பீஸ் மசாலா
தேவையான பொருட்கள்: பச்சைப்பட்டாணி ஒரு கப், தக்காளி-3," வெங்காயம்-3, மஞ்சள்தூள்-/2 டீஸ்பூன், மிளகாய்த்தூள்-ஒரு டீஸ்பூன், கரம் மசாலா-ஒரு டீஸ்பூன், பட்டை-2, லவங்கம்-2, கொத்துமல்லித்தழை-ஒரு கைப்பிடி, உப்பு-தேவையான அளவு, எண்ணெய்-தாளிக்க.
செய்முறை: வெங்காயம், தக்காளி இரண்டையும் தனித்தனியாக அரைத்து விழுதாக வைத்துக்கொள்ளவும். ப்ரஷர்பேனில் எண்ணெய்விட்டு பட்டை லவங்கம் தாளிக்கவும். பச்சைப்பட்டாணியையும் பேனில்போட்டு நன்கு வதக்கி மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு, வெங்காய விழுது சேர்த்து மீண்டும் வதக்கவும். அரை டம்ளர் தண்ணீர் விட்டு பேனை மூடி வேக விடவும். பத்து நிமிடம் கழித்து பேனைத் திறந்து தக்காளி விழுதைச் சேர்த்து கொதிக்க விடவும். கிரேவி திக்கானவுடன் கரம்மசாலா தூவி இறக்கி, கொத்துமல்லித் தழை தூவவும்.
டிப்ஸ் : தக்காளி விழுதை கடைசியில் சேர்த்தால்தான் ருசி
பிந்தி ஸ்டஃப்டு மசாலா
தேவையான பொருட்கள்: வெண்டைக்காய் - 1/4 கிலோ, மாங்காய்ப்பொடி 2 டீஸ்பூன், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், தயிர் ஒரு கப், சாட்மசாலா - ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.
செய்முறை: வெண்டைக்காயை கீறிவிட்டு, மாங்காய்ப்பொடி, மிளகுத்தூள், உப்பு சேர்த்து வெண்டைக்காயின் உள் ஸ்டஃப் செய்யவும். கடாயில் எண்ணெய் ஊற்றி வதக்கி இட்லிப் பாத்திரத்தில், இட்லித் தட்டில் வைத்து ஆவியில் வேகவைக்கவும். தயிரை இரவே துணியில் கட்டித் தொங்கவிட்டு, நீரை வடிக்கவும். வெண்டைக்காய் வெந்தவுடன், தயிரில் சாட்மசாலா, உப்பு, மிளகுத்தூள் போட்டு மிக்ஸியில் அடித்து வெண்டைக்காயுடன் கலக்கவும்.
டிப்ஸ்: வெண்டைக்காயின் விதைகளை நீக்க வேண்டும் என்ற அவசியமில்லை.!
கருத்துகள்
கருத்துரையிடுக