சௌசௌ குருமா
தேவையானவை: தோல் சீவி அரிந்த சௌசௌ - ஒரு கப், பெரிய வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பூண்டு - 3 பற்கள், உப்பு - தேவைக்கு, சின்ன வெங்காயம்
4, தேங்காய்த்துருவல் - 3 டேபிள் ஸ்பூன், காய்ந்தமிளகாய் 3, லவங்கப்பட்டை சிறிய துண்டு, மஞ்சள்தூள் ஒரு ஒரு டீஸ்பூன், நறுக்கிய மல்லித்தழை - 2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை: உரித்த சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, காய்ந்தமிளகாய்,
தேங்காய்த்துருவல் ஆகியவற்றை ஒன்றாக மிக்ஸியில் போட்டு, தண்ணீர் விட்டு அரைக்கவும். வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, பட்டை போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி, மஞ்சள்தூள், உப்பு, அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கவும். பின்னர் ஒரு கப் தண்ணீர் விட்டு, நறுக்கிய சௌசௌ சேர்த்து வேகவிடவும். எல்லாம் சேர்ந்து வெந்ததும், கொத்துமல்லித்தழைத் தூவி இறக்கவும்.
குறிப்பு: சப்பாத்தி / பூரியுடன் தொட்டுக்கொள்ள ஏற்ற குருமா இது.
கருத்துகள்
கருத்துரையிடுக