புடலங்காய் குருமா
தேவையானவை: நறுக்கிய புடலங்காய் ஒரு கப், பச்சைப்பட்டாணி - 3 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவைக்கு, இஞ்சி, பூண்டு விழுது ஒரு டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன். அரைக்க: பச்சைமிளகாய் - 2, பெரிய வெங்காயம் - ஒன்று, பொட்டுக்கடலை - ஒரு டேபிள் ஸ்பூன், கசகசா ஒரு டீஸ்பூன். மேலே தூவி அலங்கரிக்க: நறுக்கிய மல்லித்தழை - 2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ளவற்றை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் விட்டு நைசாக அரைக்கவும். வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன்
எண்ணெய் விட்டு, இஞ்சி, பூண்டு விழுதை வதக்கி, அரைத்த விழுது, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். பின்னர் ஒரு கப் தண்ணீர் விட்டு, புடலங்காய் துண்டுகள், பச்சைப்பட்டாணி சேர்த்து வேகவிடவும். எல்லாமும் ஒன்றாக சேர்ந்து, நன்றாக வெந்ததும் கொத்துமல்லித்தழை தூவி இறக்கவும்,
குறிப்பு: தேங்காய் சேர்க்காமல் செய்வதால், இந்த குருமாவானது நீண்ட நேரம் கெடாமல் இருக்கும். சப்பாத்திக்கு சரியான சைட் டிஷ்
முருங்கைக்காய் குருமா
தேவையானவை: முருங்கைக்காய், பெரிய வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் தலா ஒன்று, உப்பு - தேவைக்கு, பட்டை சிறிய துண்டு, தேங்காய்ப்பால் கால் கப், மஞ்சள்தூள் அரை டீஸ்பூன், எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன். வெறும் வாணலியில் வறுத்து அரைக்க: காய்ந்த மிளகாய் 2,மிளகு - அரை டீஸ்பூன், தனியா வேர்க்கடலை ஒரு டீஸ்பூன், ஒரு டேபிள் ஸ்பூன், எள் அரை டீஸ்பூன். மேலே தூவி அலங்கரிக்க: நறுக்கிய மல்லித்தழை - 2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை: வெறும் வாணலியில் வறுக்கக் கொடுத்துள்ளவற்றை வறுத்து, மிக்ஸியில் போட்டு, தண்ணீர் விட்டு அரைக்கவும். வாணலியில் 2
டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, பட்டையை வதக்கி, நறுக்கிய வெங்காயம், தக்காளி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, ஒரு கப் தண்ணீர் விட்டு, நறுக்கிய முருங்கைக்காயைச் சேர்த்து வேகவிடவும். காய்கள் நன்றாக வெந்ததும், அரைத்த விழுதைச் சேர்த்து இரண்டு கொதி விட்டு, தேங்காய்ப்பால் சேர்க்கவும். பின்னர் ஒரு கொதி வந்ததும், மல்லித்தழைத் தூவி இறக்கவும்.
குறிப்பு: முருங்கைக்காயில் சாம்பார், குழம்பு செய்வதைவிட, இப்படி குருமா செய்து, சாப்பாத்தி / பரோட்டாவுடன் தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்.
பீன்ஸ் குருமா
தேவையானவை: நறுக்கிய பீன்ஸ் கப், நறுக்கிய கேரட் ஒரு கால் கப், உப்பு தேவைக்கு, எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன். அரைக்க: பச்சைமிளகாய் 2. தேங்காய்த்துருவல் - 5 டேபிள் ஸ்பூன், தக்காளி - ஒன்று, பொட்டுக்கடலை ஒரு டேபிள் ஸ்பூன், மசாலா பவுடர்கள்: சில்லி பவுடர் ஒரு டேபிள் ஸ்பூன், மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், தனியா பவுடர் - ஒரு டேபிள் ஸ்பூன், கரம் மசாலா - அரை டீஸ்பூன். மேலே தூவி அலங்கரிக்க: நறுக்கிய கொத்துமல்லித்தழை 2 டேபிள் ஸ்பூன்.
பீன்ஸ் குருமா அரைக்கக் கொடுத்துள்ளவற்றை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் விட்டு அரைக்கவும். வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, சீரகத்தை வதக்கி, மசாலா பவுடர்கள், அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கவும். பின்னர் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு, வெந்த கேரட், பீன்ஸ் சேர்த்து மேலும் இரு கொதிகள் விடவும். நறுக்கிய கொத்துமல்லித்தழைத் தூவி இறக்கவும்.
குறிப்பு: வெங்காயம், பூண்டு சேர்க்க தேவையில்லாததால், விரத நாட்களில் இந்த குருமா செய்யலாம். சப்பாத்தி, பூரி, நாண், பரோட்டா, ரொட்டி, இடியாப்பம் என எல்லாவற்றுக்கும் இந்த குருமா பொருந்தும்.
செய்முறை: பீன்ஸ், கேரட் இரண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர், உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து வேக விடவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக