பனீர் மசாலா
தேவையான பொருட்கள்: பனீர் கிராம், மஞ்சள்தூள் அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள்-ஒரு டீஸ்பூன், வெங்காயம்-2, தக்காளி-4, சாட்மசாலா-1/ டீஸ்பூன், கரம்மசாலா - 1/2டீஸ்பூன், வெண்ணெய்-3 டேபிள் ஸ்பூன், எண்ணெய் டேபிள் ஸ்பூன், உப்பு-தேவையான அளவு. ஒரு
செய்முறை: தக்காளி, வெங்காயத்தை தனித்தனியாக அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும். பனீரை பொடிப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். கடாயில் வெண்ணெயைப் போட்டு உருகியவுடன், நறுக்கி வைத்த பனீரைப் போட்டு வதக்கித் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். பின் வெங்காய விழுதைப் போட்டு வதக்கவும். நன்கு வதங்கி பச்சை வாசனை போனபின் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சாட் மசாலா, கரம் மசாலாவுடன், வதக்கி வைத்த பனீரையும் போட்டு 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். கடைசியாக தக்காளி விழுதையும் போட்டு கிளறி திக்கானபின் இறக்கிவிடவும். இறக்கிய பின்னும் கொஞ்சம் சாட் மசாலா, கரம் மசாலா தூவலாம்.
டிப்ஸ் : பனீரை வெண்ணெயில் வதக்கினால் நல்ல கிறிஸ்பியாக இருக்கும்.
கார்ன் மசாலா
தேவையான பொருட்கள்: பேபிகார்ன் - தக்காளி - 2, மஞ்சள்தூள் .வெங்காயம் - 2, டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், பட்டை 2, லவங்கம் - 2, வெண்ணெய் - 1 மேஜைக்கரண்டி, மராட்டி மொக்கு - 2, எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், சோளமாவு - 1 டேபிள்ஸ்பூன், வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், கொத்துமல்லித்தழை - கைப்பிடி.
செய்முறை: எண்ணெய், வெண்ணெய் இரண்டையும் கடாயில் ஊற்றி, வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கி கடாயில் போட்டு வதக்கவும். பேபிகார்னையும் உறித்து சுத்தம் செய்து கடாயில் சேர்த்து வதக்கவும். பட்டை, லவங்கம், மராட்டிமொக்கு மூன்றையும் பொடித்துக் கொள்ளவும். கடாயில் நறுக்கிய பொடி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கிளறி சிறிதளவு தண்ணீர் விட்டு கார்னை வேகவிடவும். பேபிகார்ன் வெந்தவுடன் சோளமாவை தண்ணீரில் கரைத்து ஊற்றி கிளறி கிரேவி திக்கானவுடன் இறக்கிவிடவும்.
டிப்ஸ்: பேபி கார்ன் முழுசாகப் போட்டால்தான் பார்க்க அழகாக இருக்கும்!
கருத்துகள்
கருத்துரையிடுக