மில்லட் பிரியாணி
வரகு அரிசி, தினை அரிசி, சாமை அரிசி, குதிரைவாலி எல்லாமாக சேர்ந்து இரண்டு கப், நெய் ஒரு டேபிள்ஸ்பூன், பட்டை, கிராம்பு, ஏலம் சிறிதளவு, நீளவாக்கில் நறுக்கிய பீன்ஸ், கேரட், உருளை, பெரிய வெங்காயம் மற்றும் பச்சைப் "பட்டாணி எல்லாமாக சேர்த்து - ஒரு கப், உப்பு, | எண்ணெய் - தேவையான அளவு.
அரைக்க: தேங்காய்த் துருவல்-கால் கப், பச்சைமிள காய்-3, இஞ்சி - சிறிய துண்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2
பச்சைப் பட்டாணியை 10 நிமிடம் ஊற வைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலம் தாளித்து ஒரு டேபிள் ஸ்பூன் நெய் விட்டு காய்கறிகள் அனைத்தையும் போட்டு வதக்கி, நான்கு கப் நீர்விட்டு, உப்பு சேர்த்து கொதிக்க விடவும். இதனுடன் அரைத்த விழுதையும் மில்லட்ஸையும் சேர்த்து நன்றாகக் கலந்துவிட்டு பச்சைப் பட்டாணியையும் சேர்த்து மூடி வெயிட் போட்டு ஒரு விசில் வந்ததும் அடுப்பை ஆஃப் செய்துவிடவும். ஆவி வெளியேறியதும் மல்லித்தழை தூவி அலங்கரிக்கவும்.
ரங்கூன் பிரியாணி
பாசுமதி அரிசி இரண்டு கப், எண்ணெய் - நான்கு டேபிள் ஸ்பூன், உப்பு - தேவைக்கு, காய்ந்தமிளகாய் பெரிய வெங்காயம் 5, 2, கேரட் - ஒன்று, மாங்காய் ஒன்று, வெள்ளரி ஒன்று, அன்னாசிப்பழம் 3 துண்டுகள், தேங்காய்த் துருவல் கால் கப், முந்திரி - ஐந்து, நெய் ஒரு டீஸ்பூன்.
செய்முறை
வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு முந்திரியை வறுத்துத் தனியே வைக்கவும். அதே வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாயை வறுத்து, அதனுடன் நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், தேங்காய்த் துருவல், உப்பு சேர்த்து விழுதாக அரைக்கவும். குக்கரில் மீதியுள்ள எண்ணெயை விட்டு நறுக்கிய வெங்காயம், வெள்ளரிக்காய், அன்னாசிப்பழம் சேர்த்து வதக்கி, மாங்காய்த் துருவல், கேரட்த் துருவல் சேர்த்து வதக்கவும். பின்னர் அரைத்த விழுதை சேர்த்து வதக்கி, மூன்றரை கப் நீர் விட்டு, பாசுமதி அரிசியை சேர்த்து, குக்கரை மூடி, வெயிட் போடவும். ஒரு விசில் வந்ததும் இறக்கி, சூடாக பரிமாறவும்..
ஹைதராபாத்veg (or ) மட்டன் மசாலா
தேவையானவை
Vegetables ( or )மட்டன் அரை கிலோ, வெங்காயம் -3, இஞ்சிபூண்டு விழுது ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த் தூள் ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், தனியாத்தூள் ஒரு டேபிள்ஸ்பூன், சீரகத்தூள் அரை டீஸ்பூன், தக்காளி 2,தயிர் ஒரு ஸ்பூன் veg (or )மட்டன் மசாலா பவுடர் ஒரு டீஸ்பூன், கரம் மசாலா அரை டீஸ்பூன், கொத்து மல்லி, உப்பு, எண்ணெய் -தேவையான அளவு.
செய்முறை
குக்கரில் எண்ணெயை காய வைத்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதனுடன் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, சுத்தம் செய்த veg (or )மட்டன் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும். பின்னர் இதனுடன் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், சீரகத்தூள், veg ( or) மட்டன் மசாலாத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து நிமிடம் வேக விடவும். பின்னர் நறுக்கிய தக்காள 3 சேர்த்து வதக்கி, நன்கு அடித்து கலக்கிய தயிரைச் சேர்த்து, எண்ணெய் பிரிந்து வெளி யேறும் வரை வதக்கி, சிறிதளவு தண்ணீர் விட்டு, கொத்துமல்லித்தழையை சேர்த்து அடுப்பை சிம்மில் வைக்கவும். இறுதியாக கரம் மசாலாத் தூளைத் தூவி கிளறி இறக்கவும்.
2 இன் 1 பிரியாணி
பாசுமதி அரிசி-2 கப், எண்ணெய்-3 டேபிள் ஸ்பூன்.
சிவப்பு கலருக்கு தக்காளி-2, கரம் மசாலா-ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள்-2 டேபிள் ஸ்பூன், முந்திரித் துண்டுகள் - ஒரு டேபிள் ஸ்பூன், நறுக்கிய பிரெட் துண்டுகள் 6,உப்பு தேவைக்கு.
பச்சை கலருக்கு: ஊற வைத்த பச்சைப் பட்டாணி 4 பேபிள் ஸ்பூன், ஆய்ந்த பசலைக் கீரை-ஒரு கப், பச்சை மிளகாய்-2, பெரிய வெங்காயம் - ஒன்று, இஞ்சி, பூண்டு விழுது-ஒரு டீஸ்பூன். உப்பு- தேவைக்கு.
செய்முறை
பாசுமதி அரிசியை உதிர்உதிராக வேகவி வும். தக்காளியுடன் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து நைஸாக அரைக்கவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு முந்திரி, பிரெட் துண்டுகளை வதக்கி தனியே வைக்கவும். அதே வாணலியில் தக்காளி விழுதை சேர்த்து நீர் வற்றும் வரை வதக்கிவிட்டு, சாதத்தில் பாதியை மட்டும் சேர்த்துக் கலக்கவும். பரிமாறுவதற்கு முன்பு முந்திரி, பிரெட் துண்டுகளைச் சேர்க்கவும். பசலைக் கீரையுடன் உப்பு, பச்சைமிளகாய் சேர்த்து நீர்விட்டு வேகவிட்டு, ஆறியதும் அரைக்க வும். பச்சைப் பட்டாணியை வேக வைத்து தனியாக வைக்கவும். வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்விட்டு நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். பின்னர் வேக வைத்த பட்டாணி, அரைத்தக் கீரை சேர்த்து லேசாக வதக்கி, மீதமுள்ள சாதத்தைச் சேர்த்து இறக்கவும். இரண்டு நிற பிரியாணியையும் படத்தில் இருப்பதை போல தட்டில் வைத்து பரிமாறவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக