ஸ்வீட் குருமா
தேவையான பொருட்கள்
வெள்ளை(அ) மஞ் சள் பூசணி-ஒரு பத்தை, வெல்லம்-100 கிராம், வெங்காயம், தக்காளி, பட்டை லவங்கம் - தலா 2, மிளகாய்த்தூள், கசகசா, இஞ்சிபூண்டு, கரம்மசாலா - தலா ஒரு டீஸ்பூன், ம.தூள்-1/4 டீஸ்பூன், தே.பத்தை-6
செய்முறை
பூசணியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை பச்சையாகவும், வெங்காயத்தை வதக்கியும் தனித்தனியாக பேஸ்ட் செய்து கொள்ள வும். வாணலியில் சோம்பு, பட்டை, லவங்கம் தாளித்து பூசணியை வதக்கவும். பிறகு தக்காளி பேஸ்ட் சேர்த்து ம.தூள், மிளகாய்த் தூள், இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து கொதிக்க விடவும். தேங்காய் பத்தை, கசகசா சேர்த்து அரைத்துக் கொள்ளவும். வதக்கிய பூசணியுடன் தக்காளி பேஸ்ட், இஞ்சிபூண்டு பேஸ்ட், வெங்காய பேஸ்ட், ம.தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதி வந்தவுடன் தேங்காய் பேஸ்ட் ஊற்றிக் கிளறி 10 நிமிடம் கழித்து இறக்கி விடவும். மஞ்சள் பூசணி என்பது பரங்கிக்காய்!
சைனீஸ்குருமா
செய்முறை
தேவையான பொருட்கள்
கேரட்- 2, குடை
மிளகாய் - ஒன்று
வெங்காயத்தாள்
சிறிதளவு
வெங்காயபேஸ்ட், தக்காளிபேஸ்ட்-தலா 2 டேபிள் ஸ்பூன், தேங்காய், கசகசா பேஸ்ட் - ஒரு டேபிள் ஸ்பூன், வெண்ணெய் அஜினமோட்டோ, வெள்ளை மிளகு-தலா ஒரு டீஸ்பூன்.
கேரட், குடைமிளகாய், வெங்காயத்தாள் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் வெண்ணெய் விட்டு கேரட், குடைமிளகாய், வெங்காயத் தாளை வதக்கவும். வெள்ளை மிளகைப் பொடித்துப் போடவும். அஜினமோட்டோ, உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு கொதி வந்தவுடன் தக்காளி, வெங்காய பேஸ்ட் சேர்க்கவும். நன்கு கொதித்தவுடன் தேங்காய் பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் கழித்து இறக்கவும்.
தேங்காய் பேஸ்ட் போட்டு அதிகம் கொதிக்கக் கூடாது !
கருத்துகள்
கருத்துரையிடுக