முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

GOOD MORNING

ரெடிமிக்ஸ் வடைமாவு&கபாலி புர்குலி&கொய்யாப்பழ தவா பஜ்ஜி&ரெடிமிக்ஸ் பஜ்ஜிமாவு&அரைத்த மாவு பஜ்ஜி&வெஜிடபிள் ரிங்க்ஸ்&டபுள் டெக்கர் பஜ்ஜி

 ரெடிமிக்ஸ் வடைமாவு தேவையானவை: உளுந்தம்பருப்பு - 1 கப், அரிசிமாவு - 1/4 கப், பெருங்காயத்தூள், பேக்கிங் பவுடர், மிளகு - தலா 1/4 ஸ்பூன், பச்சைமிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 1/2 ஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப. செய்முறை: தண்ணீரில் உளுந்தை இருமுறைக் கழுவி, நீரை வடித்து, ஒரு துணியில் பரப்பி, காயவைக்கவும். பின்னர், வெறும் கடாயில் போட்டு, சூடு வரும்வரை வறுத்தெடுத்து, மிக்ஸியில் பொடிக்கவும். இதனுடன் உப்பு, பெருங்காயத்தூள், பேக்கிங் பவுடர், அரிசிமாவு சேர்த்து, கலக்கவும். 1 ஸ்பூன் எண்ணெய்யை சூடாக்கி, நறுக்கிய ப.மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, ஈரமில்லாமல் எடுக்கவும். இதையும் அரைத்த மாவில் சேர்த்து, நன்றாகக் கலந்துவிட்டால், 'வடைமாவு' தயார். குறிப்பு: தேவைப்படும்போது, இந்த மாவில் தண்ணீர் ஊற்றிக் கலந்து, வடைகள் செய்யலாம். கபாலி புர்குலி தேவையானவை: பறங்கிப்பூ இதழ்கள் - 10, பாசிப்பருப்பு - 1 கப், சோம்பு, தனியா - தலா 1 ஸ்பூன், பச்சைமிளகாய் - 4, நெய் - 2 ஸ்பூன், புதினா 1 கைப்பிடி, உப்பு, எண்ணெய் - தேவைக்கு. செய்முறை: பாசிப்பருப்பை ஊறவைத்து, நீரை வடித்து, சோம்பு, த...

Coconut-Noodle Soup &Coconut-Noodle Soup & Palak – Veg soup & Oats - Veg Soup & Pepper-drumstick soup

 கோகோனட் - நூடுல்ஸ் சூப் தேவையானவை: வேகவைத்த நூடுல்ஸ் தேங்காய்பால் 2கப் பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ் - தலா சிவப்புமிளகாய் விழுது, பொடியாக நறுக்கிய பூண்டு ஒரு கப் தலா ஒரு உப்பு தேவையான அளவு செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், நறுக்கிய வெங்காயம், பூண்டு, சிவப்புமிளகாய் விழுதைச் சேர்த்து வதக்கவும். பின்னர் நறுக்கிய கேரட், பீன்ஸை சேர்த்து வதக்கி, வேகவைத்த நூடுல்ஸ், தேங்காய்ப்பால், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து, நன்றாக கொதிக்க வைத்து இறக்கி பரிமாறவும். பாலக் - வெஜ் சூப் தேவையானவை: பாலக்கீரை, கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ், காளான் (அனைத்தும் மெல்லிதாக, நீளவாக்கில் நறுக்கியது) - தலா அரை கட், நீளவாக்கில் நறுக்கிய இஞ்சி அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், மிளகுத்தூள், கறுப்பு உப்பு - தேவையான அளவு. செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், நறுக்கிய காளான், இஞ்சி சேர்த்து லேசாக வதக்கவும். பின்னர் நறுக்கிய கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ் சேர்த்து லேசாக வதக்கி, நறுக்கிய பாலக்கீரை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும். சிறிது நேரம் நன்றாக கொதிக்கவிட்டு, கறுப்பு உப்பு, மிளகுத்தூன் கலந்து, ...

How to prepare Types of soup

 சூப் வகைகள் A.B.C.சூப் தேவையானவை: ஆப்பிள் துருவல் அரை கப், பீட்ரூட் துருவல், கேரட் துருவல் - தலா கால் கப், வெண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன், வெங்காயம் ஒன்று, பூண்டு - 2 பல், சீரகம் - அரை டீஸ்பூன், ஃபிரெஷ் கிரீம் சிறிதளவு, மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வாணலியில் வெண்ணெயை சூடாக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, சீரகம் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் பீட்ரூட் துருவல், கேரட் துருவல் சேர்த்து பாதியளவு வேகும் வரை வதக்கி, கடைசியாக ஆப்பிள் துருவல், தண்ணீர் சேர்த்து வேக வைத்து இறக்கவும். பின்னர் இதை ஆற வைத்து மிக்ஸியில் போட்டு அரைத்து, வடிகட்டவும். பரிமாறுவதற்கு முன்பாக உப்பு, மிளகுத்தூள் சேர்த்து, அடுப்பில் வைத்து சூடாக்கி, மேலாக ஃபிரெஷ் கிரீம் சேர்த்தும் பரிமாறவும்.  மஷ்கின் சூப் தேவையானவை: மெல்லிதாக நறுக்கிய காளான் - அரை கப், மஞ்சள் பூசணித் துண்டுகள் - ஒரு கப், வெங்காயம் - ஒன்று, பூண்டு - 3 பல், மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், ஃபிரெஷ் கிரீம் - சிறிதளவு, மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக...

பாதாம் ஷோர்பா & இளநீர்’ ரசம் & வேப்பம்பூ லெமன் ரசம் & தூதுவளை ரசம்

    பாதாம் ஷோர்பா தேவையானவை: பாதாம் - 1 கைப்பிடி, பால், தண்ணீர் ஒன்றரை கப், வெண்ணெய் - 1 டீஸ்பூன், ஆல் பனிப்பல் அரை டீஸ்பூன், உப்பு - கால் டீஸ்பூன், சர்க்கரை, கரம் மச - தலா 1 சிட்டிகை, வெள்ளை மிளகுத்தூள் கால்  செய்முறை: பாதாமை வெந்நீரில் ஒருமணி நேரம் ஊறவைத்துத் தோலை உரிக்கவும். தோல் நீக்கிய பாதாமுடன் அரை கப் பால சேர்த்து நன்றாக அரைக்கவும். ஒரு பானில் வெண்ணெய் உருகவைத்து, ஆல் பர்ப்பஸ் மாவை சேர்த்து வாசனை வரும்படி நிலம் மாறாதவாறு நன்றாக வறுத்து, பாலைச் சேர்த்துக் கரைத்துக் கொதிக்கவிடவும். பின்ன அரைத்த பாதாமைச் சேர்த்து, ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி, இரண்டு நிமிடங்கள் கொதிக்க விடவும். பின்னர் உப்பு, வெள்ளை மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள், ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலந்து அடுப்பிலிருந்து இறக்கவும். வெதுவெதுப்பான சூட்டில் பரிமாறவும். இளநீர்’ ரசம் தேவையானவை: இளநீர் துவரம்பருப்பு 2, வேகவைத்த 1 டேபிள் ஸ்பூன், தக்காளி, வரமிளகாய் - தலா 1, மிளகு, சீரகம், உப்பு - தலா 2 களை, டீஸ்பூன், கடுகு, வெந்தயம் தலா 1/2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் 1 சிட்டிகை, புளி எண்ணெய் / நெய் - 2 டீஸ்பூன...

மைசூர் ரசம் &பூண்டு ரசம் & ஓம ரசம் & பருப்பு உருண்டை ரசம்

 மைசூர் ரசம் தேவையானவை: கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, தனியா, மிளகு, கடுகு - தலா ஒரு டீஸ்பூன், நெய் - ஒரு டேபிள் ஸ்பூன், துவரம் பருப்பு - ஒரு கப், புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, உப்பு - தேவையான அளவு. செய்முறை: வாணலியில் சிறிதளவு நெய் விட்டு கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், தனியா, துவரம் பருப்பு, மிளகு ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்து மிக்ஸியில் போடவும். சிறிதளவு தண்ணீர் விட்டு நைஸாக அரைத்துக் கொள்ளவும். புளியைக் கரைத்து அடுப்பில் வைக்கவும். பின்னர் அரைத்த விழுது, உப்பு சேர்த்து கொதிக்க விடவும். ஒரு கப் துவரம் பருப்பை குழைய வேக வைத்து நன்றாக கரைத்து, கொதிக்கும் ரசத்துடன் சேர்க்கவும். மீதமுள்ள நெய்யை வாணலியில் விட்டு கடுகை தாளித்துக் கொட்டி இறக்கவும். பூண்டு ரசம் தேவையானவை: உரித்த பூண்டு - 10 பல், காய்ந்த மிளகாய் - 2, மிளகு, கடுகு, நெய் - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்புலை - சிறிதளவு, புளி - நெல்லிக்காய் அளவு, உப்பு - தேவையான அளவு. செய்முறை: வாணலியில் நெய் விட்டு பூண்டை வதக்கி, தனியாக வைக்கவும். அதே வாணலியில் மறுபடியும் சிறிதளவு நெய் விட்டு மிளகு, காய்ந்த மிளகாயை வறுத்து மிக்ஸியில் ...

ரசம் வகைகள் வேப்பம்பூ ரசம் & கண்டந்திப்பிலி ரசம் & கொள்ளு ரசம் & சீரக ரசம்

 வேப்பம்பூ ரசம் தேவையானவை: வேப்பம்பூ - நான்கு டேபிள் ஸ்பூன், புளி ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, கடுகு, நெய் - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, உப்பு - தேவையான அளவு. செய்முறை: புளியைக் கரைத்து உப்பு சேர்த்து அடுப்பில் வைக்கவும். வாணலியில் நெய் விட்டு, காய்ந்த மிளகாயை கிள்ளிப் போட்டு, கடுகு, வேப்பம்பூ சேர்த்து வறுக்கவும். இந்தக் கலவையை ரசத்துடன் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து இறக்கவும். கண்டந்திப்பிலி ரசம் தேவையானவை: கண்டந்திப்பிலி 20கிராம், துவரம் பருப்பு, மிளகு, நெய் - தலா ஒரு டேபிள் ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கடுகு - ஒரு டீஸ்பூன், புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, உப்பு தேவையான அளவு. செய்முறை: வாணலியில் சிறிதளவு நெய் விட்டு துவரம் பருப்பு, காய்ந்த மிளகாய், மிளகு, கண்டந்திப்பிலித் துண்டுகளை போட்டு வறுத்து ஆறவைக்கவும். பின்னர் அவற்றை மிக்ஸியில் போட்டு, சிறிதளவு தண்ணீர் விட்டு நைஸாக அரைக்கவும். இந்தக் கலவையை அடுப்பில் வைத்து, புளியைக் கரைத்து ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விடவும். வாணலியில் நெய் விட்டு கடுகை தாளித்துக் கொட்டி இறக்கவும். கொள்ளு ரசம் தேவையானவை: கொள்ளு 100 க...

கேபேஜ் சூப் & கொள்ளு பார்லி சூப் & பேபி கார்ன் சூப்

 கேபேஜ் சூப்  தேவையானவை: முட்டைக்கோஸ் - 1/4 பாகம், உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் - தலா 1, பால் - 2 கப், மைதா - 1 டீஸ்பூன், வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், பூண்டு பற்கள் - 2, மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன், உப்பு - 1 /2 டீஸ்பூன்.  செய்முறை: முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு, பூண்டு, பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி, குக்கரில் போட்டு ஒரு விசில் வேகவைத்து எடுக்கவும். ஆறியதும், மிக்ஸியில் அரைத்து வைக்கவும். ஒரு பானில் வெண்ணெய்யை உருக்கி, அதில் மைதாவைப் போட்டு வறுக்கவும். பின்னர் பாலை ஊற்றிக் கொதிக்க விடவும். கலவை நன்றாகக் கொதித்து கண்ணாடி போலானதும் அரைத்த கோஸ் கலவையைச் சேர்த்து மிதமான சூட்டில் இறக்கவும். பின்னர் உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறவும்.  தேவையானவை: வறுத்து அரைத்த கொள்ளுப்  கொள்ளு பார்லி சூப் பொடி, வறுத்து அரைத்த பார்லிப் பொடி தலா 1 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலைப் பொடி - 1/2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - 1 சிட்டிகை, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி (இரண்டும் சேர்த்து) - கால் கப், மிளகு-சீரகப் பொடி அரை டீஸ்பூன், எண்ணெய், சோம்பு தலா 1/ 2 டீஸ்பூன், மராட்டி மொக்கு, கிராம...

ப்ரோக்கோலி ப்ரோக்கோலி சூப் & ஸ்ப்ரிங் ஆனியன் சூப் & ஓட்ஸ் வெஜ் சூப்

ப்ரோக்கோலி ப்ரோக்கோலி சூப் தேவையானவை: ப்ரோக்கோலி | வயலட் நிற முட்டைக்கோஸ் - 1/2 பாகம், பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 2, உப்பு - 1/2 டீஸ்பூன், மிளகுத்தூள் 1/4 டீஸ்பூன், வெண்ணெய் / ஃப்ரெஷ் க்ரீம் டீஸ்பூன் (விருப்பப்பட்டால்). 1 செய்முறை: ப்ரோக்கோலி, வெங்காயம், தக்காளியை நறுக்கி, குக்கரில் போடவும். பின்னர் அவை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து ஒரு விசில் வரும் வரை வேகவைத்து இறக்கவும். ஆறியதும், குக்கரைத் திறந்து, அந்தக் கலவையை மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். பின்னர் அதை சூடுபடுத்தி உப்பு சேர்த்து கலந்து, மேலாக மிளகுத்தூளை தூவவும். ணய் / ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்துப் பரிமாறவும். ஸ்ப்ரிங் ஆனியன் சூப் தேவையானவை: வெங்காயத்தாள் 1கட்டு, சிறிய சைஸ் உருளைக்கிழங்கு - 1, பூண்டு பற்கள் 2, ஆரிகானோ, சோயா சாஸ், மிளகுத்தூள் - தலா 1/4 டீஸ்பூன், ஆலிவ் ஆயில் - 1 டீஸ்பூன், உப்பு - 1/2 டீஸ்பூன், தண்ணீர் 4 கப், கொத்துமல்லித்தழை - சிறிதளவு, ஃப்ரெஷ் க்ரீம் சிறிதளவு (விருப்பப்பட்டால்). - செய்முறை: வெங்காயத்தாளை சுத்தம் செய்து, அலசி, பொடியாக நறுக்கவும். உருளைக்கிழங்கின் தோலை சீவி பொடியாக நறுக்கவும். ப...

ரசம் வகைகள் மிளகு ரசம் & பைனாப்பிள் ரசம் & மோர் ரசம் & முடக்கத்தான் ரசம்

     ரசம் வகைகள்      மிளகு ரசம் தேவையானவை: மிளகு - ஒரு டேபிள் ஸ்பூன், புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, சீரகம், கடுகு, நெய் - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் சிறிதளவு, உப்பு - தேவையான அளவு. செய்முறை: மிளகு, சீரகத்தை பொடித்துக் கொள்ளவும். புளியைக் கரைத்து அடுப்பில் வைக்கவும். பின்னர் உப்பு போட்டு கொதிக்கவிடவும். வாணலியில் நெய் விட்டு, மிளகு-சீரக பொடியை வறுத்து ரசத்தில் சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் பெருங்காயத்தூளை சேர்த்து கடுகை தாளித்துக் கொட்டி இறக்கவும். பைனாப்பிள் ரசம் தேவையானவை: துவரம் பருப்பு - 100 கிராம், புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, பைனாப்பிள் - ஒரு ஸ்லைஸ் (பொடியாக நறுக்கவும்), சாம்பார்ப்பொடி - ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு, நெய் - தலா ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்துமல்லித்தழை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு. செய்முறை: புளியைக் கரைத்து அடுப்பில் வைக்கவும். அதனுடன் சாம்பார்ப்பொடி, உப்பு, பைனாப்பிள் துண்டுகளை சேர்த்து கொதிக்க விடவும். துவரம் பருப்பை குழைய வேகவைத்து, நன்றாக கரைத்து ரசத்துடன் சேர்க்கவும். வாணலியில் நெய் விட்டு கடுகை தாளித்து ரசத்தில் ச...

பச்சைமிளகாய் குழம்பு & காரமுறுக்கு

 பச்சைமிளகாய் குழம்பு தேவையானவை : பச்சை மிளகாய் - 5, அதிக 'திக்' இல்லாத புளிக்கரைசல் 1/2 கப், வெல்லம், மஞ்சள்தூள் கடுகு தலா சிறிதளவு, ஒரு டீஸ்பூன், வெந்தயம் - 1/2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. வறுத்து பொடிக்க: துவரம் பருப்பு, தனியா - தலா 2 டீஸ்பூன், அரிசி - 3 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, (எல்லாவற்றையும் வாணலியில் எண்ணெய் விடாமல் சிவக்க வறுத்து, ஆறியதும் பொடிக்கவும்). செய்முறை : பச்சை மிளகாய்களை பாதிவரை மட்டும் இரண்டாக பிளக்கவும்.. வாணலியில் எண்ணெய் விட்டு அதில் கீறிய பச்சைமிளகாய்களை நன்கு நிறம் மாறும்வரை வதக்க வேண்டும். அப்போதுதான் குழம்பில் காரம் எக்கச்சக்கமாக இருக்காது. புளிக்கரைசலுடன், உப்பு, மஞ்சள்தூள் போட்டு புளிவாசம் போகும்வரை கொதிக்க விடவும். பிறகு இதில் பொடித்த பொடியைப் போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும். கொதிக்கும் போது பச்சைமிளகாயைப் போட்டு உடனே கீழே இறக்கி விடவும். கடுகு, வெந்தயம் தாளித்துக் கொட்டி பரிமாறவும். தேவைப்பட்டால் நெய்யை சேர்த்துக்கொள்ளவும்.  காரமுறுக்கு தேவையானவை : இட்லி புழுங்கலரிசி - ஒரு கப், காய்ந்த மிளகாய் 4, வெண்ணெய் 2 டீஸ்பூன், பெர...

இனிப்பு வெங்காயக் குழம்பு & பஜ்ஜி & புளி உப்புமா

  இனிப்பு வெங்காயக் குழம்பு  தேவையானவை : நறுக்கிய சிறிய வெங்காயம் ஒரு கப், புளிக்கரைசல் அரை கப், மஞ்சள்தூள் - சிறிதளவு, குழம்பு மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், வெல்லம் சிறிதளவு, உப்பு, எண்ணெய் தேவையான அளவு. செய்முறை: வாணலியில் எண்ணெய் டு அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். இத்துடன் புளிக்கரைசல், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், வெல்லம் ஆகியவைகளைப் போட்டு புளிவாசம் போகும் வரை நன்கு கொதிக்க விடவும். வீட்டில் காய்கறிகள் இல்லா நேரத்தில் சூப்பரான குழம்பு ரெடி         பஜ்ஜி  தேவையானவை : வாழைக்காய் (அ) வெங்காயம் (அ) மிளகாய் தேவைக்கு இட்லி புழுங்கலரிசி - ஒரு கப், துவரம் பருப்பு 1/4 கப். தனியா 2 10 காய்ந்த மிளகாய் 4. கடலை மாவு ஒரு டேபிள் ஸ்பூன், சோடா உப்பு - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள், உப்பு, எண்ணெய் தேவையான அளவு. செய்முறை: அரிசி, பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். இத்துடன் தனியா, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து நைசாக அரைக்கவும். இந்த மாவுடன் கடலை மாவு, சோடா உப்பு, சிறிது தண்ண...

அரிசி பருப்பு தோசை & அரிசி வடை & கோதுமை ரொட்டி

 அரிசி பருப்பு தோசை தேவையானவை : புழுங்கலரிசி - ஒரு கப், ட்லி துவரம்பருப்பு - அரை கப், தனியா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 4. கறிவேப்பிலை சிறிதளவு, நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், இஞ்சி (அ) பெருங்காயத்தூள் தேவைப்பட்டால் சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: அரிசி, பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் தனியா, காய்ந்தமிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி (அ) பெருங்காயத்தூள் சேர்த்து சற்று கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். மாவை கிரைண்டரில் இருந்து வழித்து எடுப்பதற்கு முன்னால் வெங்காயம் சேர்த்து ஒரு சுற்று, சுற்றி எடுக்கவும். பிறகு 3 மணி நேரம் கழித்து இந்த மாவை தோசைகளாக ஊற்றவும். சுற்றிலும் எண்ணெய் விட்டு இரு புறமும் சிவக்க வேகவைத்து, பரிமாறவும். அரிசி வடை தேவையானவை : இட்லி புழுங்கலரிசி - ஒரு கப், துவரம் பருப்பு அரை கப், தனியா மிளகாய்   2 டீஸ்பூன், காய்ந்த 4, இஞ்சி - சிறு துண்டு,சிறிய வெங்காயம் ஒரு கப், கொத்துமல்லி - கால் கட்டு, கறிவேப்பிலை,பெருங்காயம், உப்பு,எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை : அரிசி, பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் தனியா, காய்ந்த மிளகாய், கறிவே...

கொள்ளு உருண்டைக் குழம்பு & கறுப்பு உளுந்து சாதம்& ஆறு வற்றல குழம்பு

 கொள்ளு உருண்டைக் குழம்பு தேவையானவை: கொள்ளு - 200 கிராம், காய்ந்தமிளகாய் - 8, வெங்காயம் - 2, பூண்டு - 6 பல், துவரம்பருப்பு, கறுப்பு உளுந்து - தலா ஒரு கரண்டி, புளி - எலுமிச்சை அளவு, கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, நல்லெண்ணெய், கடுகு, உளுந்தம்பருப்பு, வெந்தயம், சாம்பார் பொடி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு. செய்முறை: துவரம்பருப்பு, உளுந்து, கொள்ளு மூன்றையும் ஒன்றாக 2 மணி நேரம் ஊற வைத்து களைந்து உப்பு, காய்ந்தமிளகாய் சேர்த்து ஆட்டுக்கல்லில் கெட்டியாக அரைத்து எடுக்கவும். பூண்டு, வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி நறுக்கிய பூண்டு, வெங்காயத்தை வதக்கவும். பின்னர் அரைத்த பருப்புக் கலவையை சேர்த்து நன்றாக கிளறி இறக்கி, ஆறியதும் சிறுசிறு உருண்டைகளாக பிடித்து, இட்லித்தட்டில் வேக வைத்து எடுக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து, புளியை கரைத்து ஊற்றவும். பின்னர் சாம்பார் பொடி, தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும். இப்போது, வேக வைத்த கொள்ளு உருண்டைகளை போட்டு நன்கு கொதித்ததும் இறக்கவும். விரும்பினால் இந்தக...

கத்தரிக்காய் தேங்காய் பால் குழம்பு & பைனாப்பிள் ரசம் & பச்சை மோர்க்குழம்பு & தஞ்சாவூர் தவலை வடை

 கத்தரிக்காய் தேங்காய் பால் குழம்பு  தேவையானவை: சிறிய கத்தரிக்காய் - 10, பூண்டு - 10, பச்சைமிளகாய் - 6, கெட்டி தேங்காய்ப் பால் - 2 கப், உப்பு - சுவைக்கேற்ப, கொத்துமல்லித்தழை - 1 கப், முந்திரி - 10, நெய் - 4 ஸ்பூன். செய்முறை: பூண்டு, 4 பச்சைமிளகாய், கொத்துமல்லி, முந்திரி, உப்பு சேர்த்து விழுதாக அரைக்கவும். கத்தரிக்காயை நான்காக பிளக்கவும். உள்ளே உப்பு தடவி சிறிது நேரம் ஊற வைக்கவும். பின், அரைத்த விழுதை கத்தரிக்காய் உள்ளே ஸ்டஃப் செய்யவும். கடாயில் நெய் சேர்த்து, ஸ்டஃப் செய்யப்பட்ட கத்தரிக்காய்களை சேர்த்து, லேசாக வதக்கி, 1 கப் தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும். தேங்காய்ப்பால் சேர்க்கவும். 2 பச்சை மிளகாய்களை கிள்ளி சேர்க்கவும். தேங்காய்ப்பாலுக்குத் தேவையான உப்பு சேர்க்கவும். சேர்ந்து கொதிக்கும்போது அடுப்பை அணைக்கவும். மேலாக கொத்துமல்லித்தழை சேர்க்கவும். விழுப்புரம் பக்கங்களில், 'முள் கத்தரிக்காய்' என்று கிடைக்கும். அதில் செய்யப்படும் இந்தக் குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். ஒரு மாறுதலுக்கு, சப்பாத்தியுடன் சாப்பிட்டுப் பாருங்களேன்! பைனாப்பிள் ரசம் தேவையானவை: பாசிப்பருப்பு - 1/4 கப், ...

கறிவேப்பிலை சூப் & கறிவேப்பிலை பொங்கல் & கறிவேப்பிலை காராசேவ் & கறிவேப்பிலை தோசை

 கறிவேப்பிலை சூப் போட்டு வளங்கம் சேர்த்து தாளிக்கா ன்வெங்காயம், சுத்தம் செய்த கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும். பாசிப்பருப்பை வேகவைத்து. அந்த தண்ணி வழுத்து தனி எடுத்து வைக்கவும். வதக்கிய தக்காளி கலவையை மிக்ஸியில் அரைத்து. அடல்பாசிப்பருப்புத் தண்ணி, உப்பு, மிளகுத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி, சூடாக பரிமாறவும்.  கறிவேப்பிலை பொங்கல் தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், பாசிப்பருப்பு : கால் கப், இஞ்சி - சிறிய துண்டு மிளகு, சீரகம் தலா ஒரு டீஸ்பூன், பச்சைமிளகாய் 2. கறிவேப்பிலை- கால் கப்,நெய், முந்திரி, உப்பு, பெருங்காயம் - தேவையான அளவு, அரிசி, பருப்பை களைந்து 4 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். கீறிய பச்சை மிளகாய், உப்பு. தோல் சீவி துருவிய இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக குழைய வேக விடவும். வாணலியில் நெய் விட்டு முந்திரியை வறுத்து தனியே வைக்கவும். * கறிவேப்பிலையுடன் மிளகு, சீரகம் சேர்த்து மிக்ஸியில் அரைத்து பொங்கலுடன் கலக்கவும், கறிவேப்பிலை மணத்துடன் மிகவும் * சுவையாக இருக்கும் இந்தப் பொங்கல்! கறிவேப்பிலை காராசேவ் தேவையானவை: கடலைமாவு ஒன்றரை கப் அரிசி மாவு ...

சோயா கிரிஸ்பி ரிப்பன் & மூங்தால் மிக்ஸர் & முந்திரி பக்கோடா & பெப்பர் காராசேவு & கார்ன்ப்ளார் ஓமப்பொடி & புரோட்டின் மிக்ஸர்

 சோயா கிரிஸ்பி ரிப்பன் தேவை: சோயா மாவு - 1 கப், கடலை மாவு, அரிசி மாவு - தலா அரை கப், வெள்ளை என் 1 டீஸ்பூன், வெண்ணெய் (கடாயில் லேசாக சூடாக்கியது) - 1 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் விழுது - 1 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: கடலை மாவு, அரிசி மாவு இரண்டையும் நன்றாக சலித்துக் கொள்ளவும், நைஸாக அரைத்த பச்சைமிளகாயை விழுது நீர் விட்டு வடிகட்டிக் கொள்ளவும் கொடுத்துள்ளவற்றில் எண்ணெய் தவிர மற்ற பொருட்கள் அனைத்தையும் நன்றாக கலந்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிருதுவாக பிசையவும். இந்த மாவை ரிப்பன் அச்சில் நிரப்பி, நன்றாக காய்ந்த எண்ணெயில் பிழிந்து வேக வைத்து எடுக்கவும். மூங்தால் மிக்ஸர் தேவை: பாசிப்பருப்பு - கால் கிலோ, மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன், தனி மிளகாய்தூள் - 2 டீஸ்பூன், நெல்லிக்காய்தூள் - 1 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: பாசிப்பருப்பை தண்ணீரில் உறவிட்டு. நீரை முழுவதுமாக வடித்து, துணியில் பரப்பி காய விடவும். கடாயில் எண்ணெயை காய வைத்து, அதில் பாசிப்பருப்பை சிறிது சிறிதாக போட்டு பொரித்தெடுக்கவும். இறுதியாக மஞ்சள்தூள், தனி மிளகாய்தூள், நெல்லிக்காய்தூள், தேவ...

கறிவேப்பிலை - கடலை சாதம் & கறிவேப்பிலை கலவை சட்னி & மோர் அமுது & கறிவேப்பிலை - மல்லி ஊத்தப்பம்

 கறிவேப்பிலை - கடலை சாதம் தேவையானவை: ஒரு கப், கறுப்பு கொண்டைக்கடலை - ஒரு பிடி துவரம் பகுப்பு - 4 டேபிள் ஸ்பூன், கலைப்பருப்பு - 2 டேபிள் காய்ந்த மிளகாய் -6, மிளகு - 4. புளி - கொட்டைபாக்களவு, உப்பு, பெருங்காயம், எண்ணெய் தேவையானஅளவு.கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊறவிடவும். வெறும் வாணலியில் கறிவேப்பிலை. துவரம்பருப்பு, கடலைப் பகுப்பு, காய்ந்த மிளகாய், மிளகு ஆகியவற்றை வறுத்து * ஆறவைத்து மிக்ஸியில் போடவும். அதனுடன் புளி, உப்பு, பெருங்காயம் சேர்த்து பொடிக்கவும். அரிசியை களைந்து, முதல் * நாள் இரவு ஊற வைத்த கொண்டைக்கடலை சேர்த்து வேக விடவும். பின்னர் அரிசி - கடலை கலவையுடன் அரைத்த பொடியைச் சேர்த்து கிளறி இறக்கி, சூடாக பரிமாறவும். கறிவேப்பிலை கலவை சட்னி கறிவேப்பிலை - ஒரு கப், கடலைப்பருப்பு - 4 டேபிள் ஸ்பூன், உளுந்தம்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன், பூண்டு - 6 பல், தேங்காய்த்துருவல் - 4 டேபிள் ஸ்பூன், வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, கடுகு, சீரகம், கொத்துமல்லித்தழை . சிறிதளவு, உப்பு, பெருங்காயம், எண்ணெய் - தேவையான அளவு. வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, சீரகம், பெருங்காயம் போட்டு தாளிக்கவும். பின்னர் பரு...

நூல்கோல் குருமா & கோபி டிரை குருமா

 நூல்கோல் குருமா தேவையானவை: தோல் நீக்கி நறுக்கிய நூல்கோல் .ஒரு கப்  பச்சைப்பாணி டேபிள் ஸ்பூன், பெரிய வெங்காயம், தக்காளி தலா ஒன்று, தயிர் ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு, எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், அரைக்க தேங்காய்த்துருவல் 4 டேபிள் ஸ்பூன், பச்சைமிளகாய் - ஒன்று, இஞ்சி சிறிய துண்டு, பூண்டு - 3 பற்கள், சோம்பு அரை டீஸ்பூன், மசாலா பவுடர்கள்: சில்லி பவுடர் ஒரு டேபிள் ஸ்பூன் மஞ்சல்தூள் அரை டீஸ்பூன்மேலே தூவி அலங்கரிக்க: தறுக்கிய கொத்துமல்லித்தழை - ஒரு டேபிள் ஸ்பூன், செய்முறை அரைக்கக் கொடுத்துள்ளவற்றுடன் தண்ணீர் சேர்த்து கெட்டியாக நைசாக அரைக்கவும். நூல்கோலுடன் உப்பு சேர்த்து, அளவான தண்ணீர் விட்டு வேகவிடவும் வாலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், தக்காளி மசாலா பவுடர்கள் சேர்த்து வதக்கி, வெந்த நூல்கோலை நீருடன் சேர்க்கவும், பின்னர் பச்சைப்பட்டாணியைச் சேர்த்து தேவைப்பட்டால் சிறிதளவு உப்பு, கொஞ்சம் தண்ணீர் விட்டு பாத்திரத்தை மூடவும். எல்லாமும் ஒன்று சேர்ந்து, காய் நன்றாக வெந்ததும், அரைத்த விழுதைச் சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் தயிர் சேர்த்து இரண்டு கொதி வந்ததும், நற...