நூல்கோல் குருமா
தேவையானவை: தோல் நீக்கி நறுக்கிய நூல்கோல் .ஒரு கப் பச்சைப்பாணி டேபிள் ஸ்பூன், பெரிய வெங்காயம், தக்காளி தலா ஒன்று, தயிர் ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு, எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், அரைக்க தேங்காய்த்துருவல் 4 டேபிள் ஸ்பூன், பச்சைமிளகாய் - ஒன்று, இஞ்சி சிறிய துண்டு, பூண்டு - 3 பற்கள், சோம்பு அரை டீஸ்பூன், மசாலா பவுடர்கள்: சில்லி பவுடர் ஒரு டேபிள் ஸ்பூன் மஞ்சல்தூள் அரை டீஸ்பூன்மேலே தூவி அலங்கரிக்க: தறுக்கிய கொத்துமல்லித்தழை - ஒரு டேபிள் ஸ்பூன்,
செய்முறை அரைக்கக் கொடுத்துள்ளவற்றுடன் தண்ணீர் சேர்த்து
கெட்டியாக நைசாக அரைக்கவும். நூல்கோலுடன் உப்பு சேர்த்து, அளவான தண்ணீர் விட்டு வேகவிடவும் வாலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், தக்காளி மசாலா பவுடர்கள் சேர்த்து வதக்கி, வெந்த நூல்கோலை நீருடன் சேர்க்கவும், பின்னர் பச்சைப்பட்டாணியைச் சேர்த்து தேவைப்பட்டால் சிறிதளவு உப்பு, கொஞ்சம் தண்ணீர் விட்டு பாத்திரத்தை மூடவும். எல்லாமும் ஒன்று சேர்ந்து, காய் நன்றாக வெந்ததும், அரைத்த விழுதைச் சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் தயிர் சேர்த்து இரண்டு கொதி வந்ததும், நறுக்கிய
கொத்துமல்லித்தழைத் தூவி இறக்கவும். குறிப்பு: சப்பாத்தி / பூரி / இடியாப்பத்திற்கு தொட்டுக்கொள்ள ஏற்றது.
கோபி டிரை குருமா
தேவையானவை: சுத்தம் செய்து உதிர்த்த காலிஃபிளவர் உருளைக்கிழங்கு ஒரு கப், நறுக்கிய கால் கப், எண்ணெய் பொரிப்பதற்கு, உப்பு - தேவைக்கு, பெரிய வெங்காயம் ஒன்று, பச்சைமிளகாய் 2,இஞ்சி, பூண்டு விழுது ஒரு டேபிள் ஸ்பூன், தனியா பவுடர், சில்லி பவுடர், நறுக்கிய மல்லித்தழை - தலா ஒரு டேபிள் ஸ்பூன், கரம் மசாலா - ஒரு டீஸ்பூன், தக்காளி - ஒன்று.
செய்முறை: வாணலியில் எண்ணெய் ஊற்றி, காலிஃபிளவரை பொரித்து தனியே வைக்கவும். பிறகு உருளைக்கிழங்கை பொரித்து வைக்கவும். அதே வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு விழுதை வதக்கவும். பின்னர் உப்பு, நறுக்கிய தக்காளி, சில்லி பவுடர், தனியா பவுடர், கரம் மசாலா சேர்த்து வதக்கி, பொரித்து வைத்துள்ள காலிஃபிளவர், உருளைக்கிழங்கு இரண்டையும் சேர்த்துப் புரட்டி, நறுக்கிய கொத்துமல்லித்தழை தூவி இறக்கவும்.
குறிப்பு: இந்த குருமா, தண்ணீர் பதத்தில் இல்லாமல் கெட்டியாக இருக்கும். எனவே வெளியூர் பயணங்களின்போது, சப்பாத்திக்கோ லஞ்சுக்கோ இந்த குருமா செய்து எடுத்துச் செல்லலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக