தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி
பாசுமதி அரிசி - 3 கப், சிக்கன் (துண்டுகளாக நறுக்கியது)-ஒரு கிலோ லவங்கம், பிரிஞ்சி இலை-தலா ஒன்று, கிராம்பு-2, புதினா-ஒரு கைப்பிடியளவு, கொத்து மல்லித்தழை - சிறிதளவு, பச்சைமிளகாய்-5, நெய்-2 டேபிள்ஸ்பூன், பிரியாணி மசாலா, இஞ்சி, பூண்டு விழுது - ஒன்றரை டீஸ்பூன், சிவப்பு மிளகாய்த்தூள்-3 டீஸ்பூன், வெங்காயம்-2, தக்காளி-3, தண்ணீர்-5 கப், முந்திரி விழுது-ஒரு டீஸ்பூன், உப்பு-தேவையான அளவு.
செய்முறை
பாசுமதி அரிசியை நன்றாக கழுவி, அரைமணிநேரம் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெயை சூடாக்கி பிரிஞ்சி இலை, கிராம்பு, லவங்கம் சேர்த்து வதக்கி, நறுக்கிய வெங்காயம், படமிளகாய் சேர்த்து பொன் னிறமாக வதக்கவும். பின்னர் புதினா, கொத்து மல்லி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். பின்னர் சிக்கன் துண்டுகளை சேர்த்து கிளறி, நறுக்கிய தக்காளி, சிவப்பு மிளகாய்த்தூள், பிரியாணி மசாலா சேர்த்து கிளறி, அரை கப் தண்ணீர் சேர்த்து மூடி, 3 விசில் வரும் வரை வேக விடவும். பின்னர் ஊறவைத்த அரிசியை தண்ணீருடன் சேர்த்து, முந்திரி விழுது, தேவை யான அளவு உப்பு சேர்த்து, சுண்ட விடவும். பின்னர் குக்கரை மூடி, அடுப்பை 15 நிமிடம் மிதமான சூட்டில் வைத்திருக்கவும். அரிசி வெந்ததும் நெய், புதினா சேர்த்து கிளறி இறக்கவும்.
(அசைவபிரியாணி வகைகள்
தலப்பாக்கட்டி மட்டன் பிரியாணி
பாசுமதி அரிசி - 3 கப், மட்டன் (துண்டுகளாக (நறுக்கியது) ஒரு கிலோ, லவங்கம், பிரிஞ்சி இலை -தலா ஒன்று, கிராம்பு-2, புதினா-ஒரு கைப்பிடியளவு, கொத்துமல்லித்தழை- சிறிதளவு, பச்சைமிளகாய்-5, நெய் 2 டேபிள்ஸ்பூன், பிரியாணி மசாலா, இஞ்சி, பூண்டு விழுது- ஒன்றரை டீஸ்பூன், சிவப்பு மிளகாய்த்தூள்-3 டீஸ்பூன் வெங்காயம்-2, தக்காளி-3, தண்ணீர்-5 கப், முந்திரி விழுது-ஒரு டீஸ்பூன், உப்பு-தேவையான அளவு, தேவையானவை
அரிசியை நன்றாக கழுவி, அரைமணி நேரம் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெயை சூடாக்கி பிரிஞ்சி இலை, கிராம்பு, லவங்கம் சேர்த்து வதக்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்னர் புதினா, கொத்துமல்லித்தழை, இஞ்சி, பூண்டு சேர்த்து பச்சை வாசம் போக வதக்கி, கழுவிய மட்டன் துண்டுகளை சேர்த்து கிளறவும். பின்னர் நறுக்கிய தக்காளி, சிவப்பு மிளகாய்த்தூள், பிரியாணி மசாலா சேர்த்து கிளறி, அரை கப் தண்ணீர் சேர்த்து மூடி, 3 விசில் விடவும். பின்னர் ஊறவைத்த அரிசி, அரைத்த முந்தி விழுது, தேவையான உப்பு சேர்த்து, கண்ட ட்டு, குக்கரை மூடி, 15 நிமிடம் அடுப்பை மித மான சூட்டில் வைத் திருக்கவும். அரிசி வெந்த வுடன் நெய், புதினா சேர்த்து கிளறி இறக்கவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக