ப்ரோக்கோலி ப்ரோக்கோலி சூப்
தேவையானவை: ப்ரோக்கோலி | வயலட் நிற முட்டைக்கோஸ் - 1/2 பாகம், பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 2, உப்பு - 1/2 டீஸ்பூன், மிளகுத்தூள் 1/4 டீஸ்பூன், வெண்ணெய் / ஃப்ரெஷ் க்ரீம் டீஸ்பூன் (விருப்பப்பட்டால்). 1
செய்முறை: ப்ரோக்கோலி, வெங்காயம், தக்காளியை நறுக்கி, குக்கரில் போடவும். பின்னர் அவை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து ஒரு விசில் வரும் வரை வேகவைத்து இறக்கவும். ஆறியதும், குக்கரைத் திறந்து, அந்தக் கலவையை மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். பின்னர் அதை சூடுபடுத்தி உப்பு சேர்த்து கலந்து, மேலாக மிளகுத்தூளை தூவவும். ணய் / ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்துப் பரிமாறவும்.
ஸ்ப்ரிங் ஆனியன் சூப்
தேவையானவை: வெங்காயத்தாள்
1கட்டு, சிறிய சைஸ் உருளைக்கிழங்கு - 1, பூண்டு பற்கள் 2, ஆரிகானோ, சோயா சாஸ், மிளகுத்தூள் - தலா 1/4 டீஸ்பூன், ஆலிவ் ஆயில் - 1 டீஸ்பூன், உப்பு - 1/2 டீஸ்பூன், தண்ணீர் 4 கப், கொத்துமல்லித்தழை - சிறிதளவு, ஃப்ரெஷ் க்ரீம் சிறிதளவு (விருப்பப்பட்டால்). -
செய்முறை: வெங்காயத்தாளை சுத்தம் செய்து, அலசி, பொடியாக நறுக்கவும். உருளைக்கிழங்கின் தோலை சீவி பொடியாக நறுக்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்து உரித்த பூண்டு, வெங்காயத்தாள், உருளையைப் போட்டு வதக்கி, 4 கப் தண்ணீர் ஊற்றி, மூடி போட்டு வேகவிடவும். பின்னர் இறக்கி ஆறவைத்து மிக்ஸியில் அரைத்து, திரும்பவும் அதை பானில் ஊற்றிக் கொதிக்கவிடவும். பின்னர் சோயா சாஸ், உப்பு, ஆரிகானோ, கொத்துமல்லித்தழை, உப்பு சேர்த்து இறக்கி, மிளகுத்தூள் மற்றும் ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து பரிமாறவும்.
ஓட்ஸ் வெஜ் சூப்
தேவையானவை: ஓட்ஸ் 50 கிராம்,சிறிய சைஸ் வெங்காயம், தக்காளி - தலா 1, பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ் (இரண்டும் சேர்த்து) - கால் கப், பச்சைப் பட்டாணி - 2 டீஸ்பூன், சீரகம், மிளகு (பொடித்தது) 1 டீஸ்பூன், ஆம்சூர் பொடி - 1/4 சிட்டிகை, தண்ணீர் 3 கப், உப்பு - 1/2 டீஸ்பூன், வெண்ணெய் 1 டீஸ்பூன்.
செய்முறை:
தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைக்கவும். அதில் ஓட்ஸை போட்டு வேகவிடவும். பின்னர் கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, தக்காளி, வெங்காயத்தை சேர்த்து வேகவிடவும். வெந்ததும், கண்ணாடி போல ஒட்டாமல் வரும்போது, மிளகு, சீரகப் பொடி, ஆம்சூர் பொடி, உப்பு, வெண்ணெய் சேர்த்து நன்றாகக் கலந்து அடுப்பிலிருந்து இறக்கவும். 'வீல் சிப்ஸ்' மாதிரியான ஃப்ரையம்ஸுடன் (Fryums) பரிமாறவும். இந்த சூப்பை ஒரு வேளைக்கான உணவாக எடுத்துக்கொள்ளலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக