தேவையானவை: பனீர் 100 கிராம், பச்சைப் பட்டாணி கால் கப், பெரிய வெங்காயம் ஒன்று, இஞ்சி, பூண்டு விழுது ஒரு டீஸ்பூன், தக்காளி - 2, எண்ணெய் 2 டீஸ்பூன், பால் - கால் கப், கசூரி மேத்தி
ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்துமல்லித்தழை 2 டீஸ்பூன், கரம் மசாலா - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள், தனியாத்தூள் தலா ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.
செய்முறை: பனீரை சுடு தண்ணீரில் போட்டு மிருதுவாக்கவும். வாணலியில் பச்சைப் பட்டாணியைப் போட்டு அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி, மிருதுவாகும் வரை வேக விடவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின்னர் தக்காளி, கரம் மசாலா, தனியாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, தக்காளியின் பச்சை வாசனை போகும் வரை வதக்கி, அடுப்பை அணைத்து இறக்கவும். சற்று ஆறியதும் மிக்ஸியில் போட்டு, சிறிதளவு தண்ணீர் விட்டு மையாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, அரைத்த விழுது, தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் வேக வைத்த பட்டாணி, பனீர் வில்லைகளைச் சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விட்டு, பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும், கசூரி மேத்தி இலையை நசுக்கிச் சேர்த்து, கொத்துமல்லித்தழைத் தூவி பரிமாறவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக