வெஜிடபுள் கபாப் மசாலா
தேவையான பொருட்கள்: மிக்ஸ்டு வெஜிடபுள் - ஒரு கப், (இதில் உருளைக் கிழங்கு அல்லது கருணைக்கிழங்கு முக்கியம்) மிளகுப்பொடி - 1/2 டீஸ்பூன், லைம் ஜூஸ் - ஒரு டீஸ்பூன், பிரட் - 5 ஸ்லைஸ், இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
கபாப் செய்முறை: காய்கறிகளை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு வேகவைத்த காய்கறிகளை வதக்கவும். பின் இஞ்சி
பூண்டு விழுதையும் சேர்த்து வதக்கி, மிளகுப்பொடி, உப்பு, பிரட் ஸ்லைஸின்
ஓரங்களை நீக்கி கலவையுடன் சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக பிசைந்து
உருட்டி எண்ணெயில் பொரித்தெடுத்துக் கொள்ளவும்.
கிரேவி தயாரிக்க: எண்ணெய் - தாளிக்க, கடுகு - ஒரு டீஸ்பூன், ப.மிளகாய்
- 3 (கீறியது) கடலைமாவு - 3 டீஸ்பூன், மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன், கரம்மசாலா ஒரு டீஸ்பூன், பெருங்காயம் -ஒரு சிட்டிகை. செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு கறிவேப்பிலை தாளித்து,
பச்சைமிளகாய் வதக்கி, கடலைமாவைத் தண்ணீரில் கலந்து ஊற்றவும். கொதி
வந்தபின் கபாப்களைப் போட்டு இறக்கி பெருங்காயப் பொடி தூவவும்.
வெஜிடபுள் மிக்கன வாலா'
தேவையான பொருட்கள் கிடைத்த, பொடியாக நறுக்கியது ஒரு கப், பனீர் பிடித்த எல்லாக் காய்களும் 50 கிராம், திராட்சை 25 கிராம், முந்திரி - 100 கிராம், வெங்காயம் 2, தக்காளி - 2, மஞ்சள்தூள் 1/4 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கரம்மசாலா ஒரு டீஸ்பூன், சாட்மசாலா 1/2 டீஸ்பூன், பட்டை 2,லவங்கம் 2,உப்பு-தேவையான அளவு.
செய்முறை: வெஜிடபுளை வேகவைத்து தனியாக வைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை தனித்தனியாக பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும். பட்டை, லவங்கத்தை பொடி செய்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, பட்டை லவங்கப்பொடி போட்டு வெங்காய பேஸ்டை வதக்கவும். பின் தக்காளி பேஸ்டை வதக்கவும். இப்போது வேகவைத்த காய்கறிகளைப் போட்டு வதக்கவும். பனீரைத் தனியாக வதக்கி இக்கலவையில் சேர்க்கவும். திராட்சை, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு போட்டு தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். முந்திரிப் பருப்பை தனியாக பேஸ்ட் போல் அரைத்து கொதி வந்த கலவையில் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும். இறக்கியபின் கரம்மசாலா, சாட் மசாலா தூவிவிடவும்.
டிப்ஸ் : முந்திரிப் பருப்பு மக்கன் வாலாவிற்கு மேலும் சுவை கூட்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக