கேபேஜ் சூப்
தேவையானவை: முட்டைக்கோஸ் - 1/4 பாகம், உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் - தலா 1, பால் - 2 கப், மைதா - 1 டீஸ்பூன், வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், பூண்டு பற்கள் - 2, மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன், உப்பு - 1 /2 டீஸ்பூன்.
செய்முறை: முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு, பூண்டு, பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி, குக்கரில் போட்டு ஒரு விசில் வேகவைத்து எடுக்கவும். ஆறியதும், மிக்ஸியில் அரைத்து வைக்கவும். ஒரு பானில் வெண்ணெய்யை உருக்கி, அதில் மைதாவைப் போட்டு வறுக்கவும். பின்னர் பாலை ஊற்றிக் கொதிக்க விடவும். கலவை நன்றாகக் கொதித்து கண்ணாடி போலானதும் அரைத்த கோஸ் கலவையைச் சேர்த்து மிதமான சூட்டில் இறக்கவும். பின்னர் உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறவும்.
தேவையானவை: வறுத்து அரைத்த கொள்ளுப்
கொள்ளு பார்லி சூப்
பொடி, வறுத்து அரைத்த பார்லிப் பொடி தலா 1 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலைப் பொடி - 1/2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - 1 சிட்டிகை, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி (இரண்டும் சேர்த்து) - கால் கப், மிளகு-சீரகப் பொடி அரை டீஸ்பூன், எண்ணெய், சோம்பு தலா 1/ 2 டீஸ்பூன், மராட்டி மொக்கு, கிராம்பு - தலா 1.
செய்முறை: பிரஷர் பானில் எண்ணெய் ஊற்றி, சோம்பு, மராட்டி மொக்கு, கிராம்பு தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பின்னர் 2 கப் தண்ணீர் சேர்த்து, மஞ்சள்தூள், கொள்ளுப் பொடி, பார்லிப் பொடி, கறிவேப்பிலைப் பொடி, உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து மூடவும். ஒரு விசில் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி, ஆறியதும் மிளகு-சீரகப் பொடியைக் கலந்து, மிதமான சூட்டில் பரிமாறவும். உடல் எடையைக் குறைக்க உதவும் சூப் இது!
பேபி கார்ன் சூப்
தேவையானவை: பேபி கார்ன் 2 / உதிர்த்த ஸ்வீட் கார்ன் - அரை கப், பெரிய வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், கிராம்பு, ஏலக்காய் - தலா 1, கறிவேப்பிலை - 1 மீன், மஞ்சள்தூள் - 1 சிட்டிகை, பருப்பு வேகவைத்த தண்ணீர் - 2 கப், எண்ணெய்
1 டீஸ்பூன், சோம்பு, சீரகம், மிளகு - தலா 1/2 டீஸ்பூன், உப்பு
1/2 டீஸ்பூன், பால் - 1 டேபிள் ஸ்பூன்.
செய்முறை: பேபி கார்னை வட்டமாக நறுக்கவும். வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் நறுக்கவும். பச்சைமிளகாயைக் கீறி வைக்கவும். பிரஷர் பானில் எண்ணெயைக் காயவைத்து சோம்பு, சீரகம், மிளகாய்ப் போடவும். பின்னர் கிராம்பு, ஏலக்காயைச் சேர்க்கவும். அனைத்தும் பொரிந்ததும் கறிவேப்பிலை, கீறிய பச்சைமிளகாய், பேபி கார்ன் / ஸ்வீட் கார்ன் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி, மஞ்சள்தூள், பருப்பு வேகவைத்த தண்ணீர், உப்பு சேர்த்து மூடவும். ஒரு விசில் வந்ததும் இறக்கி, 1 டேபிள் ஸ்பூன் பாலைக் கலந்து சூடாகப் பரிமாறவும்.
தேவையானவை: முற்றிய வெண்டைக்காய் - 10 / முற்றிய சுண்டைக்காய் - ஒருப்பிடி கையளவு (தோராயமாக 30), பெரிய வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் - தலா 1, கறிவேப்பிலை - 1 மீன், மஞ்சள்தூள் - 1 சிட்டிகை, பாசிப்பருப்பு 1 கைப்பிடி, எண்ணெய் - 1 சோம்பு, டீஸ்பூன், , மிளகு, உப்பு - தலா 1/2 டீஸ்பூன், பிரிஞ்சி இலை - 1, பட்டை - 1 துண்டு. பாசிப்பருப்பை வேகவைத்து, 2 கப் தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து சோம்பு, சீரகம், மிளகாய்ப் போடவும். பின்னர் பிரிஞ்சி இலை, பட்டை சேர்த்து அனைத்தும் பொரிந்தது, கறிவேப்பிலை, பச்சைமிளகாய், வெண்டைக்காய் / சுண்டைக்காய் சேர்த்து வதக்கவும். இரண்டு நிமிடம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். இதில் மஞ்சள்தூளைச் சேர்த்து, பருப்புக் கரைத்த தண்ணீரை ஊற்றிக் கொதிக்க விடவும். நன்றாகக் கொதித்து வெந்ததும், உப்பு சேர்த்து வடிகட்டி பரிமாறவும்.
செய்முறை:
வெண்டைக்காயை நன்றாகக் கழுவித்துடைத்துநறுக்கிக்கொள்ளவும் / சுண்டைக்காயை நறுக்கி தண்ணீரில் போடவும். பெரிய வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் நறுக்கவும். பச்சைமிளகாயைக் கீறி வைக்கவும்.
குறிப்பு: குழந்தைகளுக்குக் கொடுப்பதற்கு ஏற்ற சத்தான சூப் இது!
தேவையானவை: முற்றிய வெண்டைக்காய் - 10 / முற்றிய சுண்டைக்காய் - ஒரு கைப்பிடியளவு (தோராயமாக 30), பெரிய வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் - தலா 1, கறிவேப்பிலை - 1 இணுக்கு, மஞ் சள்தூள் - 1 சிட்டிகை, பாசிப்பருப்பு 1 கைப்பிடி, எண்ணெய் - 1 டீஸ்பூன், சோம்பு, சீரகம், மிளகு, உப்பு - தலா 1/2 டீஸ்பூன், பிரிஞ்சி இலை - 1, பட்டை - 1 துண்டு.
செய்முறை: வெண்டைக்காயை நன்றாகக் கழுவித் துடைத்து
நறுக்கிக்கொள்ளவும் / சுண்டைக்காயை நறுக்கி தண்ணீரில் போடவும். பெரிய வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் நறுக்கவும். பச்சைமிளகாயைக் கீறி வைக்கவும்.
பாசிப்பருப்பை வேகவைத்து, 2 கப் தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து சோம்பு, சீரகம், மிளகைப் போடவும். பின்னர் பிரிஞ்சி இலை, பட்டை சேர்த்து அனைத்தும் பொரிந்ததும், கறிவேப்பிலை, பச்சைமிளகாய், வெண்டைக்காய் / சுண்டைக்காய் சேர்த்து வதக்கவும். இரண்டு நிமிடம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய வெங்காயம், தக்காளிச் சேர்த்து வதக்கவும். இதில் மஞ்சள்தூளைச் சேர்த்து, பருப்புக் கரைத்த தண்ணீரை ஊற்றிக் கொதிக்க விடவும். நன்றாகக் கொதித்து வெந்ததும், உப்பு சேர்த்து வடிகட்டி பரிமாறவும்.
குறிப்பு: குழந்தைகளுக்குக் கொடுப்பதற்கு ஏற்ற சத்தான சூப் இது!
கருத்துகள்
கருத்துரையிடுக