அதிரசம் (500 கிராம் அரிசி களைந்த தண்ணீர் வடித்து 1மணி கழித்து பின் நைசாக அரைத்து மாவை ரெடியாக வைத்துக் கொள்ள வேண்டும்) தேவையான பொருட்கள்: தயார் செய்த அரிசி மாவு - 2 கப், வெல்லம் (நுணுக்கியது) தண்ணீர் ஒரு கப், பொரித்தெடுக்க எண்ணெய் ஏலக்காய் ஒரு டீஸ்பூன்.
செய்முறை: (நாளை அதிரசம் செய்ய வேண்டும் என்றால், இன்றே பாகுக் காய்ச்சி, மாவைக்கொட்டிக் கிளறி ஊறவைக்க வேண்டும்!) அடுப்பில் கடாயை வைத்து, வெல்லம், தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும். முற்றின கம்பிப்பதம் வந்தவுடன் அடுப்பை அனைத்துவிடவும். கடாயை இறக்காமல் சூட்டோடு மாவைக் கொஞ்சம் கெஞ்சமாக கொட்டிக் கிளறிக் கொண்டே இருக்கவும். ஏலக்காய்ப் பொடியையும் சேர்க்கவும். மறுநாள் வாழையிலையில் எண்ணெய் தடவிக் கொள்ளவும். மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, வாழையிலையில் சிறுசிறு வட்டமாகத் தட்டி எண்ணெயில் போட்டு எடுக்கவும்.
பக்குவம்
கொடுத்திருக்கும் அளவுப்படி சரியான விகிதத்தில் செய்தால் அதிரசம் நன்றாக வரும். பாகு அதிகமாகிவிட்டதுபோல் தெரிந்தாலும், மறுநான் கெட்டியாகிவிடும். ஆனால் மாவுபோட்டுக் கிளறினீர்கள் என்றால், அதிரசம் எண்ணெயில் போட்டதும் பிரிந்துபோய்விடும்.
கருத்துகள்
கருத்துரையிடுக