தேவையானவை:
முருங்கைக்காய் - 1, சிறிய துண்டுகளாக நறுக்கிய மாங்காய் - கால் கப், பலாக்கொட்டை 5 தேங்காய்த்துருவல், வேகவைத்த துவரம் பருப்பு - தலா 1 கப், தேங்காய் எண்ணெய், கடுகு தலா 1 டீஸ்பூன், கருவடகம் டீஸ்பூன், பச்சை மிளகாய், காய்ந்த மிளக - தலா 2, கறிவேப்பிலை - சிறிதளவு, உ தேவையான அளவு.
செய்முறை:
முருங்கைக்காயை சிறிய துண்டுக நறுக்கிக் கொள்ளவும். பலாக்கொட்டையின் தோலை நீக்கி தட்டி, குக்கரில் போட்டு தனியார வேகவைத்துக் கொள்ளவும். பச்சைமிளகாய், தேங்காய்த்துருவலை ஒன்றாக சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். முருங்கைக்காய், மாங்காய் இரண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பு மஞ்சள்தூள் சேர்த்து வேக விடவும். பின்னர் பச்சைமிளகாய் - தேங்காய்த்துருவல் விழுது வேகவைத்த துவரம் பருப்பு, 2 கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும். வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, கருவடகம் சேர்த்து தாளித்து கொட்டி பரிமாறவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக