பாலக் உருளை குருமா
தேவையானவை: நறுக்கிய பசலைக்கீரை -2 கப், நறுக்கிய உருளைக்கிழங்கு கப், உப்பு கால் தேவைக்கு, எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், பெரிய வெங்காயம் ஒன்று, சில்லி பவுடர் - 2 டேபிள் ஸ்பூன், மஞ்சள்தூள் அரை டீஸ்பூன். அரைக்க: சோம்பு - அரை டீஸ்பூன், முந்திரித்துண்டுகள், பொட்டுக்கடலை தலா ஒரு டேபிள் ஸ்பூன், தக்காளி - தேங்காய்த்துருவல் - 6 டேபிள் ஸ்பூன், பூண்டு 3 பற்கள்.
செய்முறை: உருளைக்கிழங்குடன் தண்ணீர், உப்பு சேர்த்து வேகவைத்து, தோலை உரித்து, நறுக்கவும். பசலைக்கீரையுடன் தண்ணீர், இறக்கவும். சிறிதளவு உப்பு சேர்த்து வேகவைத்து,
வெந்தகீரையை குளிர்ந்த நீரில் சிறிது நேரம் போட்டு, பிறகு மிக்ஸியில் நைசாக அரைக்கவும் அப்போதுதான் கீரையின் நிறம் மாறாமல் இருக்கும்). அரைக்கக் கொடுத்துள்ளவற்றை மிக்ஸியில் போட்டு தண்ணீர் விட்டு, கெட்டியாக நைசாக அரைக்கவும். வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயத்தை ஒன்று, வதக்கி, அரைத்த விழுது, சில்லி பவுடர், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். பின்னர் வெந்த உருளையைச் சேர்த்து, கால் கப் தண்ணீர் விட்டு, இரண்டு கொதி விட்டு, அரைத்த கீரை விழுதைச் சேர்த்து மேலும் ஒரு கொதி வந்ததும்
குறிப்பு: இந்த குருமாவானது சப்பாத்தி / நாண் / ரொட்டியுடன் சாப்பிட ஏற்றது.
பீட்ரூட் குருமா
தேவையானவை: தோல் சீவி நறுக்கிய பீட்ருட் - ஒரு கப், உப்பு தேவைக்கு, பச்சைப்பட்டாணி -3 டேபிள் ஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், சின்ன வெங்காயம் 6, பச்சைமிளகாய் - ஒன்று, இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,
பிரியாணி இலை - ஒன்று, எலுமிச்சைச்சாறு - ஒரு டேபிள் ஸ்பூன். வெறும் வாணலியில் வறுத்து அரைக்க: காய்ந்தமிளகாய் - 2, தனியா - ஒரு டேபிள் ஸ்பூன், பட்டை - ஒரு சிறிய துண்டு, கிராம்பு - 2, முந்திரித் துண்டுகள் ஒரு டேபிள் ஸ்பூன், கசகசா - ஒரு டீஸ்பூன், தேங்காய்த்துருவல் - 3 டேபிள் ஸ்பூன். மேலே தூவ: நறுக்கிய மல்லித்தழை - 2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை: வெறும் வாணலியில் வறுக்கக்
கொடுத்துள்ளவற்றை வறுத்து, மிக்ஸியில் போட்டு, நீர் விட்டு நைசாக அரைக்கவும். பீட்ரூட்டுடன் நீர் விட்டு, உப்பு சேர்த்து அரை வேக்காடு வேகவிடவும். வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, பிரியாணி இலை, நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். பின்னர் மஞ்சள்தூள், உப்பு, வேகவைத்த பீட்ரூட், பச்சைப்பட்டாணி சேர்த்து, அரை கப் தண்ணீர் ஊற்றி வேகவிடவும். காய்கள் நன்றாக வெந்ததும், அரைத்த விழுதைச் சேர்த்து இரண்டு கொதி வந்ததும், எலுமிச்சைச்சாறு சேர்த்து, நறுக்கிய கொத்துமல்லித்தழைத் தூவி இறக்கவும். குறிப்பு: சப்பாத்தி / ரொட்டிக்கு சிறந்த சைட் - டிஷ் இது.
பாலக் - பனீர்-குருமா
தேவையானவை: பனீர் துண்டுகள் - ஒரு கப், நறுக்கிய பசலைக்கீரை 2 கப், உப்பு தேவைக்கு, வெண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், பெரிய வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் - தலா ஒன்று, சில்லி பவுடர் 2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை: பசலைக்கீரையுடன் தண்ணீர், உப்பு சேர்த்து வேகவைத்து, குளிர்ந்த நீரில் போட்டு எடுக்கவும். நறுக்கிய தக்காளி, வெங்காயம், பச்சைமிளகாய் மூன்றையும் மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்று விட்டு, வெந்த பசலைக்கீரையைச் சேர்த்து நைசாக
அரைக்கவும். வாணலியில் ஒரு ஸ்பூன் வெண்ணெய்யைப் போட்டு, சீரகம் தாளிக்கவும். பின்னர் இஞ்சி, பூண்டு விழுது, சில்லி பவுடர் சேர்த்து வதக்கி, அரைத்த பசலைக்கீரை விழுதைச் சேர்த்து, ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். இரண்டு கொதி வந்ததும் பனீர் துண்டுகளைச் சேர்த்து மறுபடியும் ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
குறிப்பு: பனீர் துண்டுகளை எண்ணெயில் பொரித்து, கொதிக்கும் கலவையில் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கலாம்.
சப்பாத்தி, பரோட்டா, நாண், ரொட்டி, குல்சா உள்ளிட்டவற்றுக்கு பொருத்தமான சைட் - டிஷ் இது.
கருத்துகள்
கருத்துரையிடுக