வேப்பம்பூ ரசம்
தேவையானவை: வேப்பம்பூ - நான்கு டேபிள் ஸ்பூன், புளி ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, கடுகு, நெய் - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புளியைக் கரைத்து உப்பு சேர்த்து அடுப்பில் வைக்கவும். வாணலியில் நெய் விட்டு, காய்ந்த மிளகாயை கிள்ளிப் போட்டு, கடுகு, வேப்பம்பூ சேர்த்து வறுக்கவும். இந்தக் கலவையை ரசத்துடன் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து இறக்கவும்.
கண்டந்திப்பிலி ரசம்
தேவையானவை: கண்டந்திப்பிலி 20கிராம், துவரம் பருப்பு, மிளகு, நெய் - தலா ஒரு டேபிள் ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கடுகு - ஒரு டீஸ்பூன், புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, உப்பு தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் சிறிதளவு நெய் விட்டு துவரம் பருப்பு, காய்ந்த மிளகாய், மிளகு, கண்டந்திப்பிலித் துண்டுகளை போட்டு வறுத்து ஆறவைக்கவும். பின்னர் அவற்றை மிக்ஸியில் போட்டு, சிறிதளவு தண்ணீர் விட்டு நைஸாக அரைக்கவும். இந்தக் கலவையை அடுப்பில் வைத்து, புளியைக் கரைத்து ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விடவும். வாணலியில் நெய் விட்டு கடுகை தாளித்துக் கொட்டி இறக்கவும்.
கொள்ளு ரசம்
தேவையானவை: கொள்ளு
100 கிராம், புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, கடுகு, நெய் - தலா ஒரு டீஸ்பூன், சாம்பார்ப்பொடி - ஒரு டேபிள் ஸ்பூன், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு. -
செய்முறை: கொள்ளை வெறும் வாணலியில் வறுத்து, மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். புளியை நன்றாக கரைத்து, அடுப்பில் வைக்கவும். அதனுடன் சாம்பார்ப்பொடி, உப்பு, வறுத்துப் பொடித்த கொள்ளுப் பொடி ஆகியவற்றை சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். வாணலியில் நெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு தாளித்துக் கொட்டி இறக்கவும்.
சீரக ரசம்
தேவையானவை: சீரகம், கடுகு தலா ஒரு டீஸ்பூன், துவரம் பருப்பு, நெய் - தலா ஒரு டேபிள் ஸ்பூன், சாம்பார்ப்பொடி - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, புளி - எலுமிச்சை அளவு, உப்பு தேவையான அளவு.
செய்முறை: அகலமான பாத்திரத்தில் புளியைக் கரைத்து அடுப்பில் வைக்கவும். பின்னர் சீரகம், துவரம் பருப்பை அரைத்து சேர்த்து, சாம்பார்ப்பொடி, உப்பு சேர்த்து கொதிக்க விடவும். வாணலியில் நெய் விட்டு கடுகு பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்து கொட்டி இறக்கவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக