குக்-ரைஸ் கட்லட்
தேவையானவை: சாதம், கேரட் துருவல் தலா ஒரு கப், வெங்காயம் - ஒன்று, பச்சைமிளகாய் விழுது, கடலை மாவு - தலா ஒரு ஸ்பூன், கோதுமை மாவு - 2 ஸ்பூன், உருளைக்கிழங்கு - 2, கொத்துமல்லித்தழை ஒரு கைப்பிடி, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் நீக்கி மசிக்கவும். இதனுடன் சீாதம், நறுக்கிய வெங்காயம், பெருங்காயம், தயிர், பச்சைமிளகாய் விழுது, கோதுமை மாவு, கடலைமாவு, கொத்துமல்லித்தழை, உப்பு சேர்த்துப் பிசைந்து, வடைபோல தட்டி, காய்ந்த தவாவில் போடவும். எண்ணெய் விட்டு, இருபறமும் கட்டு எடுக்கவும்.
ரவை கட்லட்
(தேவையானவை: ரவை - ஒரு டம்ளர், அரிசி மாவு, தயிர் - தலா ஒரு டேபிள் ஸ்பூன், இஞ்சி-பூண்டு விழுது, பச்சைமிளகாய் விழுது தலா ஒரு ஸ்பூன், உருளைக்கிழங்கு - 2, வெங்காயம் - ஒன்று, உப்பு, எண்ணெய், கொத்துமல்லித்தழை தேவையான அளவு.
செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் நீக்கி மசிக்கவும். வாணலியில் ஒன்றரை டம்ளர் நீர் ஊற்றி, உப்பு, ப.மிளகாய் விழுது, இஞ்சி-பூண்டு விழுது, நறுக்கிய வெங்காயம் சேர்த்து, கொதி வந்ததும் ரவை, அரிசி மாவு, தயிர் சேர்த்துக் கிளறி இறக்கி, ஆறியதும், கொத்துமல்லித்தழை சேர்த்து பிசைந்து, வடை போல தட்டவும். பின்னர் அதை சூடான தவாவில் போட்டு, எண்ணெய் ஊற்றி, சுட்டு எடுக்கவும்.
பீர்க்கைத்தோல் கட்லட்
தேவையானவை. பீர்க்கங்காய், உருளைக்கிழங்கு -
தலா 2, சேனைக்கிழங்கு - ஒரு நுண்டு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் - தலா ஒரு ஸ்பூன், கடலை மாவு - 60 கிராம், மஞ்சள்தூள் - சிட்டிகை, மாங்காய்த்தூள் - 2 ஸ்பூன், உப்பு, எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் நீக்கி மசிக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய சேனைத் துண்டுகளை வதக்கி, பீக்கங்காய் தோலை சேர்த்து வதக்கவும். பின்னர் மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூன், மாங்காய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், கடலை மாவு, உப்பு சேர்த்து நன்றாக வதக்கி, ஆறியதும் மிக்ஸியில் அரைத்து, வடை போல தட்டவும் இதை சூடான தவாவில் போட்டு. எண்ணெய் விட்டு, இருபுறமும் திருப்பிப் போட்டு, கட்டு எடுக்கவும்.
கிரீன்கட்லட்
தேவையானவை: பாலக்கீரை, கொத்துமல்லித்தழை - தலா ஒரு கட்டு, பட்டாணி - 100 கிராம், உருளைக்கிழங்கு - 4, முந்திரி - 12, சாட் மசாலா - ஒரு ஸ்பூன், இஞ்சி பச்சைமிளகாய் விழுது ஒரு டேபிள் ஸ்பூன், ரஸ்க் தூள், உப்பு, எண்ணெய், - தேவையான அளவு
செய்முறை: பட்டாணியை முதல் நாள் இரவு ஊறவைத்து, மறுநாள் காலையில் வேகவைத்து, மிக்ஸியில் அரைக்கவும், உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் நீக்கி மசிக்கவும். பாலக்கீரை, கொத்துமல்லித்தழையை அரைத்து, அதனுடன் பட்டாணி விழுது, மசித்த உருளை, இஞ்சி-பச்சைமிளகாய் விழுது, பொடித்த முந்திரி, சாட் மசாலா, உப்பு, ரஸ்க் தூள் ஆகியவற்றைக் கலந்து, வடை போல் தட்டவும், பின்னர் அதை காய்ந்த தவாவில் போட்டு, எண்ணெய் விட்டு, இருபுறமும் திருப்பிப் போட்டு சுட்டு எடுக்கவும்:
கருத்துகள்
கருத்துரையிடுக