எண்ணெய் மாங்காய் ஊறுகாய்
தேவையானவை:
நீளமாக நறுக்கிய மாங்காய்த் துண்டுகள் - 1 கப், வெந்தயத்தூள் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் 6 டீஸ்பூன், - கடுகுத்தூள், நல்லெண்ணெய் - தலா 5 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
கடுகு, வெந்தயம் இரண்டையும் வறுக்காமல் தனித்தனியாக மிக்ஸியில் பொடிக்கவும். நறுக்கிய மாங்காய்த் துண்டுகளுடன் உப்பு சேர்த்து கலந்து வைக்கவும். மறுநாள் உப்பிலிருந்து மாங்காயை எடுத்து வெயிலில் உலர்த்தவும். வாணலியில் நல்லெண்ணெயை சூடுபடுத்தி இறக்கி ஆற வைக்கவும். இந்த எண்ணெயில் கடுகுத்தூள், வெந்தயத்தூள், மிளகாய்த்தூள், உலர்ந்த மாங்காய்த் துண்டுகளை சேர்த்து பிசறி, காற்றுப் புகாத பாட்டிலில் அடைக்கவும். தயிர்சாதம், சப்பாத்திக்கு இதை தொட்டுச் சாப்பிடலாம். ஒரு வருடம் ஆனாலும் இந்த ஊறுகாய் கெடாது.
கருத்துகள்
கருத்துரையிடுக