பாதாம் பதிர் பூரி
தேவையான பொருட்கள்: மைதா
ஒரு கப், பாதாம் பருப்பு-100 கிராம், உப்பு - ஒரு சிட்டிகை, எண்ணெய் பொரிக்கத் தேவையான அளவு, சர்க்கரை-2 கப், தண்ணீர்-ஒரு கப்.
செய்முறை: பாதாம் பருப்பை முதல் நாளே ஊற வைத்து தோலுரித்து விழுதாக அரைத்துக் கொண்டு, மைதா, உப்பு சேர்த்து பூரிமாவு பதத்துக்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
பதிர் தயாரிக்க தேவையான பொருட்கள்: மைதா - ஒருகப், நெய்-ஒரு கப், அரிசிமாவு-ஒரு மேஜைக்கரண்டி.
செய்முறை: மேற்கண்டவைகளைக் கலந்து நுரைக்க அடித்து வைத்துக்
கொள்ளவும்.
பாதாம் பதிர்பூரி செய்முறை: பூரிமாவு பதத்திற்குப் பிசைந்து வைத்த மாவை, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி குட்டி குட்டி வட்டங்களாகத் தேய்க்கவும். தேய்த்த வட்டங்களுக்கு மேல் பதிரைத் தடவவும். இப்படியே - தடவுவது போல் தடவி நான்கு அடுக்குகள் வைக்கவும். மொத்தமாக சுருட்டவும். சுருட்டிய வட்டங்களை கத்தியால் வெட்டி, கடாயில் எண்ணெய் வைத்து பொரித்து எடுக்கவும். சர்க்கரைப்பாகு கம்பிப்பதம் காய்ச்சி, பொரித்தவைகளை பாகில்போட்டு எடுத்து வைக்கவும்.
பக்குவம்
பதிர் தயாரிக்க தளர வரவில்லை என்றால் நெய் இன்னும்கூட கொஞ்சம் சேர்த்துக்கொள்ளலாம்.
பர்க்கர் வாடி
தேவையானபொருட்கள்:
கடலைமாவு-4 கப், சோளமாவு-2 கப், மிளகாய்த்தூள்-ஒரு டீஸ்பூன், கறுப்பு எள்-ஒரு டீஸ்பூன், வெள்ளை எள்- ஒரு டீஸ்பூன், துருவிய கொப்பரைத் தேங்காய் 1/4கப், கசகசா-1/4கப், நெய்-ஒரு
மேஜைக்கரண்டி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை-ஒரு கப், மிளகாய்ப்பொடி, கரம்மசாலாப் பொடி, மராட்டி மசாலாப்பொடி தலா 2 டீஸ்பூன், சர்க்கரை, ஆம்சூர்பொடி-தலா ஒரு டீஸ்பூன், புளி தண்ணீர் குட்டி எலுமிச்சை அளவு, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை: கடலைமாவு, சோளமாவு, மிளகாய்த்தூள், கறுப்பு எள் சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து பூரிமாவு போல் பிசைந்து கொள்ளவும். துருவிய கொப்பரைத் தேங்காய், கசகசா இரண்டையும் நெய் ஊற்றி வறுத்துக் கொள்ளவும். பின் கொப்பரைத் தேங்காய், கசகசாவோடு மேற்கண்ட பொடிகள், கொத்தமல்லித்தழை கலந்து பூரணமாக வைத்துக்கொள்ளவும். பிசைந்த மாவை சப்பாத்திக் கட்டையில் சிறு சிறு வட்டங்களாகத் தேய்த்து வைத்துக்கொள்ளவும். பின்னர் ஒவ்வொரு வட்டத்திலும் புளித்தண்ணீர் தடவி, பூரணத்தைப் பரத்தி சுருட்டவும். சுருட்டியதை இரண்டு, மூன்றாகக் கட் செய்யவும். கட் செய்த ரோல்களை எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
பக்குவம்
புளித்தண்ணீர், புளிக்காய்ச்சலுக்கு கரைப்பதைவிட திக்காக இருக்கவேண்டும் இல்லையெனில் மாவு ஊறிவிடும்.
கரேலா முறுக்கு
கரேலா முறுக்கு தேவையான பொருட்கள்: மைத-/2கிலோ, சூடாக்கிய வனஸ்பதி-50 கிராம், ஓமம் - 2 டீஸ்பூன், சமையல் சோடா-ஒரு சிட்டிகை, எள் 3 டீஸ்பூன், உப்பு-தேவையான அளவு. எண்ணெய் பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை: மைதாமாவோடு உப்பு, ஓமம், சமையல் சோடா கலந்து, வனஸ்பதியை விட்டுப் பிசைந்து கொள்ளவும். சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, மெல்லிய வட்டங்களாக இட்டுக் கொள்ளவும். அதை ஒன்றரை இன்ச் நீளத் துண்டுகளாக வெட்டவும். ஒவ்வொரு துண்டின் நடுவிலும் கத்தியால் பலமுறை கீறிவிடவும். பிறகு அந்த துண்டுகளின் இரண்டு முனைகளையும் பிடித்து நடுவில் சுழற்றியது போல் மடித்தால், பாகற்காய் வடிவம் வரும். மேலே எள்ளைத் தூவி, எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
எள்ளைத் தூவி அமுக்கிவிட்டால் பாகற்காய் போல் செதிலான தோற்றம் கிடைக்கும்.
ரிப்பன் பகோடா
தேவையான பொருட்கள் பச்னீசினவு100 கிராம், கடலைமாவு 200 கிராம், வெண்ணெய் 50 கிராம், பெருங்காயம் ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூன் ஒரு உன்பூன், மஞ்சள்தூள்ஸ்பூன் கரஸ்பூன், எண்ணெய் பொரிக்கத் தேவையான அளவு உப்புதேவையான அளவு
வால்முரை அரிசிமாவை வேசாக வாணலியில் வதக்கிக் கொள்ளவும் பின் இதோடு எண்ணெய் தவிர மேற்கண்ட அனைத்தையும் சேர்த்து தண்ணீர் தெளித்துப் பிசைந்து கொள்ளவும் வாணலியில் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும், முறுக்குக் குழாயில் ரிப்பன் பகோடா அச்சைப் போட்டு நின நீளமாகப் பிழிந்து விடவும்.
பக்குவம்
அரிசி மாவை பச்சை வாசனை போக வதக்கினால் போதும் அதிகநேரம் வதக்கினால், மாவு வறுபட்டு சிப்பன் பகோடா உதிரிபகோடாவாகும்.
கருத்துகள்
கருத்துரையிடுக