ரெடிமிக்ஸ் வடைமாவு தேவையானவை: உளுந்தம்பருப்பு - 1 கப், அரிசிமாவு - 1/4 கப், பெருங்காயத்தூள், பேக்கிங் பவுடர், மிளகு - தலா 1/4 ஸ்பூன், பச்சைமிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 1/2 ஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப. செய்முறை: தண்ணீரில் உளுந்தை இருமுறைக் கழுவி, நீரை வடித்து, ஒரு துணியில் பரப்பி, காயவைக்கவும். பின்னர், வெறும் கடாயில் போட்டு, சூடு வரும்வரை வறுத்தெடுத்து, மிக்ஸியில் பொடிக்கவும். இதனுடன் உப்பு, பெருங்காயத்தூள், பேக்கிங் பவுடர், அரிசிமாவு சேர்த்து, கலக்கவும். 1 ஸ்பூன் எண்ணெய்யை சூடாக்கி, நறுக்கிய ப.மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, ஈரமில்லாமல் எடுக்கவும். இதையும் அரைத்த மாவில் சேர்த்து, நன்றாகக் கலந்துவிட்டால், 'வடைமாவு' தயார். குறிப்பு: தேவைப்படும்போது, இந்த மாவில் தண்ணீர் ஊற்றிக் கலந்து, வடைகள் செய்யலாம். கபாலி புர்குலி தேவையானவை: பறங்கிப்பூ இதழ்கள் - 10, பாசிப்பருப்பு - 1 கப், சோம்பு, தனியா - தலா 1 ஸ்பூன், பச்சைமிளகாய் - 4, நெய் - 2 ஸ்பூன், புதினா 1 கைப்பிடி, உப்பு, எண்ணெய் - தேவைக்கு. செய்முறை: பாசிப்பருப்பை ஊறவைத்து, நீரை வடித்து, சோம்பு, த...
ஸ்டஃப்டு கேப்சிகம் கிரேவி
தேவையான பொருட்கள்: குடைமிளகாய் 14 கிலோ, உருளைக்கிழங்கு - 1/4 கிலோ, வெங்காயம் 2, அஜினமோட்டோ ஒரு டீஸ்பூன், மாங்காய்ப்பொடி - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - 3/4 டீஸ்பூன், எண்ணெய் உப்பு - தேவையான அளவு. 2 டேபிள்ஸ்பூன்,
செய்முறை: குடைமிளகாயை காம்பின் பகுதியில் கட் செய்துவிட்டு, விதைகளை நீக்கி வைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வதக்கவும். இதோடு உருளைக்கிழங்கு மசியல், அஜினமோட்டோ, மாங்காய்ப்பொடி, மிளகுத்தூள், உப்பு போட்டுப் பிசைந்து குடைமிளகாயினுள் ஸ்டஃப் செய்யவும். பேனில் எண்ணெய் விட்டு ஸ்டஃப் செய்த மிளகாயைப் போட்டு, பேனை மூடி வேக வைக்கவும். வெந்தபின் இஞ்சிபூண்டு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு எல்லாவற்றையும் போட்டு தண்ணீர் விட்டு கிரேவி போல் கொதிக்க விடவும். கொதித்த கிரேவியில் ஸ்டஃப்ட் குடைமிளகாயைப் போடவும்.
டிப்ஸ்: குடைமிளகாய் சிறிதாகப் பார்த்து வாங்கினால், கிரேவிக்குள் அடக்கமாக இருக்கும்.
டாங்கிரி பேபி ஆலு மசாலா
தேவையான பொருட்கள்: பேபி உருளைக் கிழங்கு - 1/4 கிலோ, மஞ்சள்தூள்- 1/4 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சோளமாவு 2 டேபிள் ஸ்பூன், எலுமிச்சம் பழம்- 1, கரம்மசாலா ஒரு டீஸ்பூன், இஞ்சிபூண்டுவிழுது எண்ணெய்- 100 மிலி, உப்பு அளவு. 1 டீஸ்பூன், தேவையான
செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்துக் கொள்ளவும். உரித்து வைத்த முழு உருளைக்கிழங்குடன் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து சோளமாவுடன் கலந்து பிசறி வைக்கவும். சிறிது நேரம் கழித்து கடாயில் எண்ணெய் விட்டு நன்கு டீப் ஃப்ரை செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
கிரேவி தயாரிக்க: எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன், வெங்காயம் 1/2, குடைமிளகளாய் - 2, மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், அஜினமோட்டோ - ஒரு டீஸ்பூன், சோளமாவு - 2 டீஸ்பூன், இஞ்சிபூண்டு விழுது -ஒரு டீஸ்பூன், தண்ணீர்-1/2 கப்.
செய்முறை: குடைமிளகாயை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், மிளகாயை வதக்கவும் வதக்கினபின் இஞ்சி பூண்டு விழுது, அஜினமோட்டோ, மிளகுத்தூள், உப்பு சேர்த்து வதக்கி சோளமாவைக் கரைத்து ஊற்றிக் கிளறவும். நன்கு கிரேவியானதும் உருளைக்கிழங்கைப் போட்டு திக்கானதும் இறக்கிவிடவும்.
பேக்டு பீன்ஸ் மசாலா
தேவையான பொருட்கள்: டபுள் பீன்ஸ் - 1/4 கிலோ, உ -ருளைக்கிழங்கு - 1, வெங்காயம் - 2, தக்காளி - 1, இஞ்சிபூண்டு விழுது - 1 டீஸ்பூன், மஞ்சள்தூள்
டீஸ்பூன், மிளகுப்பொடி - 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன் எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன், முந்திரி 50 கிராம், நெய் 2 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பீன்ஸை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துக் கொள்ளவும். முந்திரியை நெய்யில் வறுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளியை வதக்கவும். பின் பீன்ஸை சேர்த்து, உருளைக்கிழங்கு மசியலையும் சேர்த்து வதக்கவும். உப்பு, மஞ் சள்தூள், மிளகுத்தூள், மிளகாய்த்தூள், இஞ்சிபூண்டு விழுது சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். கொதித்தபின் வறுத்த முந்திரியைத் தூவிவிடவும்.
டிப்ஸ்: உருளைக்கிழங்கு மசியல்தான் கிரேவியின் கெட்டிப்பதத்திற்கும், ருசிக்கும் பக்கபலமாக இருக்கும்.
கருத்துகள்
கருத்துரையிடுக