மசூர் டால் கிச்சடி
தேவையானவை: அரிசி (பொன்னி)-1 கப், மசூர் டால்-1
கப், மஞ்சள்தூள்-1/2 டீஸ்பூன், நெய்-2 டேபிள் ஸ்பூன், எண்ணெய்- 2 டேபிள்ஸ்பூன், தக்காளி-2 (நறுக்கியது), வெங்காயம்-2 (நறுக்கியது), உப்பு, மிளகாய்த் தூள்-1 டீஸ்பூன், பெருங்காயம் - 1/2 டீஸ்பூன், சீரகம்-1 டீஸ்பூன், கடுகு-1 டீஸ்பூன், ப.மிளகாய்-3 நீளவாக்கில் நறுக்கியது, மல்லி இலை-1/2 கப், கறிவேப்பிலை-10, தண்ணீர்.
செய்முறை: பிரஷர் பேனில் எண்ணெய், நெய் விட்டு, கடுகு, சீரகம், பூண்டு, வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, மல்லி இலை, வதங்கிய பிறகு கழுவிய அரிசி, பருப்பு சேர்த்து குக்கரில் வேக விடவும். இரண்டு விசில் போதும்.மசூர் டால் கிச்சடி ரெடி.
1 கப் அரிசிக்கு 2 (அ) 2 1/2 கப் தண்ணீர். (பருப்புக்கும் சேர்த்துதான்)
கருத்துகள்
கருத்துரையிடுக