கோதுமை ரவை-மசாலா பிரியாணி
கோதுமை ரவை 2 கப், இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டேபிள் ஸ்பூன், மசாலா முந்திரி - 4 டேபிள் ஸ்பூன், தக்காளி - 3, பச்சைமிளகாய் 3, பெரிய வெங்காயம் ஒன்று, கேரட் - பாதியளவு, பட்டை, கிராம்பு, ஏலம் தலா 2, சோம்பு, கசகசா தலா ஒரு டீஸ்பூன், நெய் 2 டேபிள் ஸ்பூன், பிரெட் துண்டுகள் 10,உப்பு, எண்ணெய் அளவு. தேவையான
செய்முறை
மசாலா முந்திரியை மிக்ஸியில் கொர கொரப்பாகப் அரைக்கவும். வெறும் வாணலியில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, கசகசா ஆகியவற்றை வறுத்து நைஸாகப் பொடிக் கவும். தக்காளியை வெந்நீரில் போட்டு, தோல் உரித்து நைஸாக அரைக்கவும். குக்கரில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், கேரட், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இதனுடன் 2 கப் தண்ணீர், அரைத்த தக்காளி விழுது, உப்பு, பொடித்த மசாலாப்பொடி சேர்த்து கிளறவும். பின்னர் கோதுமை ரவையை சேர்த்து, குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் இறக்கவும். நெய்யில் வறுத்த பிரெட்த் துண்டுகள், மல்லித்தழை, |அரைத்த மசாலா முந்திரியைத் தூவி பரிமாறவும்.
பேல்பூரி பிரியாணி
பாசுமதி அரிசி - 2 கப், பானிபூரி 10, அரிசிப்பொரி - ஒரு கப், ஓமப்பொடி - கால் கப், கேரட் துருவல் - 4 டேபிள் ஸ்பூன், சிறியதாக நறுக்கிய வெங்காயம் 6 டேபிள் ஸ்பூன், நறுக்கிய தக்காளி 2 டேபிள் ஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள் ஸ்பூன், சாட் மசாலா- ஒரு டீஸ்பூன், பச்சைமிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை, உப்பு, எண்ணெய் -தேவையான அளவு. அரைக்க: பேரீச்சை-6, புளிபேஸ்ட்-ஒரு டீஸ்பூன், வெல்லம் - ஒரு டேபிள் ஸ்பூன், புதினா, கொத்துமல்லி - தலா 8 டேபிள் ஸ்பூன், பச்சைமிளகாய் ஒன்று, உப்பு - சிறிதளவு.
செய்முறை
அரைக்க கொடுத்துள்ளவற்றை ஒன்றாக மிக்ஸியில் போட்டு 'சட்னி' பதத்தில் அரைத்துக் கொள்ளவும். அடிகன மான வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயம், கேரட் துருவல், தக்காளி, பச்சை மிளகாய் விழுது, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். இதனுடன் அரைத்த சட்னியையும் சாதத்தையும் சேர்த்து வதக்கவும். பிறகு சாட் மசாலா சேர்க்கவும். பரிமாறுவதற்கு முன்பு பொரி, ஓமப் பொடி, உடைத்த பானிபூரி சேர்த்து, மல்லித்தழை தூவி பரிமாறவும்.
முட்டை பிரியாணி
பாசுமதி அரிசி-3 கப், வேகவைத்த முட்டை-3, லவங்கம், பிரிஞ்சி இலை தலா ஒன்று, கிராம்பு-2, புதினா-ஒரு கைப்பிடியளவு, கொத்துமல்லித்தழை சிறிதளவு, பச்சைமிளகாய்-5, நெய் - 2 டேபிள்ஸ்பூன், பிரியாணி மசாலா, இஞ்சி, பூண்டு விழுது-ஒன்றரை டீஸ்பூன், மிளகாய்த்தூள்-3 டீஸ்பூன், வெங்காயம்-2, தக்காளி-3, தண்ணீர்-5 கப், முந்திரி விழுது-ஒரு டீஸ்பூன், உப்பு-தேவையான அளவு.
செய்முறை
அரிசியை நன்றாக கழுவி, அரைமணி நேரம் வரை ஊறவைக்கவும். வாணலியில் எண் ணெயை சூடாக்கி, பிரிஞ்சி இலை, கிராம்பு, | லவங்கம் சேர்த்து வதக்கி, நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்னர் புதினா, கொத்து மல்லி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போக நன்றாக வதக்கி, நறுக்கிய தக்காளி, மிளகாய்த்தூள், பிரியாணி மசாலா சேர்த்து கிளறவும். ஊற வைத்த தண்ணீரோடு அரிசியை சேர்த்து, முந்திரி விழுது, உப்பு சேர்த்து கொதிக்க விடவும். | தண்ணீர் சுண்டி யதும், வாணலியை மூடி, 15 நிமிடம் அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும். | அரிசி நன்றாக வெந்ததும் நெய், புதினா சேர்த்து கிளறி, வேகவைத்த முட்டையை மேலாக வைத்து பரிமாறவும்.
நெல்லூர் பிரியாணி
பாசுமதி அரிசி- ஒரு கப், பழுத்த தக்காளி - 2, சாம்பார் வெங்காயம் - 15, உப்பு, எண் ணெய் - தேவையான அளவு.
அரைக்க: வெள்ளை எள் ஒரு டேபிள் ஸ்பூன், கடலைப்பருப்பு 2 டேபிள் ஸ்பூன், தனியா - 3 டேபிள் ஸ்பூன், காய்ந்தமிளகாய் - 4. (எண்ணெயில் வறுத்து உப்பு சேர்த்து அரைக்கவும்)
செய்முறை பாசுமதி அரிசியை 2 கப் நீரில் வேக வைத்து உதிர் உதிராக வடிக்கவும். வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு உரித்த சாம்பார் வெங்காயம், நறுக்கிய தக்காளியைப் போட்டு வதக்கவும். இதனுடன் பொடித்த பொடி, வேகவைத்த சாதம் சேர்த்து கிளறிவிட்டு, மல்லித்தழை தூவி இறக்கவும்.
'வெஜிடபிள் குருமா'வுடன் சுவைக்க ஏற்ற பிரியாணி இது!
கருத்துகள்
கருத்துரையிடுக