காலிஃப்ளவர்குருமா
தேவையான பொருட்கள்
காலிஃப்ளவர்- ஒன்று. சோம்பு. கடுகு சீரகம்-தலா % டீஸ்பூன், வெங்காயம்- 2, தக்காளி-3, சுரம் மசாலா இஞ்சிபூண்டு பேஸ்ட் - தலா ஒரு டீஸ்பூன், ம.பொடி, மிளகாய்ப்பொடி- தலா / டீஸ்பூன், தேங்காய் - 6பத்தை, பொட்டுக்கடலை-ஒரு டேபிள் ஸ்பூன்.
செய்முறை
கடுகு, சீரகம், சோம்பு தாளிக்கவும். வெங்காயத்தை வதக்கி அரைத்துக் கொள்ளவும். காலிஃப்ளவரில் மஞ்சள்தூள், உப்பு போட்டு வேக வைத்து தாளித்த கடுகுடன் சேர்த்து வதக்கவும். பின் சிறிது தண்ணீர் விட்டு உப்பு, கரம்மசாலா, மிளகாய்ப் பொடி இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். பச்சைத் தக்காளியை தனியே அரைத்துக் கொள்ளவும். பொட்டுக்கடலை, தேங்காய், ப.மிளகாயை பேஸ்ட் செய்யவும். காலிஃப்ளவர் கொதி வந்தவுடன். தக்காளி பேஸ்டைச் சேர்த்து கொதிக்க விடவும். கடைசியாக தேங்காய்க் கலவையைக் கொட்டி கொதிவந்தவுடன் இறக்கவும்.
சாஃப்ட் இட்லிக்கு நல்ல சுவையான குருமா!
ஆலுமட்டர் குருமா
தேவையான பொருட்கள்
சிறிய உருளை-% கிலோ. பபட்டாம் 50 கிராம் தேங்காய்-6 பத்தை முந்திரி 50 கிராம் தக்காளி, 4. வெங்காயம் 2. கரம்மசாலா, மாங்காய்ப்பொடி இஞ்சிபூண்டு பேஸ்ட்- தலா ஒரு டீஸ்பூன்,
செய்முறை
உருளை பட்டாணியை வேகவைத்துக் கொள்ளவும். தக்காளியை அரைத்து பேஸ்டாக்கிக் கொள்ளவும். தேங்காய் முந்திரியை பேஸ்யாக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை வதக்கி தனியாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் சோம்பு தாளித்து. உருளை பட்டாணியை வதக்கி தக்காளி பேஸ்ட்டை: சேர்க்கவும். கரம்மசாலா, மாங்காய்ப்பொடி, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், இஞ்சி, பூண்டு. பேஸ்ட் வெங்காய பேஸ்ட் சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். கடைசியாக தேங்காய் பேஸ்ட் சேர்த்து ஒரு நிமிடம் கழித்து இறக்கி விடவும்.
பூரிக்கு பெஸ்ட் சைட் டிஷ் !
உருண்டை குருமா
தேவையான பொருட்கள்
மசாலா வடை மாவு தக்காளி 2 வெங்காயம், பட்டை, லவங்கம் - தலா 2, சோம்பு, கசகசா, தனியா, இஞ்சிபூண்டு பேஸ்ட் - தலா ஒரு டீஸ்பூன், ப.மிளகாய், தேங்காய் பத்தை- தலா 4, ம.தூள்-1/4 டீஸ்பூன்.
செய்முறை
வடைமாவை ஒரு ரூபாய் அளவு வடைகளாக பொரித்துக் கொள்ளவும். வெங்காயத்தை வதக்கி அரைத்துக் கொள்ளவும், தக்காளியை பச்சையாக அரைத்துக் கொள்ளவும். தனியா, ப.மிளகாயை வறுத்து தேங்காய், கசகசாவுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சோம்பு பட்டை, லவங்கம் தாளித்து தக்காளி பேஸ்டை ம.தூள் சேர்த்து வதக்கவும். இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து கொதிவந்தவுடன் தேங்காய் கலவையை ஊற்றவும். ஒரு கொதி வந்தவுடன் வடைகளைப் போட்டு இறக்கிவிடவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக