ஃபிஷ் ஃப்ரை
தேவையானவை : எலும்பில்லாத மீன் துண்டுகள் (அ) சற்று பெரிய மீன்கள் 1/4 கிலோ, மஞ்சள் - 1/2 டீஸ்பூன், தயிர் - 1/4 கப், இஞ்சி, பூண்டு விழுது ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன், சோளமாவு - ஒரு டேபிள் ஸ்பூன், தண்ணீரில் நனைத்துப் பிழிந்த பிரட்
துண்டுகள் 4, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
தாளிக்க : மீனையும், எண்ணெயையும் தவிர மற்றவைகளை ஒன்றாகக் கலந்து, மீன் துண்டுகள் மேலே தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். ஃபிரிட்ஜில் வைத்தால் 1/2 மணி நேரம் போதும். பிறகு இந்த துண்டுகளை எண்ணெயில் பொரித்தெடுத்தால் கிரிஸ்ப்பியான ஃபிஷ் ஃபிரை ரெடி.
ஹைதராபாத் மட்டன் தேவையானவை : மட்டன் 1% கிலோ, காய்ந்த மிளகாய் 15. தனியா - 2 டேபிள் ஸ்பூன், பட்டை, லவங்கம்
தலா 3, சீரகம் 1/2 டீஸ்பூன், மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன், சிறிய வெங்காயம் தக்காளி - 2, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
தேவையானவை : வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் தக்காளி, தனியா, காய்ந்த மிளகாய், சீரகம், பட்டை, லவங்கம் ஆகியவற்றை வறுத்து, அரைத்துக் கொள்ளவும். மட்டனை உப்பு, மஞ்சள்தூள், அரைத்த மனலா விழுதுடன் மிக்ஸ் செய்து 1/2 மணி நேரம் அப்படியே வைக்கவும். குக்கரில் எண்ணெய் காய்ந்ததும் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். பிறகு மட்டனைப் போட்டு நிறம் மாறும் வரை வதக்கவும். இத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, 3 விசில் வரும்வரை பிரஷர் குக் செய்யவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக