காராச்சேவு
தேவையான பொருட்கள்: பச்சரிசிமாவு-4 கப், வறுத்து அரைத்த உளுத்தம் பகுப்பு: மாவு-ஒரு கட், வெண்ணெய்-50 கிராம், கரகரப்பாக பொடித்த சீரகம், மிளகுப்பொடி-தலா ஒரு டீஸ்பூன், உப்பு-தேவையான அளவு. எண்ணெய்-பொரிக்க.
செய்முறை: மேற்கண்ட அனைத்தையும் நீர்விட்டுப் பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய வைக்கவும். காய்ந்த எண்ணெயின் மேல் காராச்சேவு அச்சைப் பிடித்துக் கொண்டு, மாவை வைத்து அழுந்தத் தேய்த்தால் நீளநீளமாக காராச்சேவு எண்ணெயில் விழும். வெந்ததும் நுரை அடங்கும். அப்போது எடுத்து விடுங்கள்.
(டைரக்டாக எண்ணெயில்தான் தேய்த்துவிடவேண்டும். தேய்த்துவைத்துப் பின் எண்ணெயில் போட்டால் ஹார்டாக இருக்கும்.)
ஓமப்பொடி
தேவையான பொருட்கள்: கடலைமாவு-4கப், பச்சரிசிமாவு-ஒரு கப், மிளகாய்த்தூள்- டீஸ்பூன், வெண்ணெய் (அ) வனஸ்பதி-ஒரு டீஸ்பூன், ஓமம் - ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு-தேவையான அளவு, எண்ணெய் பொரிக்க தேவையான அளவு.
செய்முறை: ஓமத்தை சுமார் ஒரு மணி நேரம் ஊறவைத்து அரைத்து சாறு எடுத்துக்கொள்ளவும். அகலமான தட்டில் கடலைமாவையும், பச்சரிசிமாவையும் கலந்து ஓமத்தண்ணீர், வெண்ணெய், உப்பு கலந்து தண்ணீர் தெளித்துப் பிசைந்து கொள்ளவும். முறுக்குக் குழலில் ஓம அச்சைப் போட்டு, மாவை அடைத்துக் கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் பிழிந்து எடுக்கவும்.
(மெல்லிய அச்சில் பிழியுங்கள். நுரை அடங்கின உடனே எடுத்துவிடுங்கள். மஞ்சள் நிறம் மாறாமல் இருக்கும்.)
தேங்காய்ப்பால் தேன்குழல்
தேவையான பொருட்கள்: தேங்காய்ப்பால்-2கப், பச்சரிசி மாவு-2கட், உமாவு-2 மேஜைக்கரண்டி, வெண்ணெய்-25 கிராம், உப்பு-தேவையானஅளவு, எண்ணெய் பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை: மாவை லேசாக வறுத்துக்கொண்டு, தேங்காய்ப் பாலை சூடு செய்து கொள்ளவும். மாவு, தேங்காய்ப்பால், உமாவு, வெண்ணெய், உப்பு போட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காயவிடவும். எண்ணெய் காய்ந்ததும், முறுக்குக் குழாயில் தேன்குழல் அச்சுபோட்டு மாவை அடைத்து எண்ணெயில் பிழியவும்.
(திக்கான தேங்காய்ப்பால் எடுக்கவேண்டும். தண்ணீர் ஊற்றினால் மாவு தளர்ந்துவிடும்.)
கருத்துகள்
கருத்துரையிடுக