தேங்காய்ப்பால் வெஜிடபுள் கிரேவி
தேவையான பொருட்கள்: தேங்காய் /*மூடி, மிக்ஸ்ட் வெஜிடபுள். கப், வெங்காயம் ஒன்று, கசகசா ஒரு டீஸ்பூன், உடைச்ச கடலை ஒரு டீஸ்பூன், தக்காளி - 1, தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன், ப.மிளகாய் - 4, மிளகுப்பொடி - 2 டீஸ்பூன், பட்டை லவங்கப்பொடி 1/2 டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், எலுமிச்சம் பழ ஜூஸ் - சிறிதளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, லவங்கப் பொடி சேர்த்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளியை வதக்கவும். வெஜிடபுளையும் சேர்த்து நன்றாக வதக்கி இஞ்சிபூண்டு விழுதுடன் பச்சை மிளகாயையும் அரைத்து ஊற்றவும். மிளகுப் பொடி, தனியாத் தூள், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். பின்னர், தேங்காய், உடைச்சகடலை, கசகசா அரைத்து ஊற்றி கொதி வந்தவுடன் இறக்கி, எலுமிச்சை ஜூஸ் விடவும்.
டிப்ஸ் : எலுமிச்சை ஜூஸ் பரிமாறும்போது பிழிந்தால் படுஜோர்!
சோயாபாலக் பனீர்
தேவையான பொருட்கள்: சோயா சங்ஸ் - 100 கிராம், பனீர்-50 கிராம், புளிச்சகீரை-ஒரு கட்டு, மஞ்சள்தூள்- 1/2 டீஸ்பூன், மிளகுத்தூள்-ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள்- 1 டீஸ்பூன், எலுமிச்சம்பழம்- 1/2 மூடி, எண்ணெய்-2 டேபிள் ஸ்பூன், கரம்மசாலா-ஒரு டீஸ்பூன், வெங்காயம்-2, தக்காளி-2, உப்பு-தேவையான அளவு, கடுகு-ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: பிரஷர் பேனில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளியை வெட்டிப் போட்டு வதக்கவும். புளிச்சகீரையையும் சுத்தம் செய்து அதோடு சேர்த்து வதக்கவும். பின்னர் உப்பு, மஞ்சள்தூள், மிளகுத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேனை மூடிவிடவும். சோயாசங்ஸை சுடுதண்ணீரில் நனைத்து பின்னர் பிழிந்து தனியாக எடுத்துவைத்துக் கொள்ளவும். பனீரை வதக்கி வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து, பேனில் வெந்திருக்கும் கீரைக் கலவையையும் கொட்டி, சோயாசங்ஸ், பனீர் சேர்த்து ஒரு கொதிவிடவும். கொதிவந்தபின் கரம்மசாலா தூவி இறக்கிவிடவும்.
டிப்ஸ்: புளிச்சகீரை புளிப்பு என்றாலும்கூட தக்காளி சுவைக்காகவும், கிரேவி திக்காக வரவும், கட்டாயம் சேர்க்க வேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக