பனீர் பராத்தா
தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், எண்ணெய் தேவையான அளவு. ஒரு டீஸ்பூன், உப்புபூரணம் செய்ய: பனீர் - 100 கிராம், பச்சைமிளகாய் - 3, சீரகத்தூள், மஞ்சள்தூள் தலா கால் டீஸ்பூன், இஞ்சி - அரை இன்ச், கரம் மசாலா, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், நறுக்கிய கொத்துமல்லித்தழை - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அகலமான பாத்திரத்தில்
கோதுமை மாவுடன், எண்ணெய்,உப்பு சேர்த்து கலந்து,தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்திற்குப் பிசையவும். ஒரு பாத்திரத்தில், பனீரை துருவி சேர்க்கவும். அதனுடன் நறுக்கிய பச்சைமிளகாய், துருவிய இஞ்சி, மஞ்சள்தூள், சீரகத்தூள், கரம் மசாலா, மிளகாய்த்தூள், பொடியாக நறுக்கிய கொத்துமல்லித்தழை, உப்பு சேர்த்து கலந்தால் 'பூரணம்' தயார். பிசைந்து வைத்துள்ள மாவை எலுமிச்சை அளவு எடுத்து 'கிண்ணம் போல் செய்து, சிறிதளவு பூரணத்தை வைத்து மூடி, சற்றே தடிமனாகத் திரட்டி, காய்ந்த தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு, இருபுறமும் சற்று பொன்னிறமானதும் எடுக்கவும்.
பனீர் பட்டர் மசாலா
தேவையானவை: பனீர் - 200 கிராம்,வெண்ணெய் - 2 டீஸ்பூன், பால் - 3/4 கப், முந்திரி - 8, மிளகாய்த்தூள், தனியாத்தூள், கசூரி மேத்தி - தலா ஒரு டீஸ்பூன், கரம் மசாலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பெரிய வெங்காயம் - ஒன்று, தக்காளி - 2, இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் தேவையான அளவு.
வாணலியில் வெண்ணெய் சேர்த்து, உருகியதும் சோம்பை சேர்த்து வாசனை வரும் வரை வதக்கி, அரைத்த விழுது, தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் பனீர் துண்டுகள், காய்ச்சிய பால் சேர்த்து கலந்து ஒரு கொதி வரும் வரை காத்திருக்கவும். பின்னர் கசூரி மேத்தியை உள்ளங்கையில் வைத்து நன்றாகத் தேய்த்து, கிரேவியில் கலந்து, அடுப்பை அணைத்து இறக்கவும்.
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின்னர் நறுக்கிய தக்காளி, பொடியாக நறுக்கிய முந்திரி, மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து, தக்காளியின் பச்சை வாசனை போகும்
குறிப்பு: பாலை கடைசியில்தான் சேர்க்க வேண்டும். அதிக நேரம் கொதிக்க விட்டால் பால் திரிந்து விடும். பாலுக்குப் பதிலாக ஃபிரெஷ் கிரீம் சேர்க்கலாம்.
பனீர் பிரியாணி
தேவையானவை: பனீர் - 150 கிராம், பாஸ்மதி அரிசி / சீரக சம்பா அரிசி ஒரு கப், தண்ணீர் தக்காளி 2 கப், வெங்காயம், தலா 2, புதினா - 20 இலைகள், நறுக்கிய கொத்துமல்லித்தழை 3 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், பட்டை - ஒரு துண்டு, கிராம்பு - 4, ஏலக்காய் - 2, உப்பு, எண்ணெய் / நெய் தேவையான அளவு.
அரைக்க: பூண்டு - 6 பல், இஞ்சி - ஒரு இன்ச், புதினா - கால் கப், கொத்துமல்லித்தழை அரை கப், சோம்பு - அரை டீஸ்பூன், சின்ன வெங்காயம் - 6.
செய்முறை: அரிசியுடன்2 கப் தண்ணீர் சேர்த்துஅரை மணி நேரம் ஊறவைக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மையாக அரைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காயை தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, நறுக்கிய தக்காளி, கொத்துமல்லித்தழை, புதினா சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர் ஊறவைத்த அரிசியை வடித்துச் சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். இப்போது அரிசி ஊறிய தண்ணீரை ஊற்றி, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து, தண்ணீர் கொதிக்கும் போது பனீரை சேர்த்து குக்கரை மூடவும். குக்கரில் ஆவி வரும் போது வெயிட் போட்டு, அடுப்பை சிம்மில் 5 நிமிடம் வைத்திருந்து அணைக்கவும். பின்னர் 15 நிமிடம் கழித்து குக்கரை திறந்து, வெங்காயப் பச்சடியுடன் சூடாகப் பரிமாறவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக