காலா ஜாமூன்
தேவையான பொருட்கள்: மைதா-ஒரு கட், பர்-ஒரு கப், கோவா-ஒரு கப், சர்க்கரை-3 கப், எண்ணெய்-பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை: பனீர், மைதா, கோவா மூன்றையும் அழுத்திப் பிசைந்துகொள்ள வேண்டும். ஒரு பத்து நிமிடங்கள் ஊறவிட்டு சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பின்னர் எண்ணெயில் பொரித்து எடுத்து வைத்துக்கொள்ளவும். இன்னொரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி சர்க்கரையைக் கொட்டிப் பாகுகாய்ச்சவும். 15 நிமிடம்தான் பாகுக்கான நேரம். பின்னர் இறக்கி பொரித்து வைத்த காலா ஜாமூன்களைப் பாகில் போடவும்.
பக்குவம்
மிதமான தீயில்தான் காலாஜாமூன்களைப் பொரித்தெடுக்க வேண்டும்.
குலோப் ஜாமூன்
தேவையான பொருட்கள்: 500 கிராம் குலோப்ஜாமூன் மிக்ஸ்-ஒரு பாக்கெட், சர்க்கரை-800 கிராம். பால்-100 மிலி, எண்ணெய்-பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை: குலோப்ஜாமூன்ஸ கட்டியின்றி உடைத்து பால் கலந்து மெதுவாகப் பிசையவதர் பத்து நிமிடம் ஊறவைத்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்ற, இளம் தீயில் எண்ணெயை குடு செய்யவும். எண்ணெய் சூடானவுடன், அதே இளம்தீயில் ஜாமூன்களைப் பொரித்தெடுக்கவும். 800 கிராம் சர்க்கரையில் 400 மிலி தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். 15 நிமிடம் தான் பாகுக்கான நேரம். உடனே இறக்கிவிட்டு, பொரித்து வைத்த ஜாமூன்களைப் போடவும்.
மிதமான தீயில், மிதமான சூட்டில்தான் எண்ணெய் காய வேண்டும்.
வேறு பட்சணங்கள் செய்த எண்ணெயில் ஜாமூன்களைப் பொரிக்கக் கூடாது.
காலா கண்ட்
தேவையான பொருட்கள்: பால்-2 லிட்டர், சர்க்கரை - 250 கிராம், ஏலக்காய்ப்பொடி-1/2டீஸ்பூன், ப.கற்பூரம் - ஒரு சிட்டிகை, தயிர்
1டீஸ்பூன்.
செய்முறை: அடிக்கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி பாதியாகச் சுண்டும் வரை அடிப்பிடிக்காமல் கொதிக்கவிடவும். பின் தயிரைச் சேர்த்துவிட்டு ஒரு நிமிடம் கழித்து சர்க்கரையைச் சேர்த்து கிளறிக் கொண்டே இருக்கவும்.
கெட்டியானவுடன் ப.கற்பூரம், ஏலக்காய்பொடி சேர்த்துக் கிளறி இறக்கிவிடவும்.
பக்குவம்
சர்க்கரையை சேர்ப்பதற்கு ஒரு நிமிடம் முன்புதான் தயிர் சேர்க்க வேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக