 கட்டு, வேகவைத்த துவரம்பருப்பு 1 டேபிள் ஸ்பூன், புளி - நெல்லிக்காயளவு, மிளகு, உப்பு - தலா 1/2 டீஸ்பூன், வரமிளகாய் - 2, சீரகம், கடுகு, எண்ணெய் தலா 1 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை, மல்லித்தூள், வெந்தயம் - தலா 1/2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன், பூண்டு பற்கள் - 2. மல்லித்தாள், தூதுவளை ரசம்
செய்முறை: தூதுவளையை ஆய்ந்து முள்ளை நீக்கிக் கழுவி வைக்கவும். சிறிய உரலில் வரமிளகாய், மிளகு, சீரகத்தைப் பொடித்து, பூண்டு, தூதுவளையை ஒன்றிரண்டாக நைத்து வைக்கவும், புளியை ஊறவைத்து, 2 கப் சாறெடுத்து உப்பு சேர்த்து வைக்கவும். பருப்பைக் கடைந்து புளித்தண்ணீரில் சேர்க்கவும். அதனுடன் மஞ்சள்தூள், மல்லித்தூள் சேர்க்கவும். கடாயில் எண்ணெய்யைக் காயவைத்து, கடுகைப் போட்டு வெடிக்கவிடவும். பின்னர் சீரகம், வெந்தயம், பெருங்காயத்தூளைப் போடவும். பின்னர் நைத்த விழுதைச் சேர்த்து அரை நிமிடம் வதக்கி, புளித்தண்ணீரை ஊற்றவும். நுரைத்துப் பொங்கி வரும்போது அடுப்பிலிருந்து இறக்கவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக