புரோக்கோலி கட்லட்
தேவையானவை: நறுக்கிய புரோக்கோலி 2கப், நறுக்கிய வெங்காயம், தக்காளி தலா அரை கப், உருளைக்கிழங்கு 100 கிராம், உரித்த பூண்டு - 4 பல், பச்சைமிளகாய் 2,சோள மாவு - ஒரு டேபிள் ஸ்பூன், துருவிய சீஸ் - 2 டேபிள் ஸ்பூன், ரொட்டித்தூள், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல்
நீக்கி மசிக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், நறுக்கிய பூண்டு, தக்காளி, மசித்த உருளை சேர்த்து வதக்கவும். பின்னர் புரோக்கோலி துண்டுகள், உப்பு சேர்த்து லேசாக வதக்கி, சோள மாவை சிறிதளவு தண்ணீரில் கரைத்து ஊற்றி, சீஸ் துருவலைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். கலவை சுருண்டு வரும்போது, அடுப்பிலிருந்து இறக்கவும். ஆறியதும் வடை போல தட்டி, ரொட்டித்தூளில் புரட்டி எடுத்து, காய்ந்த தவாவில் போடவும். சுற்றிலும் எண்ணெய் விட்டு, இருபுறமும் திருப்பிப் போட்டு, பொன்னிறமானதும் எடுக்கவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக