பாகல்
சப்ஜி
தேவையானவை: பெரிய சைஸ் பாகற்காய் 1, புளிக்கரைசல், மிளகாய்த்தூள் - தலா 4 டீஸ்பூன், மஞ்சள்தூள் - சிட்டிகை, வெல்லம் - சிறிய துண்டு, கடுகு, கறிவேப்பிலை. உப்பு, ஆகியன
செய்முறை: பாகற்காய் விதை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கவும் வணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் போக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், பாகற்காய் தூண்டுகள், மிளகாய்த்தூள், புளிக்கரைசல், வெல்லம், உப்பு சேர்த்து நன்றாக சுருள வதக்கி இறக்கவும்.
இந்த பாகல் சப்ஜி சப்பாத்தியுடன் பரிமாற ஏற்றது.
ஆப்பிள்-தயிர்ப் பச்சடி
தேவையானவை: தோல் நீக்கி பொடியாக நறுக்கிய ஆப்பிள் துண்டுகள் ஒரு கப், தயிர் - 2 கப், தேங்காய்த் துருவல் அரைக் கப் பச்சைமிளகாய் - 3, வெல்லக்கரைசல், எண்ணெய் தலா ஒரு டீஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை: தேங்காய்த்துருவலுடன் உப்பு,
நறுக்கிய பச்சைமிளகாய் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். தயிரை கெட்டியாக கடையவும். இதனுடன் அரைத்த விழுது, ஆப்பிள் துண்டுகள், வெல்லக்கரைசல் சேர்த்து கலக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, பச்சடியுடன் கலக்கவும். இந்தப் பச்சடியை ரொட்டி (அ) அடை வகைகளுக்கு சைட்-டிஷ்ஷாக பரிமாறலாம்
கருத்துகள்
கருத்துரையிடுக