கறிவேப்பிலை - கடலை சாதம்
தேவையானவை: ஒரு கப், கறுப்பு கொண்டைக்கடலை - ஒரு பிடி துவரம் பகுப்பு - 4 டேபிள் ஸ்பூன், கலைப்பருப்பு - 2 டேபிள் காய்ந்த மிளகாய் -6, மிளகு - 4. புளி - கொட்டைபாக்களவு, உப்பு, பெருங்காயம், எண்ணெய் தேவையானஅளவு.கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊறவிடவும். வெறும் வாணலியில் கறிவேப்பிலை. துவரம்பருப்பு, கடலைப் பகுப்பு, காய்ந்த மிளகாய், மிளகு ஆகியவற்றை வறுத்து * ஆறவைத்து மிக்ஸியில் போடவும். அதனுடன் புளி, உப்பு, பெருங்காயம் சேர்த்து பொடிக்கவும். அரிசியை களைந்து, முதல் * நாள் இரவு ஊற வைத்த கொண்டைக்கடலை சேர்த்து வேக விடவும். பின்னர் அரிசி - கடலை கலவையுடன் அரைத்த பொடியைச் சேர்த்து கிளறி இறக்கி, சூடாக பரிமாறவும்.
கறிவேப்பிலை கலவை சட்னி
கறிவேப்பிலை - ஒரு கப், கடலைப்பருப்பு - 4 டேபிள் ஸ்பூன், உளுந்தம்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன், பூண்டு - 6 பல், தேங்காய்த்துருவல் - 4 டேபிள் ஸ்பூன், வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, கடுகு, சீரகம், கொத்துமல்லித்தழை . சிறிதளவு, உப்பு, பெருங்காயம், எண்ணெய் - தேவையான அளவு.
வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, சீரகம், பெருங்காயம் போட்டு தாளிக்கவும். பின்னர் பருப்பு வகைகள், பூண்டு. சுத்தம் செய்த கறிவேப்பிலை, கொத்துமல்லித்தழை, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, உப்பு, தேங்காய்த்துருவல் ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கி ஆறவைக்கவும். பின்னர் அதை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும். இந்தச் சட்னியை இட்லி (அ) தோசையுடன் பரிமாறவும். கறிவேப்பிலை
-மோர் அமுது
செய்முறை: மோர் - ஒரு டம்ளர்,
கறிவேப்பிலை - 10 இலைகள், சீரகம் - அரை டீஸ்பூன், உப்பு, பெருங்காயம் - தேவையான அளவு.
கறிவேப்பிலையை சுத்தம் செய்து சீரகம் சேர்த்து அரைத்து வடிகட்டி தனியாக வைக்கவும். மோருடன் உப்பு, பெருங்காயம், கறிவேப்பிலைச்சாறு சேர்த்து கலந்து பரிமாறவும். வெயில்
காலங்களில் இதை பருகினால் இதமாக இருக்கும்!
கறிவேப்பிலை - மல்லி ஊத்தப்பம்
தேவையானவை:
கறிவேப்பிலை,கொத்துமல்லித்தழை - தலா ஒரு கைப்பிடியளவு, தோசை மாவு - ஒரு கப், பச்சைமிளகாய், பெரிய வெங்காயம் - தலா 2, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, கடுகு - சிறிதளவு, உப்பு, எண்ணெய் தேவையான அளவு.
வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகியவற்றைப் போட்டு தாளிக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்கி, கொத்துமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து கிளறி இறக்கவும். இந்தக் கலவையை தோசை மாவுடன் கலந்து, சற்று கனமான தோசைகளாக வார்க்கவும். சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் நன்றாக வேக வைத்து எடுக்கவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக