கொண்டைக்கடலை புலாவ்
தேவையானவை: வெள்ளை கொண்டைக் கடலை,
பாசுமதி அரிசி-1/2 கப், பட்டை-1, லவங்கம்-2, ஏலம்-2, பிரிஞ்சி இலை-1, உப்பு, நெய்-2 டேபிள் ஸ்பூன், எண்ணெய்-1 டேபிள் ஸ்பூன், மதூள் 1/4 டீஸ்பூன், மி. தூள்-1/4 டீஸ்பூன், கடுகு-1/4 டீஸ்பூன், தண்ணீர்-1 கப், தனியா தூள்-1/2 டீஸ்பூன், கடுகு தூள்-1/2 டீஸ்பூன், சீரகம்-1/4 டீஸ்பூன், சோம்பு-1/4 டீஸ்பூன், மிளகு-1/4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய்-2, பச்சை மிளகாய்-2, தயிர், வெந்தயம்-14 டீஸ்பூன்,
செய்முறை: அரிசியைக் கழுவி 20 நிமிடம் ஊறவைக்கவும், பின்னர் வடித்துக் கொள்ளவும்.
கடாயில் நெய், எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம், மிளகாய், மிளகு, சோம்பு, மசாலா சாமான்கள் போட்டு வதக்கவும். தயிரில் மஞ்சள்தூள், மிளகாய்த் தூள், தனியாத் தூள், கடுகுத் தூள் போட்டு கலந்து வதங்கிய சாமான்களுடன் சேர்க்கவும் தயிர் கல்வை சேர்ப்பதற்குமுன் அடுப்பை அணைத்துவிடவும்,
கொண்டைக் கடலையை குக்கரில் தனியாக வேகவைக்கவும். பின்னர் எல்லாவற்றுடனும் அரிசியை சேர்த்து 1 கப் நீர்விட்டு மூடி மிதமான தீயில் வேகவைக்கவும்.
வதக்கும்போது தேவையானால் மாங்காய் ஊறுகாய்-1 டேபிள் ஸ்பூன் சேர்த்து வேக வைக்கவும். மல்லி இலை கடைசியில் நறுக்கி சேர்க்கவும்.
பீட்ரூட் ரைஸ்
தேவையானவை: பீட்ரூட் துருவியது-1/2 கப், பொன்னி அரிசி-1/2 கப், ஏலம்-2, பட்டை-1, கிராம்பு-2, பிரிஞ்சி இலை-1, உப்பு, எண்ணெய்-1 1/2 டேபிள் ஸ்பூன், நெய்-1 டேபிள் ஸ்பூன், சீரகம்-1 டீஸ்பூன், வெங்காயம்-1, மிளகாய்த் தூள்-1/2 டீஸ்பூன், மஞ்சள்தூள் 1/4 டீஸ்பூன், தனியா தூள்-1/2 டீஸ்பூன், தண்ணீர்-1/2 கப்.
செய்முறை: அரிசியை தேவையான நன்கு கழுவி, தேவையான நீர் சேர்த்து உதிர் உதிரான சாதமாக வடித்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய், நெய் விட்டு, மசாலா பொருட்களை போட்டு வதக்கவும். நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். மஞ்சள்தூள், மிளகாய்த் தூள், தனியா தூள் சேர்த்துச் சில நிமிடங்கள் வதக்கவும். துருவிய பீட்ரூட்டை சேர்த்து, உப்புடன் வதக்கவும். நன்கு வதங்கிய பிறகு 1/2 கப் தண்ணீர் விடவும். தண்ணீர் சுண்டிய பிறகு வடித்த / வெந்த சாதத்தைப் போட்டுக் கிளறவும். தொட்டுக்கொள்ள தயிர்ப் பச்சடி நன்றாக இருக்கும்.
ஃப்ரைடு ரைஸ்
தேவையானவை: சர்க்கரை-1 டேபிள் ஸ்பூன், பாசுமதி அரிசி-1 கப், கோஸ்-1 கப், கேரட்-1/2 கப், குடமிளகாய்-1/2 கப், வெங்காயத்தூள்-1/2 கப், வெங்காயம்-1, பச்சை மிளகாய் சாஸ், சோயா சாஸ்.
செய்முறை: அரிசியை கழுவி ஊற வைத்து உதிர் உதிராக வேக வைக்கவும். (1 கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர்)
கடாயில் காய்கறிகளை நெய் + எண்ணெய்யில் வதக்கவும். பிறகு கடாயில் எண்ணெய், சர்க்கரை போட்டு கேரமல் ஆன பிறகு வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கிய பிறகு சாஸ் வகைகள், உப்பு சேர்க்கவும். பின்னர் வதக்கிய காய்களையும் வெந்த சாதத்தையும் சேர்த்து பிரட்டவும். சாதம் உடையாமல் மென்மையாக பிரட்டிவிடுவது முக்கியம்.
கருத்துகள்
கருத்துரையிடுக