புதினா பிஸ்கெட்
தேவையானவை:
புதினா இலைகள் - அரை கப், கோதுமை மாவு - ஒரு கப், சீரகம், வெண்ணெய் தலா ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
புதினா இலைகளை வெறும் வாணலியில் வறுத்து ஆற வைத்து சீரகம் சேர்த்து அரைக்கவும். கோதுமை மாவுடன் உப்பு, அரைத்த புதினா பொடி, வெண்ணெய் சேர்த்து பிசைந்து அரை மணி நேரம் ஊற விடவும். பின்னர் இந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி போல வட்டமாக இட்டு, விரும்பிய வடிவில் வெட்டிக் கொள்ளவும். பின்னர் அவற்றை காய்ந்த எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்
மல்லி பப்பு
துவரம் பருப்பு - ஒரு கப். கொத்துமல்லித்தழை - அரை கப், தக்காளி - 3, சீரகம் ஒரு டீஸ்பூன், சாம்பார் பொடி - 3 டீஸ்பூன், மஞ்சள்தூள், கடுகு, உளுந்தம்பருப்பு,
கறிவேப்பிலை, கடலைப்பருப்பு, பெருங்காயம் - சிறிதளவு,
உப்பு, எண்ணெய் தேவையான அளவு.
துவரம் பருப்புடன் தக்காளி, மஞ்சள் தூள் சேர்த்து குழைய வேக விடவும். கொத்துமல்லித்தழையுடன் சீரகம் சேர்த்து விழுதாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் காயவிட்டு, கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளிக்கவும். பின்னர் அரைத்த விழுது, சாம்பார் பொடி, உப்பு சேர்த்து ஒரு கொதி விடவும். பின்னர் வேக வைத்த பருப்பை : எடுத்து நன்றாக மசித்து, மறுபடியும் அடுப்பில் வைத்து மேலும் ஓரிரு கொதிகள் வந்ததும் இறக்கவும். சாதத்துடன் பிசைந்து சாப்பிட ஏற்ற பப்பு இது !
கறிவேப்பிலை-காலிஃபிளவர் ரோஸ்ட்
தேவையானவை:
காலிஃபிளவர் துண்டுகள் - ஒரு. கப், கறிவேப்பிலை - அரை கப், மிளகு - 5, எண்ணெய் சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
காலிஃபிளவர் பூக்களை ஆய்ந்து வெந்நீரில் போட்டு புழுக்களை நீக்கி வைக்கவும். வெறும் வாணலியில் கறிவேப்பிலை, மிளகு சேர்த்து வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், காலிஃபிளவர் துண்டுகளைப் போட்டு வதக்கவும். பின்னர் அரைத்த பொடி, உப்பு சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும். சூடான சாதத்துடன் பரிமாறவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக