முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

GOOD MORNING

ரெடிமிக்ஸ் வடைமாவு&கபாலி புர்குலி&கொய்யாப்பழ தவா பஜ்ஜி&ரெடிமிக்ஸ் பஜ்ஜிமாவு&அரைத்த மாவு பஜ்ஜி&வெஜிடபிள் ரிங்க்ஸ்&டபுள் டெக்கர் பஜ்ஜி

 ரெடிமிக்ஸ் வடைமாவு தேவையானவை: உளுந்தம்பருப்பு - 1 கப், அரிசிமாவு - 1/4 கப், பெருங்காயத்தூள், பேக்கிங் பவுடர், மிளகு - தலா 1/4 ஸ்பூன், பச்சைமிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 1/2 ஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப. செய்முறை: தண்ணீரில் உளுந்தை இருமுறைக் கழுவி, நீரை வடித்து, ஒரு துணியில் பரப்பி, காயவைக்கவும். பின்னர், வெறும் கடாயில் போட்டு, சூடு வரும்வரை வறுத்தெடுத்து, மிக்ஸியில் பொடிக்கவும். இதனுடன் உப்பு, பெருங்காயத்தூள், பேக்கிங் பவுடர், அரிசிமாவு சேர்த்து, கலக்கவும். 1 ஸ்பூன் எண்ணெய்யை சூடாக்கி, நறுக்கிய ப.மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, ஈரமில்லாமல் எடுக்கவும். இதையும் அரைத்த மாவில் சேர்த்து, நன்றாகக் கலந்துவிட்டால், 'வடைமாவு' தயார். குறிப்பு: தேவைப்படும்போது, இந்த மாவில் தண்ணீர் ஊற்றிக் கலந்து, வடைகள் செய்யலாம். கபாலி புர்குலி தேவையானவை: பறங்கிப்பூ இதழ்கள் - 10, பாசிப்பருப்பு - 1 கப், சோம்பு, தனியா - தலா 1 ஸ்பூன், பச்சைமிளகாய் - 4, நெய் - 2 ஸ்பூன், புதினா 1 கைப்பிடி, உப்பு, எண்ணெய் - தேவைக்கு. செய்முறை: பாசிப்பருப்பை ஊறவைத்து, நீரை வடித்து, சோம்பு, த...

பிரட் பீட்ஸா & ஃப்ரூட் சாண்ட்விச்

 பிரட் பீட்ஸா தேலையானவை. பிரட் துண்டுகள் - 8. ஆரிகானோ -துருவின பனீர், வெண்ணெய், தக்காளி சாஸ் - தலா 2 ஸ்பூன், துருவின சீஸ் - 2 ஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப, மிகப்பொடியாக அரிந்த பச்சைமிளகாய் - 2. செய்முறை: துருவின பனீர், தக்காளி சாஸ், உப்பு, ஆரிகானோ, பச்சைமிளகாய் சேர்த்து கலந்து வைக்கவும். பிரட்டில், வெண்ணெய் தடவவும், அதன்மேல், பனீர் கலவை தடவவும், துருவின சீஸ் சேர்க்கவும். அதன்மேல் மற்றொரு பிரட் வைத்து, அதன்மேல் ஒரு கனமான பாத்திரம் வைத்து, அடுப்பை சிம்மில் வைக்கவும், கீழ் பாகம் சிவந்ததும், பாத்திரத்தை எடுத்து, மறுபுறம் திருப்பி, வெந்ததும் பரிமாறவும். (பிரட்டின் மேல், அப்பளக்குழவியால் தேய்த்தால், பிரட் மெலிதாக ஆகும்.) ஃப்ரூட் சாண்ட்விச்ஃப்ரூட் சான்ட்விச்  தேவையானவை: சாண்ட்விச் பிரட் துண்டுகள் - 10, அளிந்த பழத்துண்டுகள் (மாம்பழம், வாழைப்பழம், கொய்யா, தர்பூசணி) - தலா 4 கப், வெண்ணெய் - 1 ஸ்பூன், செய்முறை: பழத்துண்டுகள் 10 எடுத்து வைத்து, மீதமானதை மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரைக்கவும். 2 பிரட் துண்டுகளையும் சேர்த்து அரைக்கவும். மீதமான பிரட் துண்டுகளில் வெண்ணெய் தடவவும். அரைத்து வைத்த ...

குருமா வகைகள்

 பாலக் உருளை குருமா தேவையானவை: நறுக்கிய பசலைக்கீரை -2 கப், நறுக்கிய உருளைக்கிழங்கு கப், உப்பு கால் தேவைக்கு, எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், பெரிய வெங்காயம் ஒன்று, சில்லி பவுடர் - 2 டேபிள் ஸ்பூன், மஞ்சள்தூள் அரை டீஸ்பூன். அரைக்க: சோம்பு - அரை டீஸ்பூன், முந்திரித்துண்டுகள், பொட்டுக்கடலை தலா ஒரு டேபிள் ஸ்பூன், தக்காளி - தேங்காய்த்துருவல் - 6 டேபிள் ஸ்பூன், பூண்டு 3 பற்கள். செய்முறை: உருளைக்கிழங்குடன் தண்ணீர், உப்பு சேர்த்து வேகவைத்து, தோலை உரித்து, நறுக்கவும். பசலைக்கீரையுடன் தண்ணீர், இறக்கவும். சிறிதளவு உப்பு சேர்த்து வேகவைத்து, வெந்தகீரையை குளிர்ந்த நீரில் சிறிது நேரம் போட்டு, பிறகு மிக்ஸியில் நைசாக அரைக்கவும் அப்போதுதான் கீரையின் நிறம் மாறாமல் இருக்கும்). அரைக்கக் கொடுத்துள்ளவற்றை மிக்ஸியில் போட்டு தண்ணீர் விட்டு, கெட்டியாக நைசாக அரைக்கவும். வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயத்தை ஒன்று, வதக்கி, அரைத்த விழுது, சில்லி பவுடர், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். பின்னர் வெந்த உருளையைச் சேர்த்து, கால் கப் தண்ணீர் விட்டு, இரண்டு கொதி விட்டு, அரைத்த கீரை விழுதைச் சேர்த்து மேலும் ...

புடலங்காய் குருமா&முருங்கைக்காய் குருமா&பீன்ஸ் குருமா

 புடலங்காய் குருமா தேவையானவை: நறுக்கிய புடலங்காய் ஒரு கப், பச்சைப்பட்டாணி - 3 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவைக்கு, இஞ்சி, பூண்டு விழுது ஒரு டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன். அரைக்க: பச்சைமிளகாய் - 2, பெரிய வெங்காயம் - ஒன்று, பொட்டுக்கடலை - ஒரு டேபிள் ஸ்பூன், கசகசா ஒரு டீஸ்பூன். மேலே தூவி அலங்கரிக்க: நறுக்கிய மல்லித்தழை - 2 டேபிள் ஸ்பூன். செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ளவற்றை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் விட்டு நைசாக அரைக்கவும். வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன்   எண்ணெய் விட்டு, இஞ்சி, பூண்டு விழுதை வதக்கி, அரைத்த விழுது, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். பின்னர் ஒரு கப் தண்ணீர் விட்டு, புடலங்காய் துண்டுகள், பச்சைப்பட்டாணி சேர்த்து வேகவிடவும். எல்லாமும் ஒன்றாக சேர்ந்து, நன்றாக வெந்ததும் கொத்துமல்லித்தழை தூவி இறக்கவும், குறிப்பு: தேங்காய் சேர்க்காமல் செய்வதால், இந்த குருமாவானது நீண்ட நேரம் கெடாமல் இருக்கும். சப்பாத்திக்கு சரியான சைட் டிஷ்  முருங்கைக்காய் குருமா தேவையானவை: முருங்கைக்காய், பெரிய வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் தலா ஒன்று, உப்பு - த...

ஸ்வீட் குருமா &சைனீஸ்குருமா

 ஸ்வீட் குருமா   தேவையான பொருட்கள்  வெள்ளை(அ) மஞ் சள் பூசணி-ஒரு பத்தை, வெல்லம்-100 கிராம், வெங்காயம், தக்காளி, பட்டை லவங்கம் - தலா 2, மிளகாய்த்தூள், கசகசா, இஞ்சிபூண்டு, கரம்மசாலா - தலா ஒரு டீஸ்பூன், ம.தூள்-1/4 டீஸ்பூன், தே.பத்தை-6   செய்முறை பூசணியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை பச்சையாகவும், வெங்காயத்தை வதக்கியும் தனித்தனியாக பேஸ்ட் செய்து கொள்ள வும். வாணலியில் சோம்பு, பட்டை, லவங்கம் தாளித்து பூசணியை வதக்கவும். பிறகு தக்காளி பேஸ்ட் சேர்த்து ம.தூள், மிளகாய்த் தூள், இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து கொதிக்க விடவும். தேங்காய் பத்தை, கசகசா சேர்த்து அரைத்துக் கொள்ளவும். வதக்கிய பூசணியுடன் தக்காளி பேஸ்ட், இஞ்சிபூண்டு பேஸ்ட், வெங்காய பேஸ்ட், ம.தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதி வந்தவுடன் தேங்காய் பேஸ்ட் ஊற்றிக் கிளறி 10 நிமிடம் கழித்து இறக்கி விடவும். மஞ்சள் பூசணி என்பது பரங்கிக்காய்!   சைனீஸ்குருமா செய்முறை தேவையான பொருட்கள் கேரட்- 2, குடை மிளகாய் - ஒன்று வெங்காயத்தாள் சிறிதளவு வெங்காயபேஸ்ட், தக்காளிபேஸ்ட்-தலா 2 டேபிள் ஸ்பூன், தேங்காய்...

காலிஃப்ளவர்குருமா&ஆலுமட்டர் குருமா&உருண்டை குருமா

 காலிஃப்ளவர்குருமா தேவையான பொருட்கள் காலிஃப்ளவர்- ஒன்று. சோம்பு. கடுகு சீரகம்-தலா % டீஸ்பூன், வெங்காயம்- 2, தக்காளி-3, சுரம் மசாலா இஞ்சிபூண்டு பேஸ்ட் - தலா ஒரு டீஸ்பூன், ம.பொடி, மிளகாய்ப்பொடி- தலா / டீஸ்பூன், தேங்காய் - 6பத்தை, பொட்டுக்கடலை-ஒரு டேபிள் ஸ்பூன். செய்முறை கடுகு, சீரகம், சோம்பு தாளிக்கவும். வெங்காயத்தை வதக்கி அரைத்துக் கொள்ளவும். காலிஃப்ளவரில் மஞ்சள்தூள், உப்பு போட்டு வேக வைத்து தாளித்த கடுகுடன் சேர்த்து வதக்கவும். பின் சிறிது தண்ணீர் விட்டு உப்பு, கரம்மசாலா, மிளகாய்ப் பொடி இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். பச்சைத் தக்காளியை தனியே அரைத்துக் கொள்ளவும். பொட்டுக்கடலை, தேங்காய், ப.மிளகாயை பேஸ்ட் செய்யவும். காலிஃப்ளவர் கொதி வந்தவுடன். தக்காளி பேஸ்டைச் சேர்த்து கொதிக்க விடவும். கடைசியாக தேங்காய்க் கலவையைக் கொட்டி கொதிவந்தவுடன் இறக்கவும். சாஃப்ட் இட்லிக்கு நல்ல சுவையான குருமா! ஆலுமட்டர் குருமா தேவையான பொருட்கள் சிறிய உருளை-% கிலோ. பபட்டாம் 50 கிராம் தேங்காய்-6 பத்தை முந்திரி 50 கிராம் தக்காளி, 4. வெங்காயம் 2. கரம்மசாலா, மாங்காய்ப்பொடி இஞ்சிபூண்டு பேஸ்ட்- தலா ஒரு டீஸ்பூன்,...

புதினா பிஸ்கெட்&மல்லி பப்பு&கறிவேப்பிலை-காலிஃபிளவர் ரோஸ்ட்

 புதினா பிஸ்கெட் தேவையானவை: புதினா இலைகள் - அரை கப், கோதுமை மாவு - ஒரு கப், சீரகம், வெண்ணெய் தலா ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: புதினா இலைகளை வெறும் வாணலியில் வறுத்து ஆற வைத்து சீரகம் சேர்த்து அரைக்கவும். கோதுமை மாவுடன் உப்பு, அரைத்த புதினா பொடி, வெண்ணெய் சேர்த்து பிசைந்து அரை மணி நேரம் ஊற விடவும். பின்னர் இந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி போல வட்டமாக இட்டு, விரும்பிய வடிவில் வெட்டிக் கொள்ளவும். பின்னர் அவற்றை காய்ந்த எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்  மல்லி பப்பு துவரம் பருப்பு - ஒரு கப். கொத்துமல்லித்தழை - அரை கப், தக்காளி - 3, சீரகம் ஒரு டீஸ்பூன், சாம்பார் பொடி - 3 டீஸ்பூன், மஞ்சள்தூள், கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, கடலைப்பருப்பு, பெருங்காயம் - சிறிதளவு, உப்பு, எண்ணெய் தேவையான அளவு. துவரம் பருப்புடன் தக்காளி, மஞ்சள் தூள் சேர்த்து குழைய வேக விடவும். கொத்துமல்லித்தழையுடன் சீரகம் சேர்த்து விழுதாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் காயவிட்டு, கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளிக்கவும். பின்னர...

மல்லி-தினை பெசரெட்&மல்லி உசிலி &மல்லி-ஆலு டிக்கி

 மல்லி-தினை பெசரெட் தேவையானவை: தினை, கொத்துமல்லித்தழை தலா ஒரு கப், பாசிப்பருப்பு ஒன்றரை கப், வெங்காயம் ஒன்று, இஞ்சித் துருவல் - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 5. உப்பு, எண்ணெய் தேவையான அளவு. செய்முறை: தினை, பருப்பு இரண்டையும் முதல் நாள் இரவே ஊற விடவும், வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். ஊற வைத்த தினை, பாசிப்பருப்பு இரண்டையும் மிக்ஸியில் போட்டு, அதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சித்துருவல், நறுக்கிய வெங்காயம், சுத்தம் செய்த கொத்துமல்லித்தழை ஆகியவற்றைச் சேர்த்து சற்று கரகரப்பாக அரைக்கவும், பின்னர் தேவையான அளவு உப்பு போட்டு கலந்து கொள்ளவும். அடுப்பில் தோசைக்கல்லை காய வைத்து, அரைத்த மாவை சற்று கனமான தோசையாக வார்த்து, கற்றிலும் எண்ணெய் விட்டு, இருபுறமும் நன்றாக வேக வைத்து எடுக்கவும். இந்த மாவை புளிக்க வைக்க வேண்டாம். அரைத்ததும் அப்படியே தோசை வார்க்கலாம். மல்லி உசிலி  தேவையானவை: கொத்துமல்லித்தழை - ஒரு கப், கடலைப் பருப்பு, துவரம் பருப்பு - தலா 4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, உப்பு, பெருங்காயம் - தேவையான அளவு. செய்முறை: பருப்பு வகைகளை பத்து நிமிடம் ஊற வைத்து, காய்ந்த மிளகாய், உப்பு, பெர...

காளான் குருமா &தேங்காய்ப்பால் குருமா

 காளான்  குருமா தேவையானவை: நறுக்கிய காளான் - ஒரு கப், உப்பு - தேவைக்கு, நீளவாக்கில் மெலிதாக நறுக்கிய குடைமிளகாய் - கால் கப், தயிர் 3 டேபிள் ஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன், பெரிய வெங்காயம் - ஒன்று. வதக்கி அரைக்க: எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், பட்டை ஒரு சிறிய துண்டு, கசகசா - அரை டீஸ்பூன், சின்ன வெங்காயம் - 8, இஞ்சி, பூண்டு விழுது -ஒரு டீஸ்பூன், தேங்காய்த்துருவல் கால் கப், தனியா பவுடர், சில்லி பவுடர் - தலா ஒரு டேபிள் ஸ்பூன். மேலே தூவ: கசூரி மேத்தி ஒரு டேபிள் ஸ்பூன். செய்முறை: வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, வதக்கக் கொடுத்துள்ளவற்றைச் சேர்த்து வதக்கி, நீர் விட்டு கெட்டியாக நைசாக அரைக்கவும். அதே வாணலியில் மீதியுள்ள எண்ணெயை ஊற்றி, நறுக்கிய வெங்காயத்தை, வதக்கி, அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கவும். பின்னர் அரை கப் தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து கொதிக்க விடவும். இரண்டு கொதி வந்ததும், நறுக்கிய காளான், குடைமிளகாய் சேர்த்து வேக விடவும். காய்கள் நன்றாக வெந்ததும், தயிர், கசூரி மேத்தி சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். குறிப்பு: இந்த காளான் குர...

வேர்க்கடலை குருமா&சுரைக்காய் குருமா

 வேர்க்கடலை குருமா தேவையானவை: மேல் தோல் உரித்த பச்சை வேர்க்கடலை 2 கப், உப்பு தேவைக்கு, கேரட் துருவல் - 4 டேபிள் ஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், தக்காளி, பெரிய வெங்காயம் தலா ஒன்று, பெருங்காயம் அரை டீஸ்பூன், பச்சைமிளகாய் 2, எண்ணெய், பொட்டுக்கடலை மாவு, நறுக்கிய கொத்துமல்லித்தழை - தலா 2 டேபிள் ஸ்பூன். செய்முறை: பச்சை வேர்க்கடலையை 2 மணி நேரம் நீரில் ஊறவைத்து, அளவான நீர் விட்டு, உப்பு சேர்த்து வேகவிடவும். வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும். பின்னர் பெருங்காயம், மஞ்சள்தூள், கேரட் துருவல் சேர்த்து வதக்கி, வெந்த வேர்க்கடலையை நீருடன் சேர்த்து இரண்டு கொதி விடவும். பின்னர் பொட்டுக்கடலை மாவுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் நீர் விட்டு கரைத்து, கொதிக்கும் கலவையில் ஊற்றி, நன்றாக கலந்து விடவும். மறுபடியும் இரண்டு கொதி வந்ததும், கொத்துமல்லித்தழைத் தூவி இறக்கவும். குறிப்பு: தேங்காய் சேர்க்காததால் இந்த குருமா விரைவில் கெடாது. காலையில் செய்தால் மதியம் வரை நன்றாக இருக்கும். சப்பாத்தி / பரோட்டாவுக்கு ஏற்றது.  சுரைக்காய் குருமா தேவையானவை...

சௌசௌ குருமா

சௌசௌ குருமா தேவையானவை: தோல் சீவி அரிந்த சௌசௌ - ஒரு கப், பெரிய வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பூண்டு - 3 பற்கள், உப்பு - தேவைக்கு, சின்ன வெங்காயம் 4, தேங்காய்த்துருவல் - 3 டேபிள் ஸ்பூன், காய்ந்தமிளகாய் 3, லவங்கப்பட்டை சிறிய துண்டு, மஞ்சள்தூள் ஒரு ஒரு டீஸ்பூன், நறுக்கிய மல்லித்தழை - 2 டேபிள் ஸ்பூன். செய்முறை: உரித்த சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, காய்ந்தமிளகாய், தேங்காய்த்துருவல் ஆகியவற்றை ஒன்றாக மிக்ஸியில் போட்டு, தண்ணீர் விட்டு அரைக்கவும். வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, பட்டை போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி, மஞ்சள்தூள், உப்பு, அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கவும். பின்னர் ஒரு கப் தண்ணீர் விட்டு, நறுக்கிய சௌசௌ சேர்த்து வேகவிடவும். எல்லாம் சேர்ந்து வெந்ததும், கொத்துமல்லித்தழைத் தூவி இறக்கவும். குறிப்பு: சப்பாத்தி / பூரியுடன் தொட்டுக்கொள்ள ஏற்ற குருமா இது.

தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி&தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி

 தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி பாசுமதி அரிசி - 3 கப், சிக்கன் (துண்டுகளாக நறுக்கியது)-ஒரு கிலோ லவங்கம், பிரிஞ்சி இலை-தலா ஒன்று, கிராம்பு-2, புதினா-ஒரு கைப்பிடியளவு, கொத்து மல்லித்தழை - சிறிதளவு, பச்சைமிளகாய்-5, நெய்-2 டேபிள்ஸ்பூன், பிரியாணி மசாலா, இஞ்சி, பூண்டு விழுது - ஒன்றரை டீஸ்பூன், சிவப்பு மிளகாய்த்தூள்-3 டீஸ்பூன், வெங்காயம்-2, தக்காளி-3, தண்ணீர்-5 கப், முந்திரி விழுது-ஒரு டீஸ்பூன், உப்பு-தேவையான அளவு. செய்முறை பாசுமதி அரிசியை நன்றாக கழுவி, அரைமணிநேரம் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெயை சூடாக்கி பிரிஞ்சி இலை, கிராம்பு, லவங்கம் சேர்த்து வதக்கி, நறுக்கிய வெங்காயம், படமிளகாய் சேர்த்து பொன் னிறமாக வதக்கவும். பின்னர் புதினா, கொத்து மல்லி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். பின்னர் சிக்கன் துண்டுகளை சேர்த்து கிளறி, நறுக்கிய தக்காளி, சிவப்பு மிளகாய்த்தூள், பிரியாணி மசாலா சேர்த்து கிளறி, அரை கப் தண்ணீர் சேர்த்து மூடி, 3 விசில் வரும் வரை வேக விடவும். பின்னர் ஊறவைத்த அரிசியை தண்ணீருடன் சேர்த்து, முந்திரி விழுது, தேவை யான அளவு உப்பு சேர்த்து, சுண்ட விடவும். பின்...

அரிசி வடை&கொள்ளு பருப்பு&&கொள்ளு பருப்பு

 அரிசி வடை தேவையானவை : புழுங்கலரிசி - ஒரு கப் துவரம் பருப்பு அரை கப், தனியா - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 4. இஞ்சி - சிறு துண்டுசிறிய வெங்காயம் - ஒருகப், கொத்துமல்லி - கால்கட்டு, கறிவேப்பிலை.பெருங்காயம், உப்பு.எண்ணெய் - தேவையானஅளவு. செய்முறை : அரிசி, பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும்தனியா, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை,பெருங்காயத்தூள், இஞ்சி, உப்பு சேர்த்துரவை பதத்தில் மாவை அரைத்துக்கொள்ளவும். இத்துட ன்நறுக்கிய வெங்காயம்,கொத்துமல்லித்தழைசேர்த்து நன்கு கலக்கவும் கலந்த மாவை வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். இந்த வடைக்கு ரசத்தின் அடி வண்டல் (அ) தயிர் தொட்டு சாப்பிடலாம். கோதுமை ரொட்டி தேலையானவை: கேள துமை மாவு - ஒரு கப், நறுக்கிய சிறிய வெங்காயம் - 2 கப், நறுக்கிய கொத்துமல்லி - % கப், தனியாத்தூள் ஒரு டீஸ்பூன், நசுக்கிய இஞ்சி - சிறு துண்டு, உப்பு, எண்ணெய் தேவையான அளவு. செய்முறை: கோதுமை மாவுடன் வெங்காயம் கொத்துமல்லி தனியாத்தூன் உப்பு இஞ்சி, தேவையான தண்ணீர் விட்டு சற்று இளக்கமாக பிசைந்து கொள்ளவும் வாழையிலையில் எண்ணெய் தடவி இந்த மாவை சிறு உருண்டையாக வைத்து ...

How to make Fish Fry & How to make Hyderabad Mutton

 ஃபிஷ் ஃப்ரை தேவையானவை : எலும்பில்லாத மீன் துண்டுகள் (அ) சற்று பெரிய மீன்கள் 1/4 கிலோ, மஞ்சள் - 1/2 டீஸ்பூன், தயிர் - 1/4 கப், இஞ்சி, பூண்டு விழுது ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன், சோளமாவு - ஒரு டேபிள் ஸ்பூன், தண்ணீரில் நனைத்துப் பிழிந்த பிரட் துண்டுகள் 4, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. தாளிக்க : மீனையும், எண்ணெயையும் தவிர மற்றவைகளை ஒன்றாகக் கலந்து, மீன் துண்டுகள் மேலே தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். ஃபிரிட்ஜில் வைத்தால் 1/2 மணி நேரம் போதும். பிறகு இந்த துண்டுகளை எண்ணெயில் பொரித்தெடுத்தால் கிரிஸ்ப்பியான ஃபிஷ் ஃபிரை ரெடி.  ஹைதராபாத் மட்டன் தேவையானவை : மட்டன் 1% கிலோ, காய்ந்த மிளகாய் 15. தனியா - 2 டேபிள் ஸ்பூன், பட்டை, லவங்கம் தலா 3, சீரகம் 1/2 டீஸ்பூன், மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன், சிறிய வெங்காயம் தக்காளி - 2, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. தேவையானவை : வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் தக்காளி, தனியா, காய்ந்த மிளகாய், சீரகம், பட்டை, லவங்கம் ஆகியவற்றை வறுத்து, அரைத்துக் கொள்ளவும். மட்டனை உப்பு, மஞ்சள்தூள், அரைத்த மனலா விழுதுடன் மிக்ஸ் செய்து 1/2 மணி நேரம் அப்படியே வைக்கவும். ...

மாம்பழக்குழம்பு&கத்தரிக்காய்குழம்பு&அப்பளக்குழம்பு

 மாம்பழக்குழம்பு      மாம்பழம் குழம்பு தேவையான பொருட்கள் மாம்பழம்-3, சின்னவெங்காயம் கப், பூண்டு-6 பல், தனியா ஒரு டீஸ்பூன். ப.மிளகாய்-5. தக்காளி ஜூஸ்-1/2 கப், புளிபேஸ்ட்-3 டீஸ்பூன், கசகசா, உபருப்பு-தலா 2 (டீஸ்பூன், வெந்தயம் ஒரு டீஸ்பூன். மிளகாய், தனியா, வெங்காயம், பூண்டு, கசகசா, வெந்தயம், உ.பருப்பு இவற்றை தனித்தனியாக வறுத்து உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். மாம்பழத்தை துண்டுகளாக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து பூண்டு. வெங்காயம் வதக்கவும். இத்துடன் அரைத்த விழுதைப் போட்டு தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். கடைசியாக புளிபேஸ்ட், தக்காளி ஜூஸ் சேர்த்து கொதி வந்தவுடன் மாம்பழத்துண்டுகள் போட்டு, ஒரு கொதி வந்தவுடன் இறக்கிவிடவும்.   கத்தரிக்காய்குழம்பு  தேவையான பொருட்கள் சிறிய கத்தரிக்காய் 1/4 கிலோ, மிளகாய் 8,க.பருப்பு, உபருப்பு, தனியா தே.துருவல் தலா-2 டேபிள் ஸ்பூன், சாம்பார்பொடி, புளிபேஸ்ட், புளிப்பொடி-தலா ஒரு டீஸ்பூன், ம.பொடி-1/4 டீஸ்பூன்.   செய்முறை கத்தரிக்காயை முனையை விட்டு நான்காகப் பிளக்கவும். க.பருப்பு, உ.பருப்பு, தனியா, தே...

மரவள்ளி கட்லட்&அவல் கட்லட்&மல்டி வெஜ் கட்லட்&கேரட் கட்லட்

 மரவள்ளி கட்லட் தேவையானவை: மரவள்ளிக்கிழங்கு - ஒன்று, வெங்காயம் ஒன்று, உருளைக்கிழங்கு - 2, பச்சைமிளகாய் விழுது - ஒரு ஸ்பூன், சோள மாவு ஒரு டேபிள் ஸ்பூன் பட்டாணி - 50 கிராம், எலுமிச்சைச்சாறு, சாட் மசாலா, கொத்துமல்லித்தழை, புதினா, மஞ் சள்தூள் - சிறிதளவு, ரொட்டித்தூள், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: மரவள்ளிக்கிழங்கு, பட்டாணி, உருளையை தனித்தனியாக வேகவைத்து மசித்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, ப.மிளகாய் விழுது, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் மஞ்சள்தூள், மசித்த மரவள்ளி, உருளை, பட்டாணியைச் சேர்த்துக் கிளறி இறக்கி, எலுமிச்சைச்சாறு, சாட் மசாலா, கொத்துமல்லித்தழை, புதினா, கெட்டியான சோள மாவுக் கரைசல், உப்பு சேர்த்து பிசைந்து, வடை போல தட்டவும். பின்னர் அதை ரொட்டித்தூளில் புரட்டி, காய்ந்த தவாவில் போட்டு, எண்ணெய் ஊற்றி, இருபறமும் திருப்பிப் போட்டு, சுட்டு எடுக்கவும்.  அவல் கட்லட் தேவைாளை ஒரு கப் உருளைக்கிழங்கு - 2. பட்சணி - 50 கிராம், பச்சைமிளகாய் விழுது ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது சவிச்சைச்சா தலைஒருஸ்ன் சீரகத்தூள் அரைடு உளுந்து, கறிவேப்பிலை சிறிதளவ...

குக்-ரைஸ் கட்லட்&ரவை கட்லட்&பீர்க்கைத்தோல் கட்லட்&கிரீன்கட்லட்

 குக்-ரைஸ் கட்லட் தேவையானவை: சாதம், கேரட் துருவல் தலா ஒரு கப், வெங்காயம் - ஒன்று, பச்சைமிளகாய் விழுது, கடலை மாவு - தலா ஒரு ஸ்பூன், கோதுமை மாவு - 2 ஸ்பூன், உருளைக்கிழங்கு - 2, கொத்துமல்லித்தழை ஒரு கைப்பிடி, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் நீக்கி மசிக்கவும். இதனுடன் சீாதம், நறுக்கிய வெங்காயம், பெருங்காயம், தயிர், பச்சைமிளகாய் விழுது, கோதுமை மாவு, கடலைமாவு, கொத்துமல்லித்தழை, உப்பு சேர்த்துப் பிசைந்து, வடைபோல தட்டி, காய்ந்த தவாவில் போடவும். எண்ணெய் விட்டு, இருபறமும் கட்டு எடுக்கவும்.  ரவை கட்லட் (தேவையானவை: ரவை - ஒரு டம்ளர், அரிசி மாவு, தயிர் - தலா ஒரு டேபிள் ஸ்பூன், இஞ்சி-பூண்டு விழுது, பச்சைமிளகாய் விழுது தலா ஒரு ஸ்பூன், உருளைக்கிழங்கு - 2, வெங்காயம் - ஒன்று, உப்பு, எண்ணெய், கொத்துமல்லித்தழை தேவையான அளவு. செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் நீக்கி மசிக்கவும். வாணலியில் ஒன்றரை டம்ளர் நீர் ஊற்றி, உப்பு, ப.மிளகாய் விழுது, இஞ்சி-பூண்டு விழுது, நறுக்கிய வெங்காயம் சேர்த்து, கொதி வந்ததும் ரவை, அரிசி மாவு, தயிர் சேர்த்துக் கிளறி இறக்கி, ஆறியது...

மில்லட் பிரியாணி&ரங்கூன் பிரியாணி&ஹைதராபாத்veg (or ) மட்டன் மசாலா&2இன் 1 பிரியாணி

 மில்லட் பிரியாணி வரகு அரிசி, தினை அரிசி, சாமை அரிசி, குதிரைவாலி எல்லாமாக சேர்ந்து இரண்டு கப், நெய் ஒரு டேபிள்ஸ்பூன், பட்டை, கிராம்பு, ஏலம் சிறிதளவு, நீளவாக்கில் நறுக்கிய பீன்ஸ், கேரட், உருளை, பெரிய வெங்காயம் மற்றும் பச்சைப் "பட்டாணி எல்லாமாக சேர்த்து - ஒரு கப், உப்பு, | எண்ணெய் - தேவையான அளவு. அரைக்க: தேங்காய்த் துருவல்-கால் கப், பச்சைமிள காய்-3, இஞ்சி - சிறிய துண்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2 பச்சைப் பட்டாணியை 10 நிமிடம் ஊற வைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலம் தாளித்து ஒரு டேபிள் ஸ்பூன் நெய் விட்டு காய்கறிகள் அனைத்தையும் போட்டு வதக்கி, நான்கு கப் நீர்விட்டு, உப்பு சேர்த்து கொதிக்க விடவும். இதனுடன் அரைத்த விழுதையும் மில்லட்ஸையும் சேர்த்து நன்றாகக் கலந்துவிட்டு பச்சைப் பட்டாணியையும் சேர்த்து மூடி வெயிட் போட்டு ஒரு விசில் வந்ததும் அடுப்பை ஆஃப் செய்துவிடவும். ஆவி வெளியேறியதும் மல்லித்தழை தூவி அலங்கரிக்கவும். ரங்கூன் பிரியாணி பாசுமதி அரிசி இரண்டு கப், எண்ணெய் - நான்கு டேபிள் ஸ்பூன், உப்பு - தேவைக்கு, காய்ந்தமிளகாய் பெரிய வெங்காயம் 5, 2, கேரட் - ஒன்று, மாங...

கோதுமை ரவை-மசாலா பிரியாணி&பேல்பூரி பிரியாணி&முட்டை பிரியாணி&நெல்லூர் பிரியாணி

 கோதுமை ரவை-மசாலா பிரியாணி கோதுமை ரவை 2 கப், இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டேபிள் ஸ்பூன், மசாலா முந்திரி - 4 டேபிள் ஸ்பூன், தக்காளி - 3, பச்சைமிளகாய் 3, பெரிய வெங்காயம் ஒன்று, கேரட் - பாதியளவு, பட்டை, கிராம்பு, ஏலம் தலா 2, சோம்பு, கசகசா தலா ஒரு டீஸ்பூன், நெய் 2 டேபிள் ஸ்பூன், பிரெட் துண்டுகள் 10,உப்பு, எண்ணெய் அளவு. தேவையான செய்முறை மசாலா முந்திரியை மிக்ஸியில் கொர கொரப்பாகப் அரைக்கவும். வெறும் வாணலியில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, கசகசா ஆகியவற்றை வறுத்து நைஸாகப் பொடிக் கவும். தக்காளியை வெந்நீரில் போட்டு, தோல் உரித்து நைஸாக அரைக்கவும். குக்கரில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், கேரட், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இதனுடன் 2 கப் தண்ணீர், அரைத்த தக்காளி விழுது, உப்பு, பொடித்த மசாலாப்பொடி சேர்த்து கிளறவும். பின்னர் கோதுமை ரவையை சேர்த்து, குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் இறக்கவும். நெய்யில் வறுத்த பிரெட்த் துண்டுகள், மல்லித்தழை, |அரைத்த மசாலா முந்திரியைத் தூவி பரிமாறவும்.   பேல்பூரி பிரியாணி பாசுமதி அரிசி - 2 கப், பானிபூரி 10, அரிசி...

VEG ( அல்லது ) சிக்கன்பிரியாணி&செட்டிநாடு பாகற்காய் ஃபிரை 

 VEG ( அல்லது ) சிக்கன்பிரியாணி  VEG ( அல்லது )சிக்கன் - 600 கிராம், வெங்காயம் – 3, தக்காளி - ஒன்று, பூண்டு 6 பல், இஞ்சி துண்டு சிறிதளவு, பச்சை மிளகாய் - 2, கறிவேப்பிலை 2 கொத்து, மிளகாய்த்தூள் - இரண்டரை டேபிள்ஸ்பூன், தனியாத்தாள் - ஒன்றரை டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் அரை டீஸ்பூன், கிராம்பு - 3. ஏலக்காய் - ஒன்று, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.   அரிசியை நன்றாக கழுவி, அரைமணி நேரம் வரை ஊறவைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, பட்டை, கிராம்பு, லவங்கம் சேர்த்து வதக்கி, நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்னர் புதினா, கொத்துமல்லி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போக நன்றாக வதக்கி, நறுக்கிய தக்காளி, மிளகாய்த்தான், பிரி யாணி மசாலா சேர்த்து கிளறவும். ஊற வைத்த தண்ணீரோடு அளிசியை சேர்த்து, முந்திரி விழுது உப்பு சேர்த்து கொதிக்க விடவும் தண்ணி கண் டியதும், வாணலியை மூடி, 15 நிமிடம் அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும், அரிசி நன்றாக வெந்ததும் நெய், புதினா சேர்த்து கிளறவும்  செய்முறை 05 வைத்த முட்டையை மேலாக வைத்து பரிமாறவும். செட்டிநாடு பாகற்காய் ஃப...

பாதாம் பதிர் பூரி&பர்க்கர் வாடி&கரேலா முறுக்கு&ரிப்பன் பகோடா

 பாதாம் பதிர் பூரி தேவையான பொருட்கள்: மைதா ஒரு கப், பாதாம் பருப்பு-100 கிராம், உப்பு - ஒரு சிட்டிகை, எண்ணெய் பொரிக்கத் தேவையான அளவு, சர்க்கரை-2 கப், தண்ணீர்-ஒரு கப். செய்முறை: பாதாம் பருப்பை முதல் நாளே ஊற வைத்து தோலுரித்து விழுதாக அரைத்துக் கொண்டு, மைதா, உப்பு சேர்த்து பூரிமாவு பதத்துக்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும். பதிர் தயாரிக்க தேவையான பொருட்கள்: மைதா - ஒருகப், நெய்-ஒரு கப், அரிசிமாவு-ஒரு மேஜைக்கரண்டி. செய்முறை: மேற்கண்டவைகளைக் கலந்து நுரைக்க அடித்து வைத்துக் கொள்ளவும். பாதாம் பதிர்பூரி செய்முறை: பூரிமாவு பதத்திற்குப் பிசைந்து வைத்த மாவை, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி குட்டி குட்டி வட்டங்களாகத் தேய்க்கவும். தேய்த்த வட்டங்களுக்கு மேல் பதிரைத் தடவவும். இப்படியே - தடவுவது போல் தடவி நான்கு அடுக்குகள் வைக்கவும். மொத்தமாக சுருட்டவும். சுருட்டிய வட்டங்களை கத்தியால் வெட்டி, கடாயில் எண்ணெய் வைத்து பொரித்து எடுக்கவும். சர்க்கரைப்பாகு கம்பிப்பதம் காய்ச்சி, பொரித்தவைகளை பாகில்போட்டு எடுத்து வைக்கவும். பக்குவம் பதிர் தயாரிக்க தளர வரவில்லை என்றால் நெய் இன்னும்கூட கொஞ்சம் சேர்த்துக்கொள்ளலாம்....

கம்பு பிரியாணி&சேமியா பிரியாணி&ஆலு 65 பிரியாணி 

 கம்பு பிரியாணி கம்பு - ஒரு கப், சின்ன வெங்காயம்-10, தக்காளி 2, இஞ்சி, பூண்டு விழுது ஒரு டீஸ்பூன், கேரட், பீன்ஸ், பட்டாணி (மூன்றும் சேர்ந்த கலவை) ஒரு கப், புதினா, கொத்துமல்லித்தழை - தலா கால் கப், மஞ்சள்தூள், | மிளகாய்த்தூள்-2 டீஸ்பூன், தனியாத்தூள், கரம் மசாலாத் தூள்-தலா அரை டீஸ்பூன், தயிர் - அரை கப், பட்டை, கிராம்பு, ஏலக் காய், பிரியாணி இலை தாளிக்க, உப்பு, எண் ணெய் - தேவையான அளவு.  செய்முறை] கம்பை களைந்து கற்களை நீக்கி, குக்கரில் போடவும். இதனுடன் பொடியாக நறுக்கிய காய்கறி கலவை, மஞ்சள்தூள், 2 கப் தண்ணீர் சேர்த்து 3 விசில் வந்ததும் இறக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து தாளிக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். தயிருடன் மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், தனியாத்தூள், புதினா, கொத்துமல்லித்தழை சேர்த்து கலந்து, வெங்காயக் கலவையுடன் சேர்க்கவும். பின்னர் தேவையான உப்பு போட்டு எண்ணெய் பிரிந்து வரும்வரை கொதிக்க விட்டு மசாலாவை தயார் செய்யவும். இந்த மாசாலாவை குக்கரில் உள்ள கம்புடன் சேர்த்து,...