காளான் குருமா
தேவையானவை: நறுக்கிய காளான் - ஒரு கப், உப்பு - தேவைக்கு, நீளவாக்கில் மெலிதாக நறுக்கிய குடைமிளகாய் - கால் கப், தயிர் 3 டேபிள் ஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன், பெரிய வெங்காயம் - ஒன்று. வதக்கி அரைக்க: எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், பட்டை ஒரு சிறிய துண்டு, கசகசா - அரை டீஸ்பூன், சின்ன வெங்காயம் - 8, இஞ்சி, பூண்டு விழுது -ஒரு டீஸ்பூன், தேங்காய்த்துருவல் கால் கப், தனியா பவுடர், சில்லி பவுடர் - தலா ஒரு டேபிள் ஸ்பூன். மேலே தூவ: கசூரி மேத்தி ஒரு டேபிள் ஸ்பூன்.
செய்முறை: வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, வதக்கக் கொடுத்துள்ளவற்றைச் சேர்த்து வதக்கி, நீர் விட்டு கெட்டியாக நைசாக அரைக்கவும். அதே வாணலியில் மீதியுள்ள எண்ணெயை ஊற்றி, நறுக்கிய வெங்காயத்தை, வதக்கி, அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கவும். பின்னர் அரை கப் தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து கொதிக்க விடவும். இரண்டு கொதி வந்ததும், நறுக்கிய காளான், குடைமிளகாய் சேர்த்து வேக விடவும். காய்கள் நன்றாக வெந்ததும், தயிர், கசூரி மேத்தி சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். குறிப்பு: இந்த காளான் குருமா, நாண் / ரொட்டிக்கு தொட்டுச் சாப்பிட ஏற்றது.
தேங்காய்ப்பால் குருமா
தேவையானவை: பெரிய சைல் உருளைக்கிழங்கு - 2, உப்பு - தேவைக்கு. மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், தேங்காய்ப்பால் ஒரு கப், எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், பெரிய வெங்காயம் - ஒன்று, பட்டை - சிறிய துண்டு வதக்கி அரைக்க: சின்ன வெங்காயம் 10. பச்சைமிளகாய் - 4, சோம்பு - அரை டீஸ்பூன், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பூண்டு - 4 பற்கள்,
செய்முறை: உருளைக்கிழங்கை தோல் சீவி நறுக்கி, உப்பு, அளவான நீர் விட்டு, அரைவேக்காடு பதத்தில் வேகவிட்டு தனியே வைக்கவும். வாணிலியில் ஒரு டேபிள் ஸ்பூன்
"எண்ணெய் விட்டு, வதக்கக் கொடுத்துள்ளவற்றை வதக்கி, தண்ணீர் விட்டு அரைக்கவும், அதே வாணவியில் மீதமுள்ள ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, பட்டையை தாளித்து, நறுக்கிய வெங்காயம், அரைத்த விழுது சேர்த்து வதக்கி, அரைவேக்காடு வெந்த உருளையைச் சேர்த்து, தேங்காய்ப்பாலை ஊற்றவும். உருளை வெந்ததும் மிளகுத்தூளைத் தூவி இறக்கவும்.
குறிப்பு: சப்பாத்தி / பூரி / நாண் / ரொட்டி உள்ளிட்டவற்றுக்குத் தொட்டுக்கொள்ள ஏற்ற குருமா இது
கருத்துகள்
கருத்துரையிடுக