பச்சைமிளகாய் குழம்பு
தேவையானவை : பச்சை மிளகாய் - 5, அதிக 'திக்' இல்லாத புளிக்கரைசல் 1/2 கப், வெல்லம், மஞ்சள்தூள் கடுகு தலா சிறிதளவு, ஒரு டீஸ்பூன், வெந்தயம் - 1/2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. வறுத்து பொடிக்க: துவரம்
பருப்பு, தனியா - தலா 2 டீஸ்பூன், அரிசி - 3 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, (எல்லாவற்றையும் வாணலியில் எண்ணெய் விடாமல் சிவக்க வறுத்து, ஆறியதும் பொடிக்கவும்).
செய்முறை : பச்சை மிளகாய்களை பாதிவரை மட்டும் இரண்டாக பிளக்கவும்.. வாணலியில் எண்ணெய் விட்டு அதில் கீறிய பச்சைமிளகாய்களை நன்கு நிறம் மாறும்வரை வதக்க வேண்டும். அப்போதுதான் குழம்பில் காரம் எக்கச்சக்கமாக இருக்காது. புளிக்கரைசலுடன், உப்பு, மஞ்சள்தூள் போட்டு புளிவாசம் போகும்வரை கொதிக்க விடவும். பிறகு இதில் பொடித்த பொடியைப் போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும். கொதிக்கும் போது பச்சைமிளகாயைப் போட்டு உடனே கீழே இறக்கி விடவும். கடுகு, வெந்தயம் தாளித்துக் கொட்டி பரிமாறவும். தேவைப்பட்டால் நெய்யை சேர்த்துக்கொள்ளவும்.
காரமுறுக்கு
தேவையானவை :
இட்லி புழுங்கலரிசி - ஒரு கப், காய்ந்த மிளகாய் 4, வெண்ணெய் 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, பொட்டுக்கடலை மாவு கால் கப், எள் சிறிதளவு, உப்பு, எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை :
அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய அரிசியுடன் காய்ந்த மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, தண்ணீர் தெளித்து நைசாக அரைக்கவும். இத்துடன் எள், பொட்டுக்கடலை மாவு, வெண்ணெய் சேர்த்துப் பிசையவும். பிசைந்தமாவை முள்முறுக்கு (அ) உங்களுக்குப் பிடித்த அச்சில் போட்டு சூடான எண்ணெயில் பிழிந்து விடவும். முறுக்கு நன்றாக மொறுமொறுவென்று வெந்தவுடன் எடுத்து விடவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக