மாம்பழக்குழம்பு
மாம்பழம் குழம்பு
தேவையான பொருட்கள்
மாம்பழம்-3, சின்னவெங்காயம் கப், பூண்டு-6 பல், தனியா ஒரு டீஸ்பூன். ப.மிளகாய்-5. தக்காளி ஜூஸ்-1/2 கப், புளிபேஸ்ட்-3 டீஸ்பூன், கசகசா, உபருப்பு-தலா 2 (டீஸ்பூன், வெந்தயம் ஒரு டீஸ்பூன்.
மிளகாய், தனியா, வெங்காயம், பூண்டு, கசகசா, வெந்தயம், உ.பருப்பு இவற்றை தனித்தனியாக வறுத்து உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். மாம்பழத்தை துண்டுகளாக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து பூண்டு. வெங்காயம் வதக்கவும். இத்துடன் அரைத்த விழுதைப் போட்டு தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். கடைசியாக புளிபேஸ்ட், தக்காளி ஜூஸ் சேர்த்து கொதி வந்தவுடன் மாம்பழத்துண்டுகள் போட்டு, ஒரு கொதி வந்தவுடன் இறக்கிவிடவும்.
கத்தரிக்காய்குழம்பு
தேவையான பொருட்கள்
சிறிய கத்தரிக்காய் 1/4 கிலோ, மிளகாய் 8,க.பருப்பு, உபருப்பு, தனியா தே.துருவல் தலா-2 டேபிள் ஸ்பூன், சாம்பார்பொடி, புளிபேஸ்ட், புளிப்பொடி-தலா ஒரு டீஸ்பூன், ம.பொடி-1/4 டீஸ்பூன்.
செய்முறை
கத்தரிக்காயை முனையை விட்டு நான்காகப் பிளக்கவும். க.பருப்பு, உ.பருப்பு, தனியா, தே.துருவல் இவைகளை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இத்துடன் உப்பு சேர்த்து பிளந்து வைத்த கத்தரிக்காயினுள் அடைக்கவும். இதன் மேல் புளிப்பொடியைத் தூவி சிறிது நேரம் ஊற வைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கத்தரிக்காய்களை வதக்கவும். கடாயில் புளிபேஸ்ட், உப்பு, சாம்பார்பொடி, ம.தூள், 2 கப் தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும். பின்னர் வதக்கிய கத்தரிக்காய்களைப் போட்டு கொதித்தபின் இறக்கிவிடவும்.
அப்பளக்குழம்பு
தேவையான பொருட்கள்
மிளகாய், அப் பளம் - தலா 4, கடுகு மிளகு, வெந்தயம், பெருங்காயம்- தலா ஒரு டீஸ்பூன், மணத்தக்காளி, சுண்டைக்காய் வற்றல், சிமாவு - தலா அரிசிம ஒரு டேபிள் ஸ்பூன், தனியா-2 டீஸ்பூன், புளிபேஸ்ட்-2 டேபிள் ஸ்பூன், வெல்லம்-ஒரு டீஸ்பூன்.
செய்முறை வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, வெந்தயம், தாளித்து மணத்தக்காளி, சுண்டைக்காய் வற்றல்களை வறுக்கவும். பின்னர் புளிபேஸ்ட்டை தண்ணீரில் கரைத்து ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும். மிளகாய், தனியா, மிளகு இவைகளை வறுத்து அரைத்துக்கொள்ளவும். இத்துடன் அரிசிமாவு, வெல்லம் சேர்த்துக் கரைத்து கொதிக்கும் குழம்பில் ஊற்றவும். கடைசியாக பச்சை அப்பளத்தை பியத்துப் போட்டு கொதிவந்தவுடன் இறக்கிவிடவும்.
வெல்லமும் அப்பளமும் சேர்ந்து வித்தியாச சுவை
கருத்துகள்
கருத்துரையிடுக