தேவையானவை:
புழுங்கல் அரிசி, பொடியாக நறுக்கிய சாம்பார் வெங்காயம் - தலா 1 கப், துவரம் பருப்பு - தலா அரை கப், காய்ந்த மிளகாய் - 5, தனியா, கறிவேப்பிலை சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
புழுங்கல் அரிசி, துவரம் பருப்பு இரண்டையும் ஒன்றாக கழுவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் நீரை வடித்து அதனுடன் தனியா, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, உப்பு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். இந்த மாவை தோசை மாவு பதத்திற்கு கரைத்து 2 மணி நேரம் அப்படியே வைத்திருக்கவும். சூடான தோசைக் கல்லில் லேசாக எண்ணெய் தடவி, மாவை மெல்லிய தோசையாக வார்க்கவும். இருபுறமும் திருப்பிப் போட்டு மொறுமொறுப்பாக வெந்ததும் எடுக்கவும். தேங்காய் சட்னி (அ) கத்தரிக்காய் சட்னியுடன் பரிமாறவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக