மைசூர் ரசம்
தேவையானவை: கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, தனியா, மிளகு, கடுகு - தலா ஒரு டீஸ்பூன், நெய் - ஒரு டேபிள் ஸ்பூன், துவரம் பருப்பு - ஒரு கப், புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் சிறிதளவு நெய் விட்டு கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், தனியா, துவரம் பருப்பு, மிளகு ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்து மிக்ஸியில் போடவும். சிறிதளவு தண்ணீர் விட்டு நைஸாக அரைத்துக் கொள்ளவும். புளியைக் கரைத்து அடுப்பில் வைக்கவும். பின்னர் அரைத்த விழுது, உப்பு சேர்த்து கொதிக்க விடவும். ஒரு கப் துவரம் பருப்பை குழைய வேக வைத்து நன்றாக கரைத்து, கொதிக்கும் ரசத்துடன் சேர்க்கவும். மீதமுள்ள நெய்யை வாணலியில் விட்டு கடுகை தாளித்துக் கொட்டி இறக்கவும்.
பூண்டு ரசம்
தேவையானவை: உரித்த பூண்டு - 10 பல், காய்ந்த
மிளகாய் - 2, மிளகு, கடுகு, நெய் - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்புலை - சிறிதளவு, புளி - நெல்லிக்காய் அளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் நெய் விட்டு பூண்டை வதக்கி, தனியாக வைக்கவும். அதே வாணலியில் மறுபடியும் சிறிதளவு நெய் விட்டு மிளகு, காய்ந்த மிளகாயை வறுத்து மிக்ஸியில் போட்டு, உப்பு சேர்த்து அரைக்கவும்.. புளியைக் கரைத்து அடுப்பில் வைத்து, மிக்ஸியில் அரைத்ததைப் போட்டு கொதிக்கவிடவும். பின்னர் வதக்கிய பூண்டை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும். மீதமுள்ள நெய்யை வாணலியில் விட்டு கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து கொட்டி, கலந்து பரிமாறவும்.
ஓம ரசம்
தேவையானவை: ஓமம் ஒரு டேபிள் ஸ்பூன் கொஞ்சம் புளிப்பான மோர் - 500 அரிசி யாதெய், கடுகு - தல ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு
செய்முறை: வெறும் வாணவியில் ஓமத்தை வறுத்துக் கொள்ளவும். புளித்த மோரில் உப்பு, அரிசிமாவை சேர்த்து கரைத்து அடுப்பில் வைக்கவும். பின்னர் வறுத்த ஓமத்தை சேர்க்கவும் வாணலியில் நெய் விட்டு கடுகை தாளித்துக் கொட்டி ஒரு கொதி வந்ததும் இறக்கவும்
பருப்பு உருண்டை ரசம்
தேவையானவை: கடலைப்பருப்பு துவரம் பருப்பு - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 2 டேபிள் ஸ்பூன், டேபிள் ஸ்பூன், எண்ணெய், கடுகு, நெய் - தலா ஒரு டீஸ்பூன், புளி - 4, சாம்பார்ப்பொடி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, காய்ந்த மிளகாயை ஒரு மணி நேரம் ஊற வைத்து, கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி இட்லி தட்டில் பரப்பி, ஆவியில் வேக வைத்து எடுக்கவும். புளியைக் கரைத்து அடுப்பில் வைத்து, சாம்பார்ப் பொடி, உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். பின்னர் வேக வைத்த உருண்டைகளை போடவும். வாணலியில் நெய் விட்டு காய்ந்ததும் கடுகை தாளித்து, ரசத்தில் கொட்டி இறக்கவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக