பனீர் கசடிலா
தேவையானவை: பரோட்டா 4. பனீர் துருவல் - ஒரு கப், பெரிய வெங்காயம், சின்ன சைஸ் தக்காளி - தலா ஒன்று, குடைமிளகாய் பாதியளவு, பூண்டு - 2, மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன், சீரகத்தூள், கரம் மசாலா - தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்துமல்லித்தழை 2 டீஸ்பூன், சீஸ் - 4 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை: எண்ணெய் சேர்க்காமல் பரோட்டாவை தோசைக்கல்லில் போட்டு, முக்கால் பதத்திற்கு சுட்டு எடுக்கவும். வாணலியில் எண்ணெயை காய வைத்து, உரித்த பூண்டைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்னர் நறுக்கிய
வெங்காயம் சேர்த்து சற்றே பொன்னிறமானதும் நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து 3 நிமிடம் வதக்கி, நறுக்கிய தக்காளி, மிளகாய்த்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பின்னர் பனீர் துருவலைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, கொத்துமல்லித்தழைத் தூவி இறக்கவும்.
கசடிலா செய்முறை: தோசைக்கல்லில் பரோட்டாவை போட்டு, அதன் மீது பனீர் கலவையை வைத்து, 2 டீஸ்பூன் சீஸை தூவவும். பின்னர் அதை மற்றொரு பரோட்டாவால் மூடி, சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் மொறுமொறுப்பாகவும் பொன்னிறமாகவும் மாறியதும் எடுக்கவும். பின்னர் பீட்ஸாவை போல துண்டுகளாக்கிப் பரிமாறவும்
பனீர் குருமா
அரைக்க: தேங்காய் - கால் கப், முந்திரி - 10, சோம்பு, கரம் மசாலா தலா அரை டீஸ்பூன், இஞ்சி - அரை இன்ச், பூண்டு 3 பல், சின்ன சைஸ் தக்காளி ஒன்று, தனியாத்தூள், மிளகாய்த்தூள் தலா ஒரு டீஸ்பூன் தேவையானவை: பனீர் - 200 கிராம், பெரிய வெங்காயம் ஒன்று, சோம்பு அரை டீஸ்பூன், கீறிய பச்சைமிளகாய் ஒன்று, கொத்துமல்லித்தழை - 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ளவற்றை மிக்ஸியில் போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு மையாக அரைக்கவும். பனீரை துண்டுகளாக்கி, வெந்நீரில் போட்டு மிருதுவாக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, சோம்பு, பச்சைமிளகாய் சேர்த்து வாசனை வரும் வரை வதக்கி, நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும். பின்னர் பனீர் துண்டுகளைச் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு, கொத்துமல்லித்தழைத் தூவி பரிமாறவும்.
குறிப்பு: தோசைக்கு ஏற்ற குருமா இது!
பனீர் இடியப்பம்
தேவையானவை: பனீர் துருவல் 100 கிராம், இடியாப்பம் இரண்டரை கப், வெங்காயம், தக்காளி - தலா 2, தனியாத்தாள், மிளகாய்த்தூள் தலா ஒரு டீஸ்பூன், மஞ் சந்தாள் - கால் டீஸ்பூன், கரம் மசாலா அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: கடுகு, சீரகம் தலா அரை டீஸ்பூன், பச்சைமிளகாய் - ஒன்று, கறிவேப்பிலை ஒரு கொத்து,
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகை பொரிய விடவும். பின்னர் சீரகம், கீறிய பச்சைமிளகாய்,
கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பச்சைமிளகாய் சற்றே நிறம் மாறியதும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்னர் நறுக்கிய தக்காளி, மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலா, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, தக்காளியின் பச்சை வாசனை போகும் வரை வதக்கி, பனீர் துருவலைச் சேர்க்கவும். பின்னர் இடியாப்பத்தைச் சேர்த்து நன்றாகக் கலந்து இறக்கி, கொத்துமல்லித்தழைத் தூவி, சூடாக பரிமாறவும்.
குறிப்பு: வேக வைத்த பட்டாணியையே கார்னையோ ஒரு கைப்பிடியளவு சேர்க்கலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக