இனிப்பு வெங்காயக் குழம்பு
தேவையானவை : நறுக்கிய சிறிய வெங்காயம் ஒரு கப், புளிக்கரைசல் அரை கப், மஞ்சள்தூள் - சிறிதளவு, குழம்பு மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், வெல்லம் சிறிதளவு, உப்பு, எண்ணெய் தேவையான அளவு. செய்முறை: வாணலியில் எண்ணெய் டு அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். இத்துடன் புளிக்கரைசல், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், வெல்லம் ஆகியவைகளைப் போட்டு புளிவாசம் போகும் வரை நன்கு கொதிக்க விடவும். வீட்டில் காய்கறிகள் இல்லா நேரத்தில் சூப்பரான குழம்பு ரெடி
பஜ்ஜி
தேவையானவை : வாழைக்காய் (அ) வெங்காயம் (அ) மிளகாய் தேவைக்கு இட்லி புழுங்கலரிசி - ஒரு கப், துவரம் பருப்பு 1/4 கப். தனியா 2 10 காய்ந்த மிளகாய் 4. கடலை மாவு ஒரு டேபிள் ஸ்பூன், சோடா உப்பு - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள், உப்பு, எண்ணெய் தேவையான அளவு. செய்முறை: அரிசி, பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். இத்துடன் தனியா, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து நைசாக அரைக்கவும். இந்த மாவுடன் கடலை மாவு, சோடா உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைக்கவும். வாழைக்காய் (அ) வெங்காயத்தை தோல் சீவி மெல்லியதாக சீவி வைத்துக் கொள்ளவும். சீவிய துண்டுகளை ரெடியாகவுள்ள மாவில் முக்கியெடுத்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்
புளி உப்புமா
தேவையானவை : இட்லி புழுங்கலரிசி ஒரு கப், துவரம் பருப்பு - 1/2 கப், காய்ந்த மிளகாய் 5, கறிவேப்பிலை - சிறிதளவு, புளி - சிறிய நெல்லி அளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: அரிசி, பருப்புடன் புளியையும் சில் ஒரு மணி நேரம் வைக்கவும். ஊறியவைகளுடன் 3 காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து நைசாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, 2 காய்ந்த மிளகாய் தாளித்து, அதில் அரைத்த கலவையைப் போட்டு நன்றாக கிளறிக்கொண்டே இருக்கவும். 1/2 மணி நேரம் இப்படி கிளறிக் கொண்டே இருந்தால் புளி உப்புமா நன்றாக வெந்து உதிர் உதிராக வந்துவிடும்.
கருத்துகள்
கருத்துரையிடுக